ஏழை மக்களின் துயர்துடைக்கும் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

ஏழை மக்களின் துயர்துடைக்கும்

நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

தோப்புத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிரமாங்களில் அடிப்படை வசதிக்கு கூட வழியில்லாத ஏழை எளியவர்களுக்கு உதவும் விதமாகமாகவும் அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் பங்கெடுத்து அதை நிவர்த்தி செய்யும் விதமாக தர்மம் என்ற பெயரால் வீட்டுவாசல்களில் நாளுக்கு நாள் மிஸ்கீன்கள் பெருகிவரும் அவல நிலையை போக்கும் விதமாகவும், ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என்பது நமதூர் மக்களின் எண்ணமாக இருந்து வந்தது.

இந்த உன்னத எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக கடந்த 13.08.2005 சனிக்கிழமை அன்று மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகத்தில் வைத்து அலோசனை செய்யப்பட்டு “அல் பத்தாஹ் உதவும் அமைப்பு” (பைத்துல்மால்) என்ற பெயரில் ஓர் அமைப்பு அல்லஹ் மாபெறும் கிருபையால் துவங்கப்பட்டது. ( அல் ஹம்துலில்லாஹ் )

அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள் :

  • ஏழை,எளியவர்கள் (யாசிப்போர்கள்) இவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக தர்மங்களை முறைப்படுத்துதல்.
  • வட்டி கொடுமைகளிலிருந்து சமுதாயத்தை பாதுகாத்தல்.
  • இயற்கை சீற்றம் மற்றும் பேரழிவுகளினால் பாதிக்கப் பட்டோருக்கு மத,இன பேதமின்றி உதவிக்கரம் நீட்டுதல்.
  • ஏழைகளின் ஜனாஸா செலவுக்கு உதவி செய்தல்.
  • ஏழை,எளிய சிறுவர்களின் கத்னா( சுன்னத்) செலவுக்கு உதவுதல்.
  • ஏழை,எளிய மாணவர்களின் உலக மற்றும் மார்க்க கல்விக்கு உதவி செய்தல்.
  • விதவைகள் மற்றும் கைவிடப்பட்டோர்களுக்கு அடிப்படை தேவைக்காக சிறிய தொகையை மாதம்தோறும் அளித்தல்.
  • ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உணவு வகைக்கு உதவிச் செய்தல்.
  • வசதியற்றவர்களின் பழுது அடைந்த கூரை வீடுகளை செப்பனிடுதல்.
  • மருத்துவ முகாம் அமைத்து ஏழை,எளியவர்களுக்கு இலவச மருத்துவம் செய்தல்.
  • இரத்ததான முகாம் அமைத்து அவசர நிலைக்கு உதவி செய்தல்.
  • பிரயாணத்தில் உடைமைகளை இழந்து பரிதவிப்பவருக்கு பிரயாண செலவுக்கு உதவி செய்தல்.

இவ்வாறான உன்னத உயரிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு அமைப்பு துவங்கபட்டது, துவங்கப்பட்ட நாள்முதல் பல சேவைகளை செய்து வருகிறது.

ஏழை மக்களின் துயர்துடைக்கும் இ ந் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

———————————————————————————————-

அல் பத்தாஹ் உதவும் அமைப்பு ( பைத்துல்மால் )
மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகம்,
109/1,மர்க்கஸ் தெரு,தேத்தாகுடி தெற்கு,
தோப்புத்துறை, நாகை மாவட்டம்
போன்: 04369 316155,99947 60816

அமீரகத்தில் தொடர்புக்கு…

+971 50 8813666, +971 50 5504525

————————————————————————————————

திருமணங்களில் பெருகி வரும் டிஜிட்டல் கட்-அவுட் கலாச்சரம்

திருமணங்களில் பெருகி வரும் டிஜிட்டல் கட்-அவுட் கலாச்சரம்

சமிப காலமாக திருமணம் மற்றும் வீட்டு வைபவங்களில் ” டிஜிட்டல் போர்டு கலாச்சாரம் பெருகி வருகிறது, திருமணம் நிகழ்ச்சிகளில் குதிரை ஆட்டம் மற்றும் இன்னிசை கச்சேரியுடன் ஊர்வலங்கள் சில ஆண்டுகளுக்கு முன் குறைந்து வந்த நிலையில் சில மாதங்களாக மீண்டும் அரங்கேற்றமாகி வருகிறது, அதனை தொடர்ந்து டிஜிட்டல் போர்டு கலாச்சாரமும் அரங்கேற்றி வருகிறது, ஒரு காலத்தில் பூ மாலை மற்றும் பைத்து சபா இல்லாத திருமணத்தை காண இயலாது அதுபோல் இக்காலத்தில் டிஜிட்டல் போர்ட் இல்லாத திருமணத்தை காண முடியவில்லை,இதில் போட்டி போடும் அளவிற்கு (சைஸிலும்…) அதிகமாகி வருகிறது, மற்றொரு சாராரோ ஆடம்பரம் என்ற பெயரில் திருமணம் என்னும் எளிய ஒப்பந்தத்தை திருவிழாவாக மாற்றி பணத்தை தண்ணீராக வீண்விரயம் செய்கின்றனர்.

இன்றைக்கு, குழந்தை பிறந்த விழா, பெண் பூப்பெய்க்கும் போது எடுக்கப்படும் விழா, கத்னா செய்யும் போது செய்யப்படும் அனாச்சாரங்கள் முதல் திருமண தடபுடல் விரயங்கள் வரை அனைத்திலும் நம்முடைய சமுதாய மக்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

எனவே வல்ல அல்லாஹ் அருளியதைக் கொண்டு மன நிறைவு கொண்டு, மேலும் பொருளாதார வளத்திற்காக அவனிடமே மன்றாடி, அவன் காட்டித் தந்த வழியில் நம்முடைய பொருளாதாரங்களைச் செலவழித்தால் வாழ்க்கை பூந்தோட்டமாக அமையும், இன்ஷா அல்லாஹ். அதற்கான பாக்கியத்தை வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள்வானாக!

———————————————————————————————–
(இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். எனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அளவு கடந்து (வீண்) செலவு செய்வோரை நேசிப்பதில்லை. (அல்குர்அன்)
———————————————————————————————-
அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும், நாம் அதிலுள்ள அனைத்தையும் நிச்சயமாக (ஒருநாள்) அழித்துப் பாலைநிலமாக்கி விடுவோம். (அல்-குர்ஆன் 018:007-008)
——————————————————————————————

கல்வியை தொடர உதவி செய்வீர்…

திருவாரூர் மாவட்டம், கடியச்சேரி – பள்ளங்கோவில் என்ற கிராமத்தை சேர்ந்த மாணவர். என்.ஷேக் தவூத் என்ற மணவர் திருச்சியில் எம்.ஐ.ஈ.டி என்ற கல்லூரியில் பி.இ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார், இவரது குடும்பத்தினர் மூன்றாம் ஆண்டிற்கான கட்டணத்தை செலுத்த முடியாமால் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள், இம் மாணவரின் கல்வி தொடர உதவிச் செய்வீர்,

மேலும் தொடர்புக்கு.. ஆதம்.ஆரிபின்,தோப்புத்துறை – 9003329412

வெற்றியை நோக்கி விரைந்து வாருங்கள்!!!

அல்லாஹ்வின் திருபெயரால்...

வெற்றியை நோக்கி விரைந்து வாருங்கள்!!!


மாபெரும் இசுலாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

இடம் : ஹத்திப் தெரு சந்திப்பு,

தோப்புத்துறை, நாகை மாவட்டம்

நாள்: 11 - 04 - 20009, சனிக்கிழமை,

நேரம் : மாலை 6.30 மணியளவில்

சிறப்புரையளர்கள் :
மவுலவி. எம்.முஹம்மது யூசுப் மிசுபாயி,
தொண்டி கலந்தர் அபூபக்கர் யூசுபி,
மற்றும்
அப்சலுல் உலமா முஹம்மது இசுமாயில் நூரி,

இன்சா அல்லாஹ்...
மாலை 6.30 முதல் இஷா வரை
மதரசா மாணவ,மாணவியவர் நிகழ்ச்சி
நடைப்பெறும்

மேலும் விபரங்களுக்கு...
ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

தோப்புத்துறை- Mobile : 9994760816 / 9003329412

இனியாவது ஒன்று படுமா நமது சமுதாயம்.

இனியாவது ஒன்று படுமா நமது சமுதாயம்.

நமது சமுதாயத்திற்காக 2002 ஆண்டில் ஜனாப்.அப்துல் லத்திப் சட்டமன்றத்தில் MLA ஆக இருந்தார், அதன் பிறகு யாருமில்லை என்பதுதான் உண்மை,நமக்கு முறையான அரசியல் கட்சியும் இல்லை, அப்படி இருப்பதாக நோக்கினால் முஸ்லீம் லீக் முன்று பிரிவுகளாகவும் , இண்டியன் யூனியன் முஸ்லீம் லீக் இரு பிரிவுகளாகவும்,(காதர் மொய்தீன், தாவுது மியா கான் ), மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் - உமர் பாரூக் , தமிழ் மாநில முஸ்லீம் லீக் - ஷேய்க் தாவுத், இந்திய தேசிய லீக், தமிழ் மாநில தேசிய லீக், தேசிய லீக் முன்று பிரிவு களாகவும், தலைவர்கள், தொண்டர்கள் ஆக மொத்தம் பாத்து வேனில் அடக்கி விடலாம், அதே செல்வாக்கும் இல்லை, நோன்பு நேரங்களில் மாற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு கஞ்சிக்கு அழைப்பு கொடுத்து பத்திரிக்கைகளில் பதிய வைப்பார்கள், அதே நேரம் செல்வாக்குள்ள சில இஸ்லாமிய அமைப்புகளும் உண்டு அதில் த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் பிரோன்ட் ஆப் இந்தியா (ப்பிய்) இம்மூன்று அமைப்புகளும் அமைப்புகளாகும் , இதற்கு அடுத்தநிலையில்ஜாக் (J.A.Q.H), ஜமாத்தே இஸ்லாமி, இந்திய தவ்ஹீத் ஜமாத் , அமைப்புகஇருந்தாலும் இந்த அமைப்புகளுக்கு அரசியல் ஆர்வம் கிடையாது, இந்தநிலையில் .மு.மு.,PFI,.., ஆகிய அமைப்புகள் கருத்துக்கள்வேறுபட்டாலும் அரசியல் தளத்தில் ஒன்று பட்டு மூன்று காலவரையில்இவர்கள் தேர்தலை முன்னிட்டு நன்மையை விரும்பி ஒன்று பட்டு லாம் ,

மனித நேய மக்கள் கட்சி என்ற புதிய கட்சி யார் விரும்பினாலும்விரும்பவிட்டளும் ஒரு எழுச்சியான கட்சி என்பது மறுக்க இயலாது, இதுவரை பல லீக் களாலும் திரட்ட இயலாததை செய்து இருக்கிறது, கூட்டத்தைமட்டுமல்ல ஒரு எழுச்சியையும் உருவாக்கி உள்ளதை .., PFI,
ஜாக் (J.A.Q.H), இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஆகிய அமைப்புகளை சார்ந்தசகோதரர்களும் வரவேற்று உள்ளார்கள் , ஏனன்றால் ஒரு தயாநிதி மாறன்அல்லது TTV .தினகரனுக்கோ அவர்களுடைய வெற்றிக்காக பாடுபடுவதைவிட, நாம் ஏன் நம்முடைய சகோதரனுக்கு உழைக்கக்கூடாது என்ற எண்ணம்நம்மிடைய மேலோங்கி உள்ளது, எவனோ ஒருவன் வெற்றிபெற போதுநாம் ஏன் .. விற்கு ஆதரவு கொடுக்க கூடாது ? , அதற்கேற்ப சமிபகாலமாக .மு.மு. வின் வார இதழ் க்கூட முஸ்லீம் லீகை தவிர மாற்றநமது அமைப்புகளை சாட வில்லை, பீஜே மற்றும் பாகர் பிரிவை கூட தனதுஇதழில் தவிர்த்து வந்தது என்பது குறிப்பிட தக்கது, பாக்கரை தூண்டி விடவாய்ப்புகள் அதிகம் ஆனால் நடுநிலையோடு இருந்து வந்தது, .. வுடன்சுமுகமான உறவை பேண .. மாநாடு அழைப்பிதல் கூட நேரில்கொடுக்கப்பட்டது, இரு அமைப்புகளின் தொண்டர்களுக்கும் கூட சுமுகஉறவையே விரும்புகிரரர் , இரு அமைப்புகளும் கொஞ்சம் இறங்கி பேச்சுநடத்தினால் சமுதாயத்திற்கு நல்லது, இதே போலே மனிதநீதி பாசறைஉடன் .மு.மு. சில வேறுபாடுகள் இருந்தாலும் கொழிகொடில் நடந்தமாநாட்டில் .மு.மு. தலைவர் ஜவதிருள்ள் கலந்துகொண்டதுகுறிப்படத்தக்கது, ஜாக் (J.A.Q.H), ஜமாத்தே இஸ்லாமி, போன்றஅமைப்புகள் அதிகாரபூர்வமற்ற வகையில் ஆதரவு தெரிவித்து உள்ளது, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கூட வாழ்த்து அனுப்பி உள்ளது, ஆக இந்தஅமைப்புகள் எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு நமது சமுதாயத்தில் ஒருமாற்றத்தை கொண்டு வரலாம், பதினைந்து தினங்களில் பேசி நல்ல முடிவுஎடுக்க வேண்டும், இதை பிரிண்ட் செய்து நமது சகோதர்களுக்கு எடுத்துசொல்லுங்கள்.

insa allah.... வெற்றி பெறுவோம்....

- ஆதம்.ஆரிபின் ( மண்ணடி காக்கா)




ஐக்கிய அரபு அமீரகம் : அபுதாபி யில் முஸ்லீம் முன்னேற்ற கழகம் பொதுக்குழு கூட்டம் 08-01-2009 அன்று நடைபெற்றது, MBM கேம்ப் தலைவர் பீர் முஹமது குர் ஆன் ஓத அபுதாபி மண்டலம் தலைவர் பொதக்குடி தாஜுதீன் வரவேற்புரையாற்ற , அமீரக முஸ்லீம் முன்னேற்ற தலைவர் அப்துல் ஹாதி தலைமை வகித்தார், கடந்த வருடத்தின் மண்டலங்களின் அறிக்கைகள் மண்டல வாரியாக சமர்பித்தனர், அபுதாபி சார்பாக செங்கோட்டை சலீம், துபாய் சார்பாக கொடுங்கையூர் மொய்தீன், சார்ஜா சார்பில் அப்துல் ரெஜாக் மற்றும் ரச அல் கைமா சார்பாக ஆதம் ஆரிபின் ஆகியோர் சமர்ப்பித்தனர், த மு மு க வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அவசியத்தையும், அதன் மூலம் சமுதாயம் அடையும் பயன்களை பற்றியும் அமீரக செயலாளர் யாசீன் நூருல்லா அவர்கள் எடுத்து வுரைத்தார், அடுத்தாதாக உரையாற்றிய அமீரக பொருளாளர் பொறியலாளர் ஜெயிலானி அரசியலில் தூய்மையாக பணியாற்ற எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பற்றி எடுத்துரைத்தார், தமிழக தலைமையிலிருந்து வந்த கடிதம் பற்றி கலந்தாய்வு நடைபெற்றது, முத்தான முன்று தீர்மானங்கள் அமீர துணை தலைவர் ஹுசைன் பாட்சா அவர்கள் வாசித்தார் , இறுதியாக இஸ்மத் இனுன் நன்றி உரையுடன் முடிவடைந்தது .

ஆஷூரா தினம் பற்றிய அறிவிப்பு

ஆஷூரா தினம் பற்றிய அறிவிப்பு

இன்ஷாஅல்லாஹ் நாளை 5.1.2009 திங்கட்கிழமை ச‌ர்வ‌தேச‌ப்பிறை அடிப்ப‌டையில் தாஸுஆ தின‌மாக‌வும் ம‌றுநாள் செவ்வாய்க்கிழமை ஆஷுரா தின‌மாக‌வும் இருப்ப‌தால் அனைத்து ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ளும் அல்லாஹ்வுடைய‌ தூத‌ரால் க‌டைப்பிடிக்க‌ப்ப‌ட்ட‌ நோன்பை நோற்று பாவ‌மீட்சி பெறுமாறு வேண்டுகின்றோம்