தம்மாம்: சவூதி அரேபியாவின் தம்மாம் நகரில் முதன் முறையாக தமிழக தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான இலவச பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அனுபவம் வாய்ந்த பதர் அல் ராபி மருத்துவமனையுடன் இணைந்து தமுமுக இம் முகாமினை நடத்தியது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் ஏறத்தாழ 500 தமிழர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நன்றி: தட்ஸ் தமிழ்