கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்

கோவை மத்திய சிறையில் ஒருதலை பட்சம்

கோவை டிசம்பர்- 27
சிறையில் கைதிகளுக்கு பரோல் என்பது ஒரு மனிதவுரிமை. ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. மதசார்பற்ற கொள்கைக்கு வேட்டு வைப்பது போல், கோவை சிறை அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். உதாரணம் : சுல்தான் மீரான் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைபெற்று ஐந்து வருடங்களாக சிறையில் இருக்கும் பூரிகமல், ராஜேஷ் போன்ற இந்து பாசிஸ குற்றவாளிகளுக்கு வழிக்காவல் கூட இல்லாமல் மூன்று நாட்கள் வரை பரோல் போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் 11 வருடங்களாக தன் குடும்பத்தாரை பிரிந்து சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு அவர்களின் குடும்பத்தார்கள் மரணமடைந்தால் சில மணி நேரம் பலத்த போலீஸ் காவலுடன் பரோல் கொடுக்கப்படுகின்றது. இது முஸ்லிம் கைதிகளுக்கு அளிக்கும் ஒரு வெளிப்படையான அநீதியாகும். இது தொடர்பாக சம்சுதீன் என்ற சிறைவாசி 24.12.2008 அன்று முதல் எங்களுக்கும் சம நீதி வேண்டும் என சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரின் தொடர் உண்ணாவிரதத்தின் காரணமாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் குடும்பத்தாருக்கு கூட நேர்காணலில் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக அவரின் மனைவி ஆரிபா மற்றும் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகிகள் இன்று (26.12.2008) கோவை மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து இவ்விஷயத்தில் சமநீதி கிடைத்திட வழிவகை செய்ய ஆவண செய்யுமாறு மனு அளித்துள்ளனர். சம நீதி கிடைக்குமா?
தமிழக முதல்வர்க்கு சிறைவாசியின் மனைவி கடிதம்
ஆரிபா ஆல் அமீன் காலனி3-வது வீதி, தெற்கு உக்கடம் கோவை
– 641001
பெறுநர்
திரு. தமிழக முதலமைச்சர் அவர்கள்
கோட்டைசென்னை
ஐயா,
என்னுடைய கணவர் ஷம்சுதீன். கடந்த பதினொரு ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். நானும் கடந்த பதினொரு ஆண்டுகளாக என்னுடைய கணவரை நேர்காணலில் சென்று சந்தித்துக் கொண்டுள்ளேன். ஆனால், இன்று 26.12.2008 அன்று மத்திய சிறைக்கு நேர் காணலுக்கு சென்ற பொது அங்கிருந்த சிறை அதிகாரிகள் என்னுடைய கணவர் ஷம்சுதீன் நான்கு நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்றார். தற்போது அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை நேர்க்காணல் காண முடியாது என்று கூறிவிட்;டார்கள்.
ஐயா, என்னுடைய கணவர் எதற்காக உண்ணாவிரதம் இருக்கின்றார். அவரின் உடல்நிலை எப்படி உள்ளது என்ற எந்த விபரமும் கூறவில்லை. ஆதனால் ஐயா, அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் மூலம் என்னுடைய கணவரின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆரிபா
கணவர் பெயர் சம்சுதீன்
கோவை
செய்தி: கோவை தங்கப்பா
மீடியா வாய்ஸ்