ஏழை மக்களின் துயர்துடைக்கும் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

ஏழை மக்களின் துயர்துடைக்கும்

நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

தோப்புத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிரமாங்களில் அடிப்படை வசதிக்கு கூட வழியில்லாத ஏழை எளியவர்களுக்கு உதவும் விதமாகமாகவும் அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் பங்கெடுத்து அதை நிவர்த்தி செய்யும் விதமாக தர்மம் என்ற பெயரால் வீட்டுவாசல்களில் நாளுக்கு நாள் மிஸ்கீன்கள் பெருகிவரும் அவல நிலையை போக்கும் விதமாகவும், ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என்பது நமதூர் மக்களின் எண்ணமாக இருந்து வந்தது.

இந்த உன்னத எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக கடந்த 13.08.2005 சனிக்கிழமை அன்று மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகத்தில் வைத்து அலோசனை செய்யப்பட்டு “அல் பத்தாஹ் உதவும் அமைப்பு” (பைத்துல்மால்) என்ற பெயரில் ஓர் அமைப்பு அல்லஹ் மாபெறும் கிருபையால் துவங்கப்பட்டது. ( அல் ஹம்துலில்லாஹ் )

அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள் :

  • ஏழை,எளியவர்கள் (யாசிப்போர்கள்) இவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக தர்மங்களை முறைப்படுத்துதல்.
  • வட்டி கொடுமைகளிலிருந்து சமுதாயத்தை பாதுகாத்தல்.
  • இயற்கை சீற்றம் மற்றும் பேரழிவுகளினால் பாதிக்கப் பட்டோருக்கு மத,இன பேதமின்றி உதவிக்கரம் நீட்டுதல்.
  • ஏழைகளின் ஜனாஸா செலவுக்கு உதவி செய்தல்.
  • ஏழை,எளிய சிறுவர்களின் கத்னா( சுன்னத்) செலவுக்கு உதவுதல்.
  • ஏழை,எளிய மாணவர்களின் உலக மற்றும் மார்க்க கல்விக்கு உதவி செய்தல்.
  • விதவைகள் மற்றும் கைவிடப்பட்டோர்களுக்கு அடிப்படை தேவைக்காக சிறிய தொகையை மாதம்தோறும் அளித்தல்.
  • ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உணவு வகைக்கு உதவிச் செய்தல்.
  • வசதியற்றவர்களின் பழுது அடைந்த கூரை வீடுகளை செப்பனிடுதல்.
  • மருத்துவ முகாம் அமைத்து ஏழை,எளியவர்களுக்கு இலவச மருத்துவம் செய்தல்.
  • இரத்ததான முகாம் அமைத்து அவசர நிலைக்கு உதவி செய்தல்.
  • பிரயாணத்தில் உடைமைகளை இழந்து பரிதவிப்பவருக்கு பிரயாண செலவுக்கு உதவி செய்தல்.

இவ்வாறான உன்னத உயரிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு அமைப்பு துவங்கபட்டது, துவங்கப்பட்ட நாள்முதல் பல சேவைகளை செய்து வருகிறது.

ஏழை மக்களின் துயர்துடைக்கும் இ ந் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

———————————————————————————————-

அல் பத்தாஹ் உதவும் அமைப்பு ( பைத்துல்மால் )
மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகம்,
109/1,மர்க்கஸ் தெரு,தேத்தாகுடி தெற்கு,
தோப்புத்துறை, நாகை மாவட்டம்
போன்: 04369 316155,99947 60816

அமீரகத்தில் தொடர்புக்கு…

+971 50 8813666, +971 50 5504525

————————————————————————————————

திருமணங்களில் பெருகி வரும் டிஜிட்டல் கட்-அவுட் கலாச்சரம்

திருமணங்களில் பெருகி வரும் டிஜிட்டல் கட்-அவுட் கலாச்சரம்

சமிப காலமாக திருமணம் மற்றும் வீட்டு வைபவங்களில் ” டிஜிட்டல் போர்டு கலாச்சாரம் பெருகி வருகிறது, திருமணம் நிகழ்ச்சிகளில் குதிரை ஆட்டம் மற்றும் இன்னிசை கச்சேரியுடன் ஊர்வலங்கள் சில ஆண்டுகளுக்கு முன் குறைந்து வந்த நிலையில் சில மாதங்களாக மீண்டும் அரங்கேற்றமாகி வருகிறது, அதனை தொடர்ந்து டிஜிட்டல் போர்டு கலாச்சாரமும் அரங்கேற்றி வருகிறது, ஒரு காலத்தில் பூ மாலை மற்றும் பைத்து சபா இல்லாத திருமணத்தை காண இயலாது அதுபோல் இக்காலத்தில் டிஜிட்டல் போர்ட் இல்லாத திருமணத்தை காண முடியவில்லை,இதில் போட்டி போடும் அளவிற்கு (சைஸிலும்…) அதிகமாகி வருகிறது, மற்றொரு சாராரோ ஆடம்பரம் என்ற பெயரில் திருமணம் என்னும் எளிய ஒப்பந்தத்தை திருவிழாவாக மாற்றி பணத்தை தண்ணீராக வீண்விரயம் செய்கின்றனர்.

இன்றைக்கு, குழந்தை பிறந்த விழா, பெண் பூப்பெய்க்கும் போது எடுக்கப்படும் விழா, கத்னா செய்யும் போது செய்யப்படும் அனாச்சாரங்கள் முதல் திருமண தடபுடல் விரயங்கள் வரை அனைத்திலும் நம்முடைய சமுதாய மக்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

எனவே வல்ல அல்லாஹ் அருளியதைக் கொண்டு மன நிறைவு கொண்டு, மேலும் பொருளாதார வளத்திற்காக அவனிடமே மன்றாடி, அவன் காட்டித் தந்த வழியில் நம்முடைய பொருளாதாரங்களைச் செலவழித்தால் வாழ்க்கை பூந்தோட்டமாக அமையும், இன்ஷா அல்லாஹ். அதற்கான பாக்கியத்தை வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள்வானாக!

———————————————————————————————–
(இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். எனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அளவு கடந்து (வீண்) செலவு செய்வோரை நேசிப்பதில்லை. (அல்குர்அன்)
———————————————————————————————-
அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும், நாம் அதிலுள்ள அனைத்தையும் நிச்சயமாக (ஒருநாள்) அழித்துப் பாலைநிலமாக்கி விடுவோம். (அல்-குர்ஆன் 018:007-008)
——————————————————————————————

கல்வியை தொடர உதவி செய்வீர்…

திருவாரூர் மாவட்டம், கடியச்சேரி – பள்ளங்கோவில் என்ற கிராமத்தை சேர்ந்த மாணவர். என்.ஷேக் தவூத் என்ற மணவர் திருச்சியில் எம்.ஐ.ஈ.டி என்ற கல்லூரியில் பி.இ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார், இவரது குடும்பத்தினர் மூன்றாம் ஆண்டிற்கான கட்டணத்தை செலுத்த முடியாமால் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள், இம் மாணவரின் கல்வி தொடர உதவிச் செய்வீர்,

மேலும் தொடர்புக்கு.. ஆதம்.ஆரிபின்,தோப்புத்துறை – 9003329412