அமீரக தொழிலாளர்களின் அவல வாழ்க்கை!

Dubai Gas
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ரசல் கைமா பகுதியில் உள்ள முகாம்களில் மிகவும் பயங்கரமான சூழலில் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா பகுதியில் உள்ள தொழிலாளர் முகாம்களில் தாங்கள் தங்கும் அறைக்கு அருகிலேயே சமையலையும் கவனித்து வருகிறார்கள் தொழிலாளர்கள். எரிவாயு சிலிண்டர்களும் அடுப்புக்கு அருகிலேயே உள்ளன.

இது வெடிகுண்டுடன் இருப்பதைப் போன்ற அபாயகரமான செயல் என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பாதுகாப்பு குறித்து பல்வேறு பாடங்கள் நடத்தப்பட்டாலும், தங்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கு இதுபோன்ற நிலையில் தான் இருக்க முடிகிறது என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நகரின் ஒதுக்குப்புறத்தில் தங்கி வரும் சூழ்நிலையில் உணவுக்காக அலைவதைத் தடுக்க தொழிலாளர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். தாங்கள் வேறு இடங்களுக்கு பணியின் நிமித்தமாக செல்லும் நிலை ஏற்படின் சமையல் எரிவாயுவை பிறிதொருவருக்கு விற்று விடுகின்றனராம்.


--
BLOG SITE IN TAMIL
------------------------------------------------------------------------------------------------------------
http://samuthayam.blogspot.com
http://mannadykaka.blogspot.com
http://adamtradenews.blogspot.com
http://adamtamilit.blogspot.com
------------------------------------------------------------------------------------------------