தேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ? எம்.எல்.ஏக்களுக்கு அப்துல்கலாம் பாடம்
தேர்தலில் வெற்றிபெறுவது எப்படி என்று கர்நாடக எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு '7அம்ச திட்டம்' குறித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்விளக்கிப்பேசினார் .பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை பயிற்சிமையத்தில் (ஐ.ஐ.எம்) எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு அரசியல் மேம்பாடுகுறித்து நேற்று கலாம் விளக்கிப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், உங்கள் தொகுதியில் உள்ள ஒவ்வொரு மனிதரின்வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உத்தரவாதத்தையும், குற்றங்களைகுறைப்பதற்காகவும், ஏழ்மையை ஒழிப்பதற்காகவும் நீங்கள் பாடுபட வேண்டும். இதற்காக ஏழு அம்ச திட்டத்தை பின்பற்ற வேண்டும் எனக் கூறி அந்த அம்சங்கள்குறித்து விளக்கமளித்தார்.
1.மக்களிடம் கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். எல்லோரையும்எழுதப்படிக்க தெரிந்தவர்களாக மாற்ற வேண்டும்.
2.அவர்களின் திறனை மேம்படுத்த உரிய பயிற்சிகள் கிடைக்கச் செய்யவேண்டும்.
3.இளைஞர்களுக்கு உயர் கல்வி வசதி அளிக்கப்பட வேண்டும்.
4.இதனால் உயர்ந்த வேலைவாய்ப்பை அவர்களால் பெறமுடியும். அவர்களதுவருமானமும் அதிகரிக்கும்.
5.தொகுதி மக்களுக்கு தரமான சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
6.இந்த மக்கள் நல பணிகள் எல்லாம் அரசியல் மேம்பாட்டுக்கு உங்களை வழிநடத்திச் செல்லும்.
7.இதனால் வாக்காளர்களின் இதயத்தில் படிப்படியாக இடம்பிடித்து நீங்கள்அரசியலிலும் உயரலாம்.
http://sangamamlive.in/index.php?option=com_content&task=view&id=134&Itemid=31
தேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ? எம்.எல்.ஏக்களுக்கு அப்துல்கலாம் பாடம்.
Labels:
அதிரை,
அரசியல்,
ஆதம் .ஆரிபின்