Download Offline Pre-Registration Application for Emirates Identity Authority
அமீரக தொழிலாளர்களின் அவல வாழ்க்கை!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா பகுதியில் உள்ள தொழிலாளர் முகாம்களில் தாங்கள் தங்கும் அறைக்கு அருகிலேயே சமையலையும் கவனித்து வருகிறார்கள் தொழிலாளர்கள். எரிவாயு சிலிண்டர்களும் அடுப்புக்கு அருகிலேயே உள்ளன.
இது வெடிகுண்டுடன் இருப்பதைப் போன்ற அபாயகரமான செயல் என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பாதுகாப்பு குறித்து பல்வேறு பாடங்கள் நடத்தப்பட்டாலும், தங்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கு இதுபோன்ற நிலையில் தான் இருக்க முடிகிறது என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நகரின் ஒதுக்குப்புறத்தில் தங்கி வரும் சூழ்நிலையில் உணவுக்காக அலைவதைத் தடுக்க தொழிலாளர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். தாங்கள் வேறு இடங்களுக்கு பணியின் நிமித்தமாக செல்லும் நிலை ஏற்படின் சமையல் எரிவாயுவை பிறிதொருவருக்கு விற்று விடுகின்றனராம்.
--
BLOG SITE IN TAMIL
------------------------------
http://samuthayam.blogspot.com
http://mannadykaka.blogspot.
http://adamtradenews.blogspot.
http://adamtamilit.blogspot.
------------------------------
துபாயில் சொற்பொழிவு : பெற்றோர் - குழந்தைகள் : உரிமைகளும்,கடமைகளும்
துபாயில் எதிர்வரும் வெள்ளியன்று ( 27 ஜுன் 2008 ) மாலை எட்டு மணிக்கு பெற்றோர் குழந்தைகள் : உரிமைகளும், கடமைகளும் எனும் தலைப்பில் உரை ரியாத் குறைஷி அல் கிஸஸ் பகுதில் அமைந்துள்ள கலிமா செண்டரில் நிகழ்த்த இருக்கிறார்.
இந்நிகழ்வில் ஆண்களும், பெண்களும் பங்கேற்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புக்கு : 04 2644115
www.kalemah.org
This post was submitted by முதுவை ஹிதாயத்.
ஐக்கிய அரபு எமிரேட் :விசா கட்டணம்
ஐக்கிய அரபு எமிரேட் அரசு, விசா அனுமதிக்கான கட்டணதை ஜுலை முதல் உயர்த்தியுள்ளது. ஒரு மாதத்துக்கான விசா கட்டணம் 200 தினாரில் இருந்து 500 தினாராக (5,839) உயர்த்தப்படுகிறது.3 மாதங்களுக்கான விசா கட்டணம் 1000 தினாராக உயர்த்தப்படுகிறது. இதற்கு முன்பு இதற்கான கட்டணம் 700 தினார்.
2000 தினார்( ரூ.23.200) கட்டணத்தில் 6 மாத விசாவும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் 6 மாதங்களுக்கு நாட்டில் தங்கியிருக்கலாம். இடையில் எத்தனை முறை வேண்டுமானாலும் சொந்த நாட்டுக்கு சென்று வரலாம். கம்பெனிகள் தங்கள் அதிகாரிகளுக்கு இந்த 6 மாத விசாவை பெறலாம்.தெழிலாளர்களை இந்த விசா மூலம் அழைத்து செல்ல முடியாது.
சுற்றுலா பயணிகள், தொழிலதிபர்கள்,ஐக்கிய ஆரபு எமிரெட்டில் குடியிருப்போரின் உறவினர்களுக்காக இத்தகைய விசா ( விசிட்டர் விசா) தரப்படும்.
நன்றி தினமணி
JAQH அமீரக செயற்குழு கூட்டம் - துபாய்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
அமீரக செயற்குழு கூட்டம் -துபாய்
மீண்டும் தொடங்கும் எமிரேட்ஸ்-கோவா விமான சேவை
துபாய்: ஐக்கிய அரபு எமிரேஸுக்கும், கோவாவுக்கும் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த மார்க்கத்தில் தனது விமான சேவையை நிறுத்தியது இந்தியன் ஏர்லைன்ஸ். இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் மீண்டும் இச்சேவையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவுக்கான பிராந்திய இயக்குநர் அபய் பதக் கூறுகையில், அடுத்த வாரம் முதல் துபாயிலிருந்து கோவாவுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன சேவை தொடங்கும் என்றார்.
கோவாவுக்கும், ஷார்ஜாவுக்கும் இடையே வாரம் இரு நேரடி விமானங்களை கடந்த மார்ச் 30ம் தேதி வரை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வந்தது. அதேபோல கடந்த டிசம்பர் மாதம், ஏர் இந்தியா நிறுவனம் தான் இயக்கி வந்த வாரம் ஒருமுறை குவைத் -துபாய் -கோவா விமான சேவையை நிறுத்தியது என்பது நினைவிருக்கலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 50 ஆயிரம் கோவா மாநிலத்தவர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய்: 4 மணி நேரம் பஸ்சுக்குள் அடைபட்ட எல்.கே.ஜி. சிறுவன் பலி
துபாய்: அபுதாபியில், பள்ளி பேருந்தில் நான்கு மணி நேரம் அடைபட்ட கேரளாவைச் சேர்ந்த நான்கு வயது எல்.கே.ஜி குழந்தை மூச்சித் திணறி இறந்தான்.
கேரளாவைச் சேர்ந்த ஆதிஷ் என்கிற அந்த நான்கு வயது சிறுவன், அபுதாபியில் உள்ள மெர்ரி லேன்ட் கின்டர்கார்டன் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். வியாழக்கிழமை காலை பள்ளிப் பேருந்தில் அவன் ஏறினான். இந்த நிலையில் அன்று பிற்பகல் 12.50 மணிக்கு ஆதிஷின் தந்தைக்கு பள்ளியிலிருந்து போன் வந்தது. உங்கள் மகன் விபத்தில் சிக்கி விட்டான் என்று பள்ளித் தரப்பில் கூறியுள்ளனர்.
ஆதிஷின் தந்தை ஷெபின் ஸ்ரீதர் துபாய், ஜெபல் அலி பகுதியில் வேலை பார்த்து வருகிறார். பள்ளியிலிருந்து வந்த தகவல் குறித்து ஸ்ரீதர் கூறுகையில், போன் வந்ததும், நான் எனது மனைவி, தந்தை மற்றும் நண்பர்கள் ஷேக் கலீபா மருத்துவ நகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு போனது போது எங்களது மகன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்னர்.
எனக்கு அவன் ஒரே மகன். எனது மகன் எப்படி இறந்தான் என்பதை டாக்டர்கள் சொல்லவில்லை. ஆனால் அவன் மூச்சுத் திணறி இறந்துள்ளதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.
பள்ளிக்கு பேருந்தில் சென்ற அவன் பள்ளி வந்ததும் பேருந்திலிருந்து இறங்கவில்லை. காலை 7.35 மணிக்கு அவனை எனது தந்தை பேருந்தில் ஏற்றி அமர வைத்தார். ஆனால் பள்ளியை பேருந்து அடைந்ததும், அவன் இறங்கி விட்டானா, இல்லையா என்பதை ஓட்டுநரோ, நடத்துநரோ கவனிக்கவில்லை.
எனது மகன் உள்ளே இருப்பது தெரியாமலேயே பேருந்தை மூடியுள்ளனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் அவன் பேருந்துக்குள்ளேயே இருந்துள்ளான். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான் என்றார் ஸ்ரீதர
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புதிய தலைநகரம்
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புதிய தலைநகரம் உருவாகி வருகிறது. அபுதாபி அருகே உள்ள கலீபா சிட்டியில் இந்த தலைநகரம் அமையவுள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகராக தற்போது அபுதாபி உள்ளது. அபுதாபியில் நாளுக்கு நாள் போக்குவரத்து உள்ளிட்ட நெரிசல்கள் அதிகரித்து வருவதால், புதிய தலைநகரை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.அதன்படி அபுதாபிக்கு அருகில் 15 கி.மீ தொலைவில் உள்ள கலீபா சிட்டி என்ற நகரை புதிய தலைநகராக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.ஒரு முழுமையான அரபு நகராக கலீபா சிட்டி விளங்கும் என புதிய தலைநகர் நிர்மானத் திட்டத்தின் பொறுப்பாளரும், நகர்ப்புற திட்டக் கவுன்சிலின் இயக்குநருமான அல் அஹ்பாபி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், புதிய தலைநகரம் 4,900 ஹெக்டேர் பரப்பளவில் அமையும். புதிய தலைநகருக்கும், தற்போதைய நகருக்கும் இடையிலான தூரம் 15 முதல் 20 கிமீ இருக்கும்.25 ஆண்டுளில் இங்கு 30 லட்சம் பேர் குடியமருவார்கள். அனைத்து அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகங்கள், அமைச்சரவை தலைமை அலுவலகங்கள், உள்ளூர் அரசு அலுவலகங்கள் புதிய தலைநகரிலிருந்து செயல்படும். இதுதவிர தூதரகங்கள், தூதரக அலுவலகங்களும் இங்கு இடம் பெயரும்.குடியிருப்புகள், கண்காட்சி அரங்குகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் புதிய நகரில் இடம் பெறும் என்றார் அவர்.