அரியலூர்: "அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்' இதுபற்றி மாவட்ட கலெக்டர் சுடலைகண்ணன் கூறியுள்ளதாவது: சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி(எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்பட) பயில்பவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கபடுகிறது. இதற்கான தகுதிகள்: ப்ளஸ் 2 படிப்பில், கடந்த (2007-2008) ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். * அதேபோல, சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பட்ட மேற்படிப்புக்கான கல்வி உதவி தொகை வழங்கபடுகிறது. இதன்படி, ப்ளஸ் 1 முதல், ஆராய்ச்சி கல்வி வரை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்படும். பள்ளி தகுதிகள்: அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனங்கள் கல்லூரிகளில் கடந்த (2007-2008) ஆண்டின் பள்ளி இறுதி தேர்வில் 50சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வழங்கப்படும் கல்வி உதவி தொகை பற்றிய விபரம்: ப்ளஸ் 1 முதல் ப்ளஸ் 2 வரை உள்ள வகுப்புகளுக்கு சேர்க்கை மற்றும் படிப்பு கட்டணம் உள்பட ரூபாய் ஏழு ஆயிரம், பராமரிப்புக் கட்டணமாக விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு ரூபாய் இரண்டாயிரத்து 350, விடுதி வசதியின்றி பயில்பவர்களுக்கு ரூபாய் ஆயிரத்து 400 வழங்கபடும். ஐ.டி.ஐ., மற்றும் ஐ.டி.சி., நிறுவனங்களில் தொழில்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை மற்றும் படிப்பு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரம், விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு பராமரிப்பு கட்டணமாக ரூபாய் இரண்டாயிரத்து 350, விடுதி வசதியின்றி பயில்பவர்களுக்கு ரூபாய் ஆயிரத்து 400 வழங்கப்படும். இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கு சேர்க்கை கட்டணமாக ரூபாய் மூன்றாயிரத்து 500, விடுதியில் தங்கி பயில ரூபாய் மூன்றாயிரத்து 350, விடுதியின்றி பயில்பவர்களுக்கு ரூபாய் மூன்றாயிரத்து 300 வழங்கப்படும். ஆராய்ச்சி படிப்பு பயிலும், மாணவ, மாணவிகளுக்கு பராமரிப்புக் கட்டணமாக விடுதியில் தங்கி பயில ரூபாய் ஐந்தாயிரத்து 100, விடுதியின்றி பயில்பவர்களுக்கு ரூபாய் மூன்றாயிரத்து 300 வழங்கப்படும்.
சிறுபான்மை மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
அதிரை/முஸ்லிம் செய்திகளை திரிக்கும் தினமலர
அலுவலகத்தில் பணியாற்றிய சக பெண்ஊழியரிடம் பாலியல் சில்மிசம் செய்து நாறிப்போன பின்னணி கொண்டது முதல் "சண்டேன்னா ரெண்டு" என்ற ஆபாச/வக்கிர விளம்பரத்துடன் பொய்ச்செய்திகளை முந்தித்தரும் தினமல(ர்)ம், முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை திரித்தும் ஆதாரம் இன்றியும் எழுதி, முஸ்லிம்கள்மீது வாசிப்பவருக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் செய்திகளைத் தருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால் தினமலரை "தினமலம்" என்று அழைக்கிறார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை உலக அதிசயமாக்கவும், இல்லாத ராமர் பாலத்தை நாசா விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்டதாகவும் புழுகும் திறமை மற்ற பத்திரிக்கைகளைவிட தினமலருக்குக் கொஞ்சம் "ஜாஸ்தி"
இந்திய கட்டிடம் ஒன்று உலகப்புகழ் பெறுவதால் இந்தியராகிய நமக்குப் பெருமை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.தினமல(ர்)த்தின் நோக்கம் முஸ்லிம்களின் பாரம்பர்ய அடையாளத்தைச் சொல்லும் மொகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹான் கட்டிய தாஜ் மஹாலை பின்னுக்குத் தள்ளி மதுரை மீனாட்சியம்மன் கோவிலை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதாலேயே தமிழ் பத்திரிக்கைகளில் தினமல(ர்)ம் மட்டுமே ஒரு வருடத்திற்கும் மேலாக இதை விளம்பரப்படுத்தி பக்கத்தையும் நேரத்தையும் வீணடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகமலர் என்ற பெயரில் பார்ப்பனச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து, கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியாரின் அருளுரைகளை எழுதி வருவதோடு, தாழ்த்தப்பட்ட இந்துக்களின் தெய்வ வழிபாட்டை மூடநம்பிக்கை என்பதாகவும், அசைவம் சாப்பிடுவதால் உடலுக்குக் கேடு; மாட்டு மூத்திரம் (கோமியம்) உடலுக்கு நல்லது; மருத்துவக் குணமுள்ளது என்றெல்லாம் எழுதி தனது மேல்சாதித் திமிரை அவ்வப்போது காட்டியும் வருகிறது.
தமிழ் நாளிதழ் என்ற பெயரை வைத்துக் கொண்டு "நச்" நறுக்" "சதக்" "ஏவ்" "ஸ்வாஹா" என்றெல்லாம் தமிழரையும் தமிழையும் கிண்டலடிக்கும் தமிழர் விரோத தினமல(ர்)ம் முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான சிறுசெய்தியாக இருந்தாலும் பேணை பெருமாளாக்கித் தேவையற்ற வெறுப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்துவதை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது.
தவ்பீக் குறித்து பரபரப்பான செய்திகள் என்ற பெயரில் இல்லாததும் பொல்லாததுமாக எழுதிவருவதை அதிரையைப் பற்றியும் தவுபீக் பற்றியும் அறியாதவர்கள் வேண்டுமானால் நம்பலாம். உள்ளூர்வாசிகளால் இதை எப்படி நம்பமுடியும்?
கடந்த நான்கு நாட்களாக தவ்பீக் பற்றிய செய்திகளை தினமலர் எழுதும் விதம் அதிராம்பட்டினம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தினமலரின் வெறுப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.தன்மீதான வழக்குகளை நடத்தக் கஷ்டப்பட்டுவரும் நபர் ஹவாலா பிசினஸ் செய்து இயங்கி வருவதாகச் சொல்வது நகைப்பிற்குறியது. .
"பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பணத்துக்காக மட்டுமே "ஹவாலா' தொழிலில் ஈடுபடுவோரால், வரி ஏய்ப்பு மட்டுமே நடக்கிறது.ஆனால், மத அடிப்படைவாதிகள் இது போன்ற தொழிலில் களமிறங்குவது, நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தானது" என்று ஹவாலாவை மார்வாடி சேட்கள் செய்து வருவதை நியாயப்படுத்தியுள்ளது. தேசதுரோகச் செயலை யார் செய்தாலும் தேசத்திற்கே ஆபத்து என்று சொல்லாமல் முஸ்லிம்கள் செய்தால் மட்டுமே ஆபத்து என்பதுபோல் எழுதியிருப்பது அயோக்கியத் தனத்தின் உச்சம்!
மேலும், "தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர், வெளிநாட்டில் வேலை செய்கின்றனர்.இவர்களில் பலர், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பும் போது, அன்னிய செலாவணி சட்டவிதிகளை பின்பற்றுவதில்லை. மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து "ஹவாலா' ஏஜென்ட் வழியாக பணத்தை அனுப்புகின்றனர்; இதற்கு "உண்டியல் டிரான்ஸேக்ஷன்' என்ற அடைமொழியும் உண்டு"
என்று எழுதி இருப்பதன் மூலம் மேற்கண்ட ஊர்மக்கள் மட்டும்தான் தமிழகத்தில் ஹவாலா மூலம்பணம் அனுப்பி வருவதாகவும் மற்றவர்கள் வங்கிகள் மூலமே பணப்பரிவர்த்தனை செய்வதாகவும் காழ்புணர்வுடன் எழுதியுள்ளதும். மேற்குறிப்பிட்ட ஊர்களில் முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டால் தினமல(ர்)த்தின் வெறி தெளிவாக விளங்குகிறது.
தொடர்புடைய தினமல(ர்)ம் நாளிதழ் செய்திகளின் சுட்டிகள்:
http://www.dinamalar.com//Sambavamnewsdetail.asp?News_id=2022
http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=2022&cls=row3&ncat=TN
http://www.dinamalar.com//kutramnewsdetail.asp?News_id=606
இனியும் தினமலர் முஸ்லிம்கள் குறித்த செய்திகளில் காழ்புணர்வைக் கொட்டி எழுதி வந்தால், தினமலர் பரவலான அதிரை மற்றும் முஸ்லிம் வாசகர்களை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.
நன்றி : அதிரை எக்ஸ்ப்ரெஸ்
பள்ளிகளில் படமெடுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாம்பு ! நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதை.
மதவாத நஞ்சை மாண வர்கள் மத்தியில் விதைக்கும் கேடு கெட்ட செயல்தானே? "அரசு விழிக்கட்டும்! ஆரிய விரியன்களை அடக்கட்டும்"
செங்கற்பட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் மேனிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்காக செங்கற்பட்டு நகராட்சியின் எதிர்ப்பையும் புறந்தள்ளி 1967-இல் தமிழ்நாடு அரசே 5 ஏக்கர் நிலத்தினை இலவசமாக அளித்துள்ளது. (G.O. M.S. No.1461 Revenue Dept dated 24.8.1967).
ஒரு கல்வி நிறுவனம் என்கிற காரணத்தால் அரசு நிலத்தை இனாமாக வழங்கியுள்ளது.ஆனால் ராமகிருஷ்ணர் பெயரில் பள்ளி நடத்தும் அந்த நிருவாகம். அப்பள்ளியை ஆர்.எஸ்.எஸின் பாசறையாக, பயிற்சிக்கூடமாக மாற்றி இருக்கிறது என்பதுதான் பயங்கரம்.
இருபது நாள்கள் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. வீர வாத்ய அணி வகுப்புடன் (17.5.2008) சீருடை அணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணி வகுப்பும் நடத்தப்படுகின்றது.
இதற்கான துண்டு அறிக்கைகளும் ஆயிரக்கணக்கில் பொது மக்களிடம் விநியோகிக்கவும் பட்டுள்ளன.ஆர்.எஸ்.எஸ் என்பது நான்கு முறை மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.
காந்தியாரைப் படுகொலை செய்த பாசிசக் கூட்டமாகும். இந்தியாவில் நடைபெற்றுள்ள பல்வேறு மதக்கலவரங்களுக்கும் சூத்ரதாரியாக இருந்திருக்கிறது என்பதை அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணையங்கள் அதிகாரப் பூர்வ அறிக்கைகள் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
1925-இல் ஆர்.எஸ்.எஸ். தோற்றுவிக்கப் பட்டது என்றால் 1927-ஆம் ஆண்டிலேயே நாக்பூரில் வகுப்புக் கலவரத்தை நடத்தத் தொடங்கி விட்டனர்.
கபூர் கமிஷன், டி.பி. மதன் கமிஷன், ரகுபார் தயாள் கமிஷன், ஜெகன்மோகன் கமிஷன், நீதிபதி ஜிதேந்திர, நாராயண் கமிஷன், நீதிபதி பி. வேணுகோபால் கமிஷன் என்று கமிஷன்களின் நீண்ட பட்டியல் உண்டு.இத்தனை ஆணையங்களும் (Commission) ஒன்றுபோல பல்வேறு இடங்களிலும் தூண்டி விடப்பட்ட கலவரங்களுக்குக் காரணகர்த்தாவாக ஆர்.எஸ்.எஸ். இருந்திருக்கிறது என்று திட்டவட்டமாக அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளன.
இந்த ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பலுக்கு வெளிநாட்டிலிருந்து ஏராளமான பணம் வந்து குவித்து கொண் டிருக்கிறது.தன்னார்வத் தொண்டு என்ற பெயரில் இந்தியாவைச் சேர்ந்த 30 ஆயிரம் அமைப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன.
இங்கிலாந்தில் பாசிச அமைப்பான இந்த ஆர்.எஸ்.எஸ்., தன்னை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டுள்ளது. குஜராத் பூகம்பத்தை ஒட்டி இந்தச் சங்பரிவார்; கும்பல் திரட்டிய தொகை பல கோடியாகும்.
பூகம்ப நிவாரணத் துக்காகத் திரட்டப்பட்ட பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய் சேர்ந்திடவில்லை. மதவெறி வளர்வதற்குத்தான் பயன்படுத்தப்பட்டது.
தென் கிழக்கு ஆசியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க ஒரு குழு இருக்கிறது. அதன் பெயர் அசாவ் (Asaw) என்பதாகும்.
அந்தக் குழுவினர் இந்தியா வந்து இங்கிலாந்தில் திரட்டப் பட்ட நிதி எந்த வகையில் செலவு செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தது.British Charity Hindu Extremism என்ற தலைப்பில் அந்தக் குழுவினர் 80 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அளித்தனர். ஆர்.எஸ்.எசும் மற்றும் சங்பரிவர்களும் தொண்டு நிறுவனங்கள் அல்ல இந்துத் தீவிரவாத அமைப்புகள், எனவே அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் என்ற பட்டியலிலிருந்து இவை நீக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்திலேயே முழக்கம் கேட்டதுண்டு.
குஜராத் பூகம்பத்துக்கு அளிக்கப்பட்ட நிதி மட்டுமல்ல; 2002-இல் குஜராத்தில் அரசு பயங்கரவாதத்தினால் 2000 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அல்லவா?
ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்த தவிர்த்தனரே - இரண்டு லட்சம் பேர் அகதி முகாம்களில் சரணடைந்தனரே அதற்காக அளிக்கப்பட்ட நிதியையும் ஆர்.எஸ்.எஸ். தவறாகவே பயன்படுத்தியது.
நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாயிற்று.
வசூலிக்கப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆர்.எஸ்.எஸ்., பள்ளிகளுக்குச் சென்றது.
இந்தப் பின்னணியைத் தெரிந்து கொண்டால் செங் கற்பட்டில் இராமகிருஷ்ண மடம் நடத்தும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். முகாம் ஏன் நடக்கிறது என்பதற்கான காரணம் எளிதாகப் புரிந்துவிடும்.
கல்வி நிறுவனங்கள் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி கூடாது என அரசே சுற்றறிக்கை விட்டதுண்டு.
அதனைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து செங்கற்பட்டில் இராம கிருஷ்ணா பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆர்.எஸ்.எஸ். முகாமாக இயங்குகிறதே - எப்படி?
சிறுபான்மையினர் மீது வெறுப்பைக் கற்றுக் கொடுத்து பிள்ளைகளை வன்முறை வெறியர்களாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்களா?
5 ஏக்கர் நிலத்தை அரசு கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். முகாம் அமைக்கத்தானா?
மானமிகு மாண்புமிகு கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு இத்தகு பள்ளிகளில் நடவடிக்கைகளைக் கண்காணித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்விக் கூடங்கள் காவி மயமாகிவிடும்.
ராமகிருஷ்ணா விவே கானந்தர், வித்யசாலா பெயர் களில் இயங்கும் பள்ளிகள் கண்காணிக்கப்பட வேண்டும். வன்முறை விளைச்சல் கழனியாக உருவெடுத்துவிடும்.
பிள்ளைகளைப் படிக்க அனுப்புகிறோமா - வன் முறையாளர்களாக ஆவதற்கும் பயிற்சி பெற அனுப்பு கிறோமா?
செங்கற்பட்டு ராம கிருஷ்ண பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு அளிக்கப்பட்ட அய்ந்து ஏக்கர் நிலத்தையும் திரும்பப் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் அரசுக்குச் சொந்தமான பூங்காக்கள் போன்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்கிற சுற்றறிக்கை மீண்டும் ஒரு முறை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.
எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு பள்ளி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பேரணி குறித்து பச்சையாகத் துண்டு அறிக்கை அச்சிட்டுப் பொது மக்களுக்கும் வழங்கும்?
காவல்துறை இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்குப் பள்ளி நிருவாகம் கொடுத்திருக்கும் தலைப்பு - பண்புப்பயிற்சி முகாமாம்.என்ன அந்தப் பண்பு? இந்துத்துவாதானே?
இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தியாவில் வாழவே கூடாது என்கிற வக்கிரப்புத்திதானே!
மதவாத நஞ்சை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் கேடு கெட்ட செயல்தானே?
வடபுலத்திலே ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளில் புகட்டப்படும் நஞ்சு தமிழ்நாட்டிலும் கடை விரிக்கிறது என்பது வெளிப் படையாகவே தெரிகிறது.
"அரசு விழிக்கட்டும்! ஆரிய விரியன்களை அடக்கட்டும்"
(தகவல் உதவி: திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு கோவிந்தசாமி அவர்கள்- -) மின்சாரம். viduthalai.com
தினமலர்... கருத்து
வாழ்த்துக்கள்... தினமலரின் புதிய முகத்திற்கு... இணைய முகத்தை மாற்றி விட்டீர்கள்.. ஆனாலும் செய்தி முகத்திலும் கொஞ்சம் மாற்றத்தை கொண்டுவரலாம்... இதுதான் எங்களுடைய கோரிக்கை... கொஞ்சம் மத முக்கியத்துவத்தை குறையுங்கள்... எப்பொழுதும் 'கோவில்கள், பூஜைகள், ஆராதனைகள், தாக்ரே வந்தார்...போனார்... அத்வானி,மோடி... இது மாதிரியான ' பார்பன செய்திகளை கொஞ்சம் குறையுங்கள்... கொஞ்சமாவது...
