கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்
கோவை டிசம்பர்- 27
சிறையில் கைதிகளுக்கு பரோல் என்பது ஒரு மனிதவுரிமை. ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. மதசார்பற்ற கொள்கைக்கு வேட்டு வைப்பது போல், கோவை சிறை அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். உதாரணம் : சுல்தான் மீரான் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைபெற்று ஐந்து வருடங்களாக சிறையில் இருக்கும் பூரிகமல், ராஜேஷ் போன்ற இந்து பாசிஸ குற்றவாளிகளுக்கு வழிக்காவல் கூட இல்லாமல் மூன்று நாட்கள் வரை பரோல் போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் 11 வருடங்களாக தன் குடும்பத்தாரை பிரிந்து சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு அவர்களின் குடும்பத்தார்கள் மரணமடைந்தால் சில மணி நேரம் பலத்த போலீஸ் காவலுடன் பரோல் கொடுக்கப்படுகின்றது. இது முஸ்லிம் கைதிகளுக்கு அளிக்கும் ஒரு வெளிப்படையான அநீதியாகும். இது தொடர்பாக சம்சுதீன் என்ற சிறைவாசி 24.12.2008 அன்று முதல் எங்களுக்கும் சம நீதி வேண்டும் என சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரின் தொடர் உண்ணாவிரதத்தின் காரணமாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் குடும்பத்தாருக்கு கூட நேர்காணலில் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக அவரின் மனைவி ஆரிபா மற்றும் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகிகள் இன்று (26.12.2008) கோவை மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து இவ்விஷயத்தில் சமநீதி கிடைத்திட வழிவகை செய்ய ஆவண செய்யுமாறு மனு அளித்துள்ளனர். சம நீதி கிடைக்குமா?
தமிழக முதல்வர்க்கு சிறைவாசியின் மனைவி கடிதம்
ஆரிபா ஆல் அமீன் காலனி3-வது வீதி, தெற்கு உக்கடம் கோவை
– 641001
பெறுநர்
திரு. தமிழக முதலமைச்சர் அவர்கள்
கோட்டைசென்னை
ஐயா,
என்னுடைய கணவர் ஷம்சுதீன். கடந்த பதினொரு ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். நானும் கடந்த பதினொரு ஆண்டுகளாக என்னுடைய கணவரை நேர்காணலில் சென்று சந்தித்துக் கொண்டுள்ளேன். ஆனால், இன்று 26.12.2008 அன்று மத்திய சிறைக்கு நேர் காணலுக்கு சென்ற பொது அங்கிருந்த சிறை அதிகாரிகள் என்னுடைய கணவர் ஷம்சுதீன் நான்கு நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்றார். தற்போது அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை நேர்க்காணல் காண முடியாது என்று கூறிவிட்;டார்கள்.
ஐயா, என்னுடைய கணவர் எதற்காக உண்ணாவிரதம் இருக்கின்றார். அவரின் உடல்நிலை எப்படி உள்ளது என்ற எந்த விபரமும் கூறவில்லை. ஆதனால் ஐயா, அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் மூலம் என்னுடைய கணவரின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆரிபா
கணவர் பெயர் சம்சுதீன்
கோவை
செய்தி: கோவை தங்கப்பா
மீடியா வாய்ஸ்
கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்
கோவை முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை சிறை முன் முற்றுகை முஸ்லிம் பெண்களுக்கு தடி அடி
கோவையில் பரபரப்பு பெண்கள் ஆவேசம் !!
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோவை ஜெயில் முன் 200க்கும் மேற்பட்டோர் இன்று மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையில் தண்டனை அனுபவித்த 296ஆயுள்தணடனை கைதிகள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். கோவைகுண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று 68முஸ்லிம் சிறைவாசிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.இவர்களையும் விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முன் முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்கள்,குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை 9மணிக்கு திரண்டு முற்றுகையிட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த ஆர்.டி.ஒ. பாலச்சந்திரன் அங்கு விரைந்தார். அவரிடம்,முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் உங்கன் கோரிக்கையை எழதி தாருங்கள்.இதைனை அரசுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். இதையடுத்து அவர்கள் கோரிக்கைகளை அவரிடம் எழுதிக் கொடுத்தனர்.பின்னர் முற்றுகையைக்ககைவிட்டு கலைந்து சென்றனர்.கோவை சிறை முன் பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போலிஸ் அதிகாரிகள் துனை கமிஷனர் ராஜேந்திரன்.மற்றும் உதவி கமிஷனர் கோபால்சாமி மற்றும்போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
சுட்டுத்தள்ளுங்கள் சிறைவாசிகள் ஆவேசம்.....
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களையும் விடுதலை செய்யக்கோரி கோவையில் அவர்களது உறவினர்கள் முற்றுகையிட்டபோது, சிறைக்குள் சிறைவாசிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலை வழங்குவதில் பாரபட்சம் கூடாது, எங்களையும் விடுதலைசெய்ய வேண்டும்.இல்லையெனில் தடையை மீறி சிறையிலிருந்து வெளியேறுவோம்.வேண்டுமானால் எங்களை சுட்டுத்தள்ளுங்கள் என முஸ்லிம் சிறைவாசிகள் கோஷமிட்டனர்.இதனால் சிறைகுள் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயில் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் அவர்களை சமாதானப்படுத்தினர்.பின்னர் ஆர்ப்பாட்டம் செய்த சிறைவாசிகள் அமைதியடைந்தனர்.
இந்த சிறைமுன் நடந்த மறியல்க்கு சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உமர்ஷா தலைமை நடந்தது.இதில் சிறையில் இருந்து 1ஆண்டுகளுக்கு முன் விடுதலையான அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல் சென்னை புழல் சிறையில் இருந்து 117கைதிகளும்,
வேலுர்சிறையில் இருந்து 9பெண்கள் உள்பட 131கைதிகளும், திருச்சி சிறையில் 7பெண்கள் உள்பட 181கைதிகளும்,பாளையங்கோட்டை சிறையில்இருந்து 272கைதிகளும்,கடலுர்சிறையில் இருந்து 128கைதிகளும்,சேலம் சிறையில்இருந்து 10கைதிகளும்,மதுரை சிறையில் இருந்து 266கைதிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.கேரள சிறையில் இருந்து தமிழக கைதிகள் 3பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அனால் முஸ்லிம் சிறைவாசிகளின் நிலை என்ன ?
சமுதாய தலைவர்களே இதற்கு என்ன தீர்வு !!
இன்ஷா அல்லாஹ் விரைவில். சிறைவாசி குடும்பங்களின் தொடர்
போராட்டம் தெடரும்...
செய்திகள் : கோவை தங்கப்பா