த.மு.மு.க சவூதி கிழக்கு மண்டலம் சிறப்பு வாய்ந்த பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

கடந்த வெள்ளிக்கிழமை 12.12.2008 அன்று த.மு.மு.க கிழக்கு மண்டலம் சிறப்பு வாய்ந்த பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு சகோ.அப்துல் காதர் (மண்டலத் துணைத் தலைவர்) தலைமை தாங்கினார். இந்நிகழ்சியில் தம்மாம், அல்-கோபர், ஜுபைல், அப்கேக் உள்ளிட்ட கிழக்கு மண்டல த.மு.மு.க சகோதரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்சியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தப்பட்டன, இதை சகோ.இம்தியாஸ் சிறப்பாக நடத்திக் கொடுத்தார். இந்த பெருநாள் சந்திப்பு நிகழ்சியின் சிறப்பம்சம் என்னவென்றால் எத்துனை பேர்கள் வந்தாலும் எதிர்த்து நிற்கும் வீரனைவிட தன் விலைமதிப்பில்லா கருத்தை தயங்காமல் மேடையேறிச் சொல்பவனே சிறந்தவன் என்ற வாக்கிற்கேற்ப நிகழ்சியில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு மேடைக் கூச்சத்தைப் போக்க பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதனை சகோ.அப்துல் அலிம் திறம்பட நடத்திக் கொடுத்தார்.

மேலும் பெரியவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களில்லை என்பதை எதிர்கால த.மு.மு.கவின் கண்மணிகள் மேடையேரி தங்களின் மழலை மொழியில் கிராத் மற்றும் த.மு.மு.கவின் கொள்கைப் பாடல்களைப் பாடிய போது அங்கிருந்த சகோதரர்கள் அகமகிழ்ததை அவர்களின் முகங்களில் காண முடிந்தது.

தங்களின் பிள்ளைகளை பிரிந்து வாழும் சகாதரர்கள் தம் பிள்ளைகளின் மழலைப் பேச்சைக் கேட்க முடியாவிட்டலும் நம் சகோதரர்களின் பிள்ளைகளை பார்த்து பரவசமடைந்தது அவர்களின் கண்கள் குளமானதிலிருந்து அறிய முடிந்தது. இந்நிகழ்சியை சகோ.சகோ.இஸ்மாயில் (மண்டல பொதுச் செயலாளர்) செம்மையாக நடத்திக் கொடுத்தார்.

மௌலவி ஷரீப் பாக்கவி அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள், பெருநாள் விடுமுறையில் இஸ்லாத்திற்கு புறம்பான விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்த்து விட்டு இது போன்ற பெருநாள் நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதை தனது உரையில் சுட்டிக்காட்டி ஏற்பாட்டாளர்களை பாராட்டினார்.

கிழக்கு மண்டல மீடியா சார்பாக டிச.6 இரயில் மறியல் ஏன் என்று டாக்டர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பேசிய சி.டி திரையிடப்பட்டது பிறகு சகோ.அப்துல்காதர் (மண்டலத் துணைத் தலைவர்) டிச.6 தடையை மீறி நடந்த இரயில் மறியல் சமந்தமாக விளக்கிக் கூறினார்.



கிழக்கு பிராந்தியத்தில் முதல்முறையாக தமுமுக நிகழ்ச்சியில் பெண்கள் சிறுவர்கள் அனைவரும் கலந்து கொண்டதால் பெண்கள் பகுதியில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கு கொண்ட அனைத்து சகோதரிகளும் வெகுவாக அதனை வரவேற்றார்கள்.

பெண்கள் மத்தியில் தமுமுகவின் தேவையையும் அதன் சேவைகளையும் சகோதரி மரியம் அப்துல் காதர் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இறுதியில் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சகோ.சர்புதீன் (மண்டத் துணைச் பொதுச் செயலாளர்) மற்றும் சகோ.முஸ்தபா ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். முடிவில் சகோ.நஸ்ருத்தீன் (மண்டல பொருளாளர்) நன்றியுரை ஆற்றி நிகழ்சியை அற்புதமாக முடித்துக் கொடுத்தர்.

தங்களின் குடும்பங்களையும் உற்றார் உறவினர்களையும் பிரிந்து வாழும் நம் சகோதரர்கள் இது போன்ற நிகழ்சிகளில் கலந்து கொண்டு அன்புடனும் பாசத்துடனும் சக சகோதரர்களுடன் பழக வாய்ப்பளித்த கிழக்கு மண்டல த.மு.மு.க நிர்வாகிகளை அனைத்து சகோதரர்களும் வாழ்த்தி விடைபெற்றனர்.
நன்றி : எஸ்.சீனி முஹம்மது (மண்டலத் துணை பொதுச் செயலாளர்)