அமீரகத்தில் ஈத் மிலன்


குவைத்தில் சமூக நீதி கருத்தரங்கம்

இறைவனின் திருப்பெயரால்...

சமூக நீதி கருத்தரங்கம்

குவைத் தமிழ் தோழமை அமைப்புக்களின் ஆதரவுடன் !
குவைத் தமிழர்கள் விழிப்புணர்வின் ஒரு மைல் கல்லாக !!
ஃபாஸிஸ, பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்க !!!
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் ஒற்றுமைக்காக !!!!
­­­
நாள்: ஜனவரி 1, 2009 நேரம்: மாலை 5:15
இடம்: ஜம்இய்யது இஸ்லாஹ் அரங்கம், ரவ்தா – குவைத்

தலைமை: தொழிலதிபர் A.சுலைமான் பாட்ஷா
(உரிமையாளர், லக்கி ப்ரிண்டர்ஸ், குவைத்)

சிறப்புரையாளர்கள்:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை)
தலைப்பு: சமைப்போம் சகோதரத்துவம் வாரீர் வாரீர் !!

சகோ.M.தமீமுன் அன்ஸாரி M.B.A.
(மாநில செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்)
தலைப்பு: தீவிரவாதமும் பயங்கரவாதமும் - நிழலும் நிஜமும்

நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC), குவைத்
23925612 / 99619827 / 66412875 / 97358846 / 22470159

அறிவமுதம் பருக தமிழர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!
குறிப்பு: For Women Special Place ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஃபஹாஹீல், மங்காஃப், அபூஹலிஃபா, மஹ்பூலா மற்றும் சிட்டி பகுதிகளிலிருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது

கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்

கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்

கோவை டிசம்பர்- 27
சிறையில் கைதிகளுக்கு பரோல் என்பது ஒரு மனிதவுரிமை. ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. மதசார்பற்ற கொள்கைக்கு வேட்டு வைப்பது போல், கோவை சிறை அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். உதாரணம் : சுல்தான் மீரான் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைபெற்று ஐந்து வருடங்களாக சிறையில் இருக்கும் பூரிகமல், ராஜேஷ் போன்ற இந்து பாசிஸ குற்றவாளிகளுக்கு வழிக்காவல் கூட இல்லாமல் மூன்று நாட்கள் வரை பரோல் போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் 11 வருடங்களாக தன் குடும்பத்தாரை பிரிந்து சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு அவர்களின் குடும்பத்தார்கள் மரணமடைந்தால் சில மணி நேரம் பலத்த போலீஸ் காவலுடன் பரோல் கொடுக்கப்படுகின்றது. இது முஸ்லிம் கைதிகளுக்கு அளிக்கும் ஒரு வெளிப்படையான அநீதியாகும். இது தொடர்பாக சம்சுதீன் என்ற சிறைவாசி 24.12.2008 அன்று முதல் எங்களுக்கும் சம நீதி வேண்டும் என சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரின் தொடர் உண்ணாவிரதத்தின் காரணமாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் குடும்பத்தாருக்கு கூட நேர்காணலில் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக அவரின் மனைவி ஆரிபா மற்றும் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகிகள் இன்று (26.12.2008) கோவை மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து இவ்விஷயத்தில் சமநீதி கிடைத்திட வழிவகை செய்ய ஆவண செய்யுமாறு மனு அளித்துள்ளனர். சம நீதி கிடைக்குமா?
தமிழக முதல்வர்க்கு சிறைவாசியின் மனைவி கடிதம்
ஆரிபா ஆல் அமீன் காலனி3-வது வீதி, தெற்கு உக்கடம் கோவை
– 641001
பெறுநர்
திரு. தமிழக முதலமைச்சர் அவர்கள்
கோட்டைசென்னை
ஐயா,
என்னுடைய கணவர் ஷம்சுதீன். கடந்த பதினொரு ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். நானும் கடந்த பதினொரு ஆண்டுகளாக என்னுடைய கணவரை நேர்காணலில் சென்று சந்தித்துக் கொண்டுள்ளேன். ஆனால், இன்று 26.12.2008 அன்று மத்திய சிறைக்கு நேர் காணலுக்கு சென்ற பொது அங்கிருந்த சிறை அதிகாரிகள் என்னுடைய கணவர் ஷம்சுதீன் நான்கு நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்றார். தற்போது அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை நேர்க்காணல் காண முடியாது என்று கூறிவிட்;டார்கள்.
ஐயா, என்னுடைய கணவர் எதற்காக உண்ணாவிரதம் இருக்கின்றார். அவரின் உடல்நிலை எப்படி உள்ளது என்ற எந்த விபரமும் கூறவில்லை. ஆதனால் ஐயா, அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் மூலம் என்னுடைய கணவரின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆரிபா
கணவர் பெயர் சம்சுதீன்
கோவை
செய்தி: கோவை தங்கப்பா
மீடியா வாய்ஸ்

இஸ்லாமிய மாநாடு & கண்காட்சி



த.மு.மு.க சவூதி கிழக்கு மண்டலம் சிறப்பு வாய்ந்த பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

கடந்த வெள்ளிக்கிழமை 12.12.2008 அன்று த.மு.மு.க கிழக்கு மண்டலம் சிறப்பு வாய்ந்த பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு சகோ.அப்துல் காதர் (மண்டலத் துணைத் தலைவர்) தலைமை தாங்கினார். இந்நிகழ்சியில் தம்மாம், அல்-கோபர், ஜுபைல், அப்கேக் உள்ளிட்ட கிழக்கு மண்டல த.மு.மு.க சகோதரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்சியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தப்பட்டன, இதை சகோ.இம்தியாஸ் சிறப்பாக நடத்திக் கொடுத்தார். இந்த பெருநாள் சந்திப்பு நிகழ்சியின் சிறப்பம்சம் என்னவென்றால் எத்துனை பேர்கள் வந்தாலும் எதிர்த்து நிற்கும் வீரனைவிட தன் விலைமதிப்பில்லா கருத்தை தயங்காமல் மேடையேறிச் சொல்பவனே சிறந்தவன் என்ற வாக்கிற்கேற்ப நிகழ்சியில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு மேடைக் கூச்சத்தைப் போக்க பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதனை சகோ.அப்துல் அலிம் திறம்பட நடத்திக் கொடுத்தார்.

மேலும் பெரியவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களில்லை என்பதை எதிர்கால த.மு.மு.கவின் கண்மணிகள் மேடையேரி தங்களின் மழலை மொழியில் கிராத் மற்றும் த.மு.மு.கவின் கொள்கைப் பாடல்களைப் பாடிய போது அங்கிருந்த சகோதரர்கள் அகமகிழ்ததை அவர்களின் முகங்களில் காண முடிந்தது.

தங்களின் பிள்ளைகளை பிரிந்து வாழும் சகாதரர்கள் தம் பிள்ளைகளின் மழலைப் பேச்சைக் கேட்க முடியாவிட்டலும் நம் சகோதரர்களின் பிள்ளைகளை பார்த்து பரவசமடைந்தது அவர்களின் கண்கள் குளமானதிலிருந்து அறிய முடிந்தது. இந்நிகழ்சியை சகோ.சகோ.இஸ்மாயில் (மண்டல பொதுச் செயலாளர்) செம்மையாக நடத்திக் கொடுத்தார்.

மௌலவி ஷரீப் பாக்கவி அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள், பெருநாள் விடுமுறையில் இஸ்லாத்திற்கு புறம்பான விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்த்து விட்டு இது போன்ற பெருநாள் நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதை தனது உரையில் சுட்டிக்காட்டி ஏற்பாட்டாளர்களை பாராட்டினார்.

கிழக்கு மண்டல மீடியா சார்பாக டிச.6 இரயில் மறியல் ஏன் என்று டாக்டர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பேசிய சி.டி திரையிடப்பட்டது பிறகு சகோ.அப்துல்காதர் (மண்டலத் துணைத் தலைவர்) டிச.6 தடையை மீறி நடந்த இரயில் மறியல் சமந்தமாக விளக்கிக் கூறினார்.



கிழக்கு பிராந்தியத்தில் முதல்முறையாக தமுமுக நிகழ்ச்சியில் பெண்கள் சிறுவர்கள் அனைவரும் கலந்து கொண்டதால் பெண்கள் பகுதியில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கு கொண்ட அனைத்து சகோதரிகளும் வெகுவாக அதனை வரவேற்றார்கள்.

பெண்கள் மத்தியில் தமுமுகவின் தேவையையும் அதன் சேவைகளையும் சகோதரி மரியம் அப்துல் காதர் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இறுதியில் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சகோ.சர்புதீன் (மண்டத் துணைச் பொதுச் செயலாளர்) மற்றும் சகோ.முஸ்தபா ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். முடிவில் சகோ.நஸ்ருத்தீன் (மண்டல பொருளாளர்) நன்றியுரை ஆற்றி நிகழ்சியை அற்புதமாக முடித்துக் கொடுத்தர்.

தங்களின் குடும்பங்களையும் உற்றார் உறவினர்களையும் பிரிந்து வாழும் நம் சகோதரர்கள் இது போன்ற நிகழ்சிகளில் கலந்து கொண்டு அன்புடனும் பாசத்துடனும் சக சகோதரர்களுடன் பழக வாய்ப்பளித்த கிழக்கு மண்டல த.மு.மு.க நிர்வாகிகளை அனைத்து சகோதரர்களும் வாழ்த்தி விடைபெற்றனர்.
நன்றி : எஸ்.சீனி முஹம்மது (மண்டலத் துணை பொதுச் செயலாளர்)

பெரியபட்டினத்தில் "ஈத் மிலன்" மாற்று மத சகோதரர்களுடன் களந்துரையாடல்


டிசம்பர் 14, 2008, இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் இன்றுமனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியாவின்சார்பாக ஈத் மிலன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. மாற்று மதச்சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழச்சியில் அதிகமான அளவில்தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து அருகில் உள்ள முத்துப்பேட்டைகல்லூரியில் தங்கிப் படிக்கும் மாற்றுமத மாணவர்களும், உள்ளூரைச் சேர்ந்தமுக்கிய மாற்று மத பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சரியாக காலை 10.30 மனியளவில் நிகழச்சி ஆம்பமாகியது. நிகழ்ச்சியை துவக்கிவைத்தவர்களாக மாணவர்களுடன் நிகழ்கால பொருளாதார மாற்றங்கள்பற்றியும் இதன் பாதிப்பு பற்றியும் இதில் எந்த அளவிற்கு இந்தியர்கள்பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள்குறித்தும் கலந்துறையாடினார் ஆசிரியர் காதர் அவர்கள்.


பின்னர் மனித நீதிப் பாசறையின் பெரியபட்டினம் நிர்வாகியான திரு. பீர்
முகைதீன் அவர்கள் ஓர் கடவுள் கொள்கை பற்றியும், மாற்று மதங்களில் பின்பற்றப்படும் பல கடவுள் கொள்கை பற்றியும், இஸ்லாத்தின் பார்வையில் கடவுள் கொள்கை, ஏன் கடவுள் பல கடுவள்களாக இருக்க முடியாது என்றும், கட்வுள் என்பது ஒருவராகத்தான் இருக்க முடியும் என்றும் மிக அழுத்தம் திருத்தமாக மாற்று மதத்தினரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அறுமையான ஒரு உரையை நிகழ்த்தினார். தனது உரையின் மூலம் கூடியிருந்த மாற்று மத நன்பர்களிடத்தில் அழைப்பு பனியையும் மேற்கொண்டார்.

அதன் பின்னர் பேச வந்த மனித நீதிப் பாசரை பெரியபட்டனம் பகுதி பொறுப்பாளர்
திரு. செய்யத இபுறாஹிம் அவர்கள் தூய இஸ்லாத்தை பற்றியும், இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை போதிக்கவில்லை என்பது குறித்தும், இஸ்லாத்தில் மனித நேயம், மனித உரிமைகள் பேன்றவை குறித்தும், இஸ்லாமிய ஆட்சியாளர்களான அபுபக்கர், உமர் போன்றோர் எப்படி தங்கள் ஆடசியில் மாற்றிமதத்தவர்களிடத்தும் நீதி செலுத்தினர் என்பது குறித்தும் விளக்கினார்.பின்னர் இன்று உலகம் எங்கும் இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்றும், முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்றும் ஊடகங்களின் மூலமாக நடத்தப்பட்டு வரும் பாரிய பிரச்சார யுத்தத்தினை பற்றியும் இதன் பின்னணியில் உள்ள சக்திகள் எது என்பது குறித்தும் சிறப்புறையாற்றினார்.


அதன் பின்னர் மீண்டும் ஆசிரியர் திரு. காதர் அவர்கள் தனது சிறந்த
நாவன்மையின் மூலம் இஸ்லாத்தினை பற்றியும், இஸ்லாத்தில் மனிதனை சிந்திக்க சொல்வது குறித்தும் உரையாற்றினார்கள். அதன் பின்னர் பக்கத்து கிராமமான நெய்னார் மரைக்கானை சேர்ந்த ஓய்வு வெற்ற ஆசிரியர் திரு. மனி மாதவன் அவர்கள் சமூக நல்லினக்கத்தை வலியுருத்தும் வகையில் தனது உரையை ஆற்றினார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்தது அனைத்து ஹிந்துக்களும் அல்ல என்றும் ஹிந்துக்களின் பெயரில் அரசியல் செய்யும் ஒரு மதவாத அரசியல் கட்சியே தனது தொண்டர்களை கொண்டு இடித்தது என்றும் இந்தியாவின் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் சில அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் சுய லாபத்திற்காக மத மோதல்களையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தி அரசியல் செய்கின்றார்கள் என்றும் இதனால் நம்மள் பினக்கு வரக்கூடாது நாம் என்றும் ஒற்றுமையாக சகோதரர்களாகவு வாழ வேண்டும் என்றுமு் வலியுருத்தினார்.

அதன் பின்னர் கேள்வி நேரம் நட்நதது . கூடியிருந்த மாற்றுமத சகோதரர்களும், மாற்று மத மாணவர்களும் கேட்ட கேள்விகளுக்கு குறிப்பாக இந்தியாவில் நடந்த
தீவிரவாதத் தாக்குதல்கள் அதன் பிண்ணனி குறித்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரு. முகவைத்தமிழன் அவர்கள் சிறப்பாக பதில் அளித்தார்கள். மார்க்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு திரு. செய்யது இபுறாஹி்ம் அவர்களும் மனித நீதிப் பாசறையின் சித்தர்கோட்டை பிரிவு தாவா பொறுப்பாளர் திரு. சஃபீக் அவர்களும் சிறப்பாக பதில் அளித்தார்கள்.

அதன் பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு
வழங்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்தக்களை நிகழ்ச்சியை நடத்திய நிர்வாகிகளிடத்தில் எழுத்து மூலமாக தெறிவித்தார்கள். இன்னும் விளக்கம் தேவைப்பட்டவர்களுக்கும் மதிய உணவிற்கு பின்னர் விளக்கம் வளங்கப்பட்டது. பின்னர் நிகழச்சியின் முடிவில் அனைவரும் மிகுந்த மன திருப்பதியுடனும் மகிழச்சியுடனும் கலைந்து சென்றனர்.

ஈத் மிலன் என்ற மாற்று மத சகோதரர்களுக்கான இந்த ஆரோக்கியமான
கலந்துரையாடலை பெரியபட்டினம் மனித நீதிப் பாசரை மற்றும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.

தேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ? எம்.எல்.ஏக்களுக்கு அப்துல்கலாம் பாடம்.

தேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ? எம்.எல்.ஏக்களுக்கு அப்துல்கலாம் பாடம்


தேர்தலில் வெற்றிபெறுவது எப்படி என்று கர்நாடக எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு '7அம்ச திட்டம்' குறித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்விளக்கிப்பேசினார் .பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை பயிற்சிமையத்தில் (..எம்) எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு அரசியல் மேம்பாடுகுறித்து நேற்று கலாம் விளக்கிப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், உங்கள் தொகுதியில் உள்ள ஒவ்வொரு மனிதரின்வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உத்தரவாதத்தையும், குற்றங்களைகுறைப்பதற்காகவும், ஏழ்மையை ஒழிப்பதற்காகவும் நீங்கள் பாடுபட வேண்டும். இதற்காக ஏழு அம்ச திட்டத்தை பின்பற்ற வேண்டும் எனக் கூறி அந்த அம்சங்கள்குறித்து விளக்கமளித்தார்.


1.மக்களிடம் கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். எல்லோரையும்எழுதப்படிக்க தெரிந்தவர்களாக மாற்ற வேண்டும்.
2.அவர்களின் திறனை மேம்படுத்த உரிய பயிற்சிகள் கிடைக்கச் செய்யவேண்டும்.
3.இளைஞர்களுக்கு உயர் கல்வி வசதி அளிக்கப்பட வேண்டும்.
4.இதனால் உயர்ந்த வேலைவாய்ப்பை அவர்களால் பெறமுடியும். அவர்களதுவருமானமும் அதிகரிக்கும்.
5.தொகுதி மக்களுக்கு தரமான சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
6.இந்த மக்கள் நல பணிகள் எல்லாம் அரசியல் மேம்பாட்டுக்கு உங்களை வழிநடத்திச் செல்லும்.
7.இதனால் வாக்காளர்களின் இதயத்தில் படிப்படியாக இடம்பிடித்து நீங்கள்அரசியலிலும் உயரலாம்.
http://sangamamlive.in/index.php?option=com_content&task=view&id=134&Itemid=31

முத்துப்பேட்டையில் மாபெரும்
அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்



கடந்த 21.11.2008 அன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெருவில் முன்னாள் மாநில மாணவரணி துணைச் செயலாளர் தீன் முகம்மது தலைமையில் மௌலவி. அப்துற் ரஹிம் திடலில் அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் முத்துப்பேட்டை மாலிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.



முன்னதாக அன்று மதியம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இஸ்லாமிய வங்கியியல் என்கிற தலைப்பில் தமுமுக தலைவர் பேரா. முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஜமாத் நிர்வாகிகளிடம் உள்ளூர் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

மறுநாள் (22.11.2008) முத்துப்பேட்டை ஆசாத் நகரில் அல்-மஹா பெண்கள் மதரசாவில் பெண் கல்வி பற்றி தமுமுக தலைவர் உரையாற்றினார். இந்த மதரசாவில் பெண்களுக்கென மார்க்கக் கல்வி,கம்யூட்டர் கல்வி, பெண்களுக்கென தொழில் பயிற்சி வழங்கப்படடு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் செய்யது அலி பாக்கவி ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி அனைத்தையும் முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

நன்றி: தமுமுக இணையதளம்.