Showing posts with label மர்கஸ். Show all posts
Showing posts with label மர்கஸ். Show all posts

ஏழை மக்களின் துயர்துடைக்கும் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

ஏழை மக்களின் துயர்துடைக்கும்

நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

தோப்புத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிரமாங்களில் அடிப்படை வசதிக்கு கூட வழியில்லாத ஏழை எளியவர்களுக்கு உதவும் விதமாகமாகவும் அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் பங்கெடுத்து அதை நிவர்த்தி செய்யும் விதமாக தர்மம் என்ற பெயரால் வீட்டுவாசல்களில் நாளுக்கு நாள் மிஸ்கீன்கள் பெருகிவரும் அவல நிலையை போக்கும் விதமாகவும், ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என்பது நமதூர் மக்களின் எண்ணமாக இருந்து வந்தது.

இந்த உன்னத எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக கடந்த 13.08.2005 சனிக்கிழமை அன்று மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகத்தில் வைத்து அலோசனை செய்யப்பட்டு “அல் பத்தாஹ் உதவும் அமைப்பு” (பைத்துல்மால்) என்ற பெயரில் ஓர் அமைப்பு அல்லஹ் மாபெறும் கிருபையால் துவங்கப்பட்டது. ( அல் ஹம்துலில்லாஹ் )

அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள் :

  • ஏழை,எளியவர்கள் (யாசிப்போர்கள்) இவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக தர்மங்களை முறைப்படுத்துதல்.
  • வட்டி கொடுமைகளிலிருந்து சமுதாயத்தை பாதுகாத்தல்.
  • இயற்கை சீற்றம் மற்றும் பேரழிவுகளினால் பாதிக்கப் பட்டோருக்கு மத,இன பேதமின்றி உதவிக்கரம் நீட்டுதல்.
  • ஏழைகளின் ஜனாஸா செலவுக்கு உதவி செய்தல்.
  • ஏழை,எளிய சிறுவர்களின் கத்னா( சுன்னத்) செலவுக்கு உதவுதல்.
  • ஏழை,எளிய மாணவர்களின் உலக மற்றும் மார்க்க கல்விக்கு உதவி செய்தல்.
  • விதவைகள் மற்றும் கைவிடப்பட்டோர்களுக்கு அடிப்படை தேவைக்காக சிறிய தொகையை மாதம்தோறும் அளித்தல்.
  • ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உணவு வகைக்கு உதவிச் செய்தல்.
  • வசதியற்றவர்களின் பழுது அடைந்த கூரை வீடுகளை செப்பனிடுதல்.
  • மருத்துவ முகாம் அமைத்து ஏழை,எளியவர்களுக்கு இலவச மருத்துவம் செய்தல்.
  • இரத்ததான முகாம் அமைத்து அவசர நிலைக்கு உதவி செய்தல்.
  • பிரயாணத்தில் உடைமைகளை இழந்து பரிதவிப்பவருக்கு பிரயாண செலவுக்கு உதவி செய்தல்.

இவ்வாறான உன்னத உயரிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு அமைப்பு துவங்கபட்டது, துவங்கப்பட்ட நாள்முதல் பல சேவைகளை செய்து வருகிறது.

ஏழை மக்களின் துயர்துடைக்கும் இ ந் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

———————————————————————————————-

அல் பத்தாஹ் உதவும் அமைப்பு ( பைத்துல்மால் )
மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகம்,
109/1,மர்க்கஸ் தெரு,தேத்தாகுடி தெற்கு,
தோப்புத்துறை, நாகை மாவட்டம்
போன்: 04369 316155,99947 60816

அமீரகத்தில் தொடர்புக்கு…

+971 50 8813666, +971 50 5504525

————————————————————————————————

வெற்றியை நோக்கி விரைந்து வாருங்கள்!!!

அல்லாஹ்வின் திருபெயரால்...

வெற்றியை நோக்கி விரைந்து வாருங்கள்!!!


மாபெரும் இசுலாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

இடம் : ஹத்திப் தெரு சந்திப்பு,

தோப்புத்துறை, நாகை மாவட்டம்

நாள்: 11 - 04 - 20009, சனிக்கிழமை,

நேரம் : மாலை 6.30 மணியளவில்

சிறப்புரையளர்கள் :
மவுலவி. எம்.முஹம்மது யூசுப் மிசுபாயி,
தொண்டி கலந்தர் அபூபக்கர் யூசுபி,
மற்றும்
அப்சலுல் உலமா முஹம்மது இசுமாயில் நூரி,

இன்சா அல்லாஹ்...
மாலை 6.30 முதல் இஷா வரை
மதரசா மாணவ,மாணவியவர் நிகழ்ச்சி
நடைப்பெறும்

மேலும் விபரங்களுக்கு...
ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

தோப்புத்துறை- Mobile : 9994760816 / 9003329412

தோப்புத்துறையில் இஸ்லாமிய பெண்கள் அரபிக் கல்லூரி

தோப்புத்துறையில் இஸ்லாமிய பெண்கள் அரபிக் கல்லூரி



















நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை யில் மர்கஸ் தெருவில் அமைத்துள்ளது மஸ்ஜிதுல் முஸ்லிமீன் ( மர்கஸ் பள்ளி ), இந்த மர்கசில் ங்கால தொழுகை நடப்பதோடு இஸ்லாமிய பெண்களுக்கு மார்க்கக் கல்வியை போதிப்பதற்காக இங்கு சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்க பட்டது தான் "அஸ் சலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரி "

இதில் குர்-ஆன், ஹதீஸ் அடிப்படையில் வகுப்புகள் நடத்த படுகிறது, உள்ளுரைச் சார்ந்த மாணவிகள் தற்போது பயின்று வருகிறார்க
ள்,இந்த கல்லுரியை உள்ளூர் ஜாக் ஜமாஅத் -தை சார்ந்தவர்கள் நிர்வகித்து வருகிறார்கள்,இங்கு ஹாஸ்டல் வசதி கிடையாது,

இக்கல்லுரியை விரிவு படுத்தவும் மற்றும் கல்வியை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

---------------------------------------------------------------------------------
சமுதாயம் . ப்ளோக் ஷ்போட்.காம் -
.: இது நம்ம சமுதயம் :.

தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்ப

தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்பு


துபாயில் ஜாக் தலைமை நிலைய நிர்வாகிகளுடன் தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்பு - புகைப்படங்கள்









ஜாக் தலைவர் எஸ்.கே.கமாலுதீன் மதனி'யுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள் ஹஜாதீன் , அப்துல் அஜீஸ் ,ஜெகபர் அலி மற்றும் உறுப்பினர்கள் .



கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் அமீர் அப்துல் அஜீஸ் பேசியபோது...




அரபு அமீரக ஜாக் அமீர் ஷைகு . இக்பால் மதனியுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்




கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்


News from

http://samuthayam.blogspot.com

"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" - JAQH

ஜாக்' என்று தமிழ் பேசும் மக்களிடம் சுருக்கமாக அறிமுகமாகி இருக்கும்

"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" என்ற அமைப்புதுவங்கப்பட்டு இருபது ஆண்டுகளாக இஸ்லாமிய மார்க்கத்தைஅதன் தூய வடிவில் ஜாதி பேதமின்றி அனைத்து மக்களுக்கும்அறிமுகபடுத்திக் கொண்டும் , அழைப்பு பணியிலும் கல்விபணியிலும் மற்றும் சமுக பணியிலும் அயராது பாடுபட்டுவருகிறது.


கடந்த ஒரு மாத காலமாக அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தனதுஅமைப்பின் கிளையை முறைப்படி ஆரம்பித்துள்ளது, அல் ஹம்துலில்லா... இதன்தொடர்ச்சியாக கடந்த 16-05-2008 வெள்ளிகிழமை அன்று துபாயில் தாயக அமீர் எஸ்கே .கமாலுதீன் மதனி அவர்கள் தலைமையில் அமீரக செயற்குழு கூட்டம்நடைபெற்றது, கூட்டத்தில் ஒட்டு மொத்த அமீரக நிர்வாகம் தேர்ந்தெடுக்க பட்டது,
.
தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம்

இன்சா அல்லாஹ்... அல் ஜன்னத் மாத இதழில் விரைவில் வெளிவரும்...

---------------------------------------------------------------------------------------------------------------

"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்"

குர்ஆன் சுன்னாவை அடிப்படையாகக் கொண்ட தமிழகத்தின் முதன்மையான தவ்ஹீத் அமைப்பு

இந்த அமைப்பு - குழம்பிய குட்டை அல்ல...
சமுத்திரம்... மாபெரும் சமுத்திரம்...

ஆர்ப்பரிக்கும் அலைகள் இல்லாத அமைதியான சமுத்திரம்...

ஆள் பலம் காட்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் அல்ல..
இஸ்லாமிய பணி செய்து இறைவனின் அன்பை பெறுவதே நோக்கம்...
காகித பூக்கள் மீது வாசனை தெளித்து, வார்த்தை ஜாலங்களால்...இஸ்லாத்தின்பெயர்கூறி வியாபாரம் செய்வதல்ல நோக்கம்...

இஸ்லாமிய கோட்பாடுகளை, அதன் தூய வடிவில் இவ்வுலகிற்கு உணர்த்துவதேநோக்கம்...

தமிழகம் முழுவதும் எழுபதுக்கும் மேற்ப்பட்ட மர்கஸ்கள்,
கல்விநிறுவனங்கள்,அனாதை இல்லம் என்று நிருவாகிக்கும் தனித்தன்மை...

இவைகள் அனைத்தும் பெரும் புகழ் பெறுவதற்க்கில்லை...

இவைகளை காட்டி லாபம் அடைய பணம் வசூலிப்பதற்காக நடத்தபடுபவை இல்லை...
புனிதமான நோக்கம், அது இறைவனின் அன்பை பெறுவதே...


சகோதரர்களே...
ஜாக் அமைப்பில் இணையுங்கள்...தன்னலமற்ற ஒரு சேவைக்கு தயார் ஆகுங்கள்...

அன்புடன்
தோப்புத்துறை - ஹாஜதீன்

JAQH அமீரக செயற்குழு கூட்டம் - துபாய்

"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
அமீரக செயற்குழு கூட்டம் -துபாய்







News.... Coming Sooon....

புனித ஹஜ் பயணம் 2008 : விண்ணப்பம் வழங்கல்

தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2008 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்
நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ்-2008 ஆம் ஆண்டிற்கான ஹஜ் விண்ணப்பங்கள்
மற்றும் அச்சடிக்கப்பட்ட வழிமுறைகளை, சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள
தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து விண்ணப்பம் ஒன்றுக்கு சேவைக்கட்டணம் ரூ.100/- வீதம் சென்னையில் மாற்றக்கூடிய வகையில் 'தமிழ்நாடு மாநில ஹஜ் குழு'
பெயரில் கேட்பு வரைவோலை/பணக்கொடுப்பாணை கொடுத்து 1-5-2008 முதல் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் கோரும் கோரிக்கைகளை,
விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ற்கான வரைவோலையுடன் (டிமாண்ட் டிராப்ட்) சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். வழிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ஆறு விண்ணப்பங்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் நபரொன்றுக்கு, அந்நியச் செலாவணி முன்பணம் மற்றும் பலவகைக் கட்டணங்களுக்காக
ரூ.10,700/-(ரூபாய் பத்தாயிரத்து எழுநூறு மட்டும்)-ஐ பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.30361856116-ல் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும். பூர்த்தி செடீநுயப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய கடைசி நாள் 31-5-2008 ஆகும்.
3. புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள், கோரிக்கை மனுவுடன் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ஐ வரைவோலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தி, நேரடியாகவோ அல்லது
தபால் மூலமாகவோ விரைந்து அனுப்பி விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும்,அவற்றை கடைசி தேதிக்கு முன்னர் சமர்ப்பித்து விண்ணப்பங்கள் உறுதி செலுத்துவதில் ஏற்படும்
சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


ஹஜ்-1.57 லட்சம் இந்திய யாத்ரீகர்களுக்கு அனுமதி!

ஹஜ்-1.57 லட்சம் இந்திய யாத்ரீகர்களுக்கு அனுமதி! இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1.57 யாத்ரீகர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள செளதி அரேபிய அரசு அனுமதித்துள்ளது.சௌதி அரேபியாவின் ஹஜ் துறை அமைச்சர் டாக்டர். ஃபுவாத் அல்ஃபார்சியும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமதும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் அகமத் பேசுகையில், இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1,57,000 யாத்ரீகர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள சௌதி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கூடுதலாக 15,000 யாத்ரீகர்களை அனுமதிக்குமாறு கோரியுள்ளோம். அதற்கும் அனேகமாக ஒப்புதல் கிடைத்துவிடும்.1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்ரீகர்களும் மீதி இடங்கள் தனியார் முகவர்கள் மூலம் வருபவர்களுக்கும் ஒதுக்கப்படும்.மெக்காவின் புனிதப் பள்ளி விரிவாக்கப் பணிகள் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்ரீகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.யாத்ரீகர்களுக்கான இருப்பிடங்கள் இந்த ஆண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. புனிதப் பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் 'பச்சை' பகுதி என்றும், 1 முதல் 6 கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் 'வெள்ளை' பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி 'அசிசியா' பகுதி என்றும் குறிப்பிடப்படும்.இதில் பச்சை வகைப் பகுதிக்கு யாத்ரீகர்களிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளை வகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸா அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் பகுதி எல்லைக்குள்ளேயே இருக்கும்.கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகளை முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.இந்த சந்திப்பின்போது சௌதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும், துணைத் தூதர் டாக்டர். அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர்.

அண்ணன் மாநாடோ இரண்டுநாட்கள் எஸ்டிமேட் இரண்டு கோடி ....

சென்னையிலே பீஸ் கான்பிரன்ஸ் பத்து நாட்கள் பல நாட்டு ஸ்காலர்ஸ் உரைகள் பல லட்சம் மக்கள்கள் வந்தாங்க, பல பேர் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்கள், பல்வேறு அரங்குகள்... பல்வேறு வகுப்புக்கள்... இஸ்லாமிக் பொருட்கள் விற்பனை அரசு அதிகாரிகள் உட்பட அனைவரையும் பிரமிக்க வைத்த நிகழ்வு...அந்த பத்து நாட்கள்... இத்தனை விரும்பாத அண்ணன் பி ஜே இதற்கு இணையாக தஞ்சாவூரில் இரண்டு நாட்கள் மாநாடு நடத்துகிறார், சிந்தியுங்கள் ... பீஸ் மாநாடு பத்து நாட்கள் செலவு ஒன்றரை கோடி ஆனால் அண்ணன் மாநாடோ இரண்டுநாட்கள் எஸ்டிமேட் இரண்டு கோடி .... சிந்திப்பீர்...மார்க்கத்தை வைத்து வியாபாரம் செய்யும் முதலைகளை அடையாளம் கண்டு கொள்வீர்... - ஹமீது, சென்னை

அமீரக JAQH புதிய நிர்வாகிகள்

துபையில் JAQH புதிய நிர்வாகிகள்

தலைவர் : இஜாஸ் அஹ்மது கீழக்கரை

துணைத்தலைவர் : அப்துல் அஜீஸ் , தோப்புத்துறை

செயலாளர் : கோவை சிராஜ்

துணைச்செயலாள்ர் : முஹம்மது இஸ்மாயீல், தென்காசி

பொருளாளர் : முஹம்மது சுலைமான்



அபுதாபி JAQH புதிய நிர்வாகிகள்

தலைவர் : முஹைதீன் , தென்காசி

துணைத்தலைவர் : யூசுப் , கோவை

செயலாளர் : பைஸல் பிர்தவ்ஸி , திருவை

துணைத்தலைவர் : ஷரீப் , கோட்டாறு

பொருளாளர : முஹம்மது , ஏறுவடி

ஐகோடு பொறுப்பாளர் : உமர் , பொதக்குடி

பன்யாஸ் பொறுப்பாளர் :டி. சி. முஜாஹித், திருச்சி


ஷார்ஜாவில் JAQH புதிய நிர்வாகிகள்

தலைவர் : நஜ்முத்தீன், அத்திக்கடை ,

துணைத்தலைவர் : பொறியாளர் இஸ்ஹாக், கோட்டாறு,

செயலாளர் : அப்துர்ரஹ்மான், திருச்சி,

துணைச்செயலாளர் : கலீலுர்ரஹ்மான், மேலப்பாளயம்,

பொருளாளர் : இல்யாஸ் , மதுக்கூர் ,