அதிரை/முஸ்லிம் செய்திகளை திரிக்கும் தினமலர

அதிரை/முஸ்லிம் செய்திகளை திரிக்கும் தினமலர்
அலுவலகத்தில் பணியாற்றிய சக பெண்ஊழியரிடம் பாலியல் சில்மிசம் செய்து நாறிப்போன பின்னணி கொண்டது முதல் "சண்டேன்னா ரெண்டு" என்ற ஆபாச/வக்கிர விளம்பரத்துடன் பொய்ச்செய்திகளை முந்தித்தரும் தினமல(ர்)ம், முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை திரித்தும் ஆதாரம் இன்றியும் எழுதி, முஸ்லிம்கள்மீது வாசிப்பவருக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் செய்திகளைத் தருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால் தினமலரை "தினமலம்" என்று அழைக்கிறார்கள்.






சண்டேன்னா twice


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை உலக அதிசயமாக்கவும், இல்லாத ராமர் பாலத்தை நாசா விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்டதாகவும் புழுகும் திறமை மற்ற பத்திரிக்கைகளைவிட தினமலருக்குக் கொஞ்சம் "ஜாஸ்தி"

இந்திய கட்டிடம் ஒன்று உலகப்புகழ் பெறுவதால் இந்தியராகிய நமக்குப் பெருமை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.தினமல(ர்)த்தின் நோக்கம் முஸ்லிம்களின் பாரம்பர்ய அடையாளத்தைச் சொல்லும் மொகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹான் கட்டிய தாஜ் மஹாலை பின்னுக்குத் தள்ளி மதுரை மீனாட்சியம்மன் கோவிலை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதாலேயே தமிழ் பத்திரிக்கைகளில் தினமல(ர்)ம் மட்டுமே ஒரு வருடத்திற்கும் மேலாக இதை விளம்பரப்படுத்தி பக்கத்தையும் நேரத்தையும் வீணடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகமலர் என்ற பெயரில் பார்ப்பனச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து, கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியாரின் அருளுரைகளை எழுதி வருவதோடு, தாழ்த்தப்பட்ட இந்துக்களின் தெய்வ வழிபாட்டை மூடநம்பிக்கை என்பதாகவும், அசைவம் சாப்பிடுவதால் உடலுக்குக் கேடு; மாட்டு மூத்திரம் (கோமியம்) உடலுக்கு நல்லது; மருத்துவக் குணமுள்ளது என்றெல்லாம் எழுதி தனது மேல்சாதித் திமிரை அவ்வப்போது காட்டியும் வருகிறது.

தமிழ் நாளிதழ் என்ற பெயரை வைத்துக் கொண்டு "நச்" நறுக்" "சதக்" "ஏவ்" "ஸ்வாஹா" என்றெல்லாம் தமிழரையும் தமிழையும் கிண்டலடிக்கும் தமிழர் விரோத தினமல(ர்)ம் முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான சிறுசெய்தியாக இருந்தாலும் பேணை பெருமாளாக்கித் தேவையற்ற வெறுப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்துவதை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது.

தவ்பீக் குறித்து பரபரப்பான செய்திகள் என்ற பெயரில் இல்லாததும் பொல்லாததுமாக எழுதிவருவதை அதிரையைப் பற்றியும் தவுபீக் பற்றியும் அறியாதவர்கள் வேண்டுமானால் நம்பலாம். உள்ளூர்வாசிகளால் இதை எப்படி நம்பமுடியும்?

கடந்த நான்கு நாட்களாக தவ்பீக் பற்றிய செய்திகளை தினமலர் எழுதும் விதம் அதிராம்பட்டினம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தினமலரின் வெறுப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.தன்மீதான வழக்குகளை நடத்தக் கஷ்டப்பட்டுவரும் நபர் ஹவாலா பிசினஸ் செய்து இயங்கி வருவதாகச் சொல்வது நகைப்பிற்குறியது. .

"பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பணத்துக்காக மட்டுமே "ஹவாலா' தொழிலில் ஈடுபடுவோரால், வரி ஏய்ப்பு மட்டுமே நடக்கிறது.ஆனால், மத அடிப்படைவாதிகள் இது போன்ற தொழிலில் களமிறங்குவது, நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தானது" என்று ஹவாலாவை மார்வாடி சேட்கள் செய்து வருவதை நியாயப்படுத்தியுள்ளது. தேசதுரோகச் செயலை யார் செய்தாலும் தேசத்திற்கே ஆபத்து என்று சொல்லாமல் முஸ்லிம்கள் செய்தால் மட்டுமே ஆபத்து என்பதுபோல் எழுதியிருப்பது அயோக்கியத் தனத்தின் உச்சம்!

மேலும், "தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர், வெளிநாட்டில் வேலை செய்கின்றனர்.இவர்களில் பலர், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பும் போது, அன்னிய செலாவணி சட்டவிதிகளை பின்பற்றுவதில்லை. மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து "ஹவாலா' ஏஜென்ட் வழியாக பணத்தை அனுப்புகின்றனர்; இதற்கு "உண்டியல் டிரான்ஸேக்ஷன்' என்ற அடைமொழியும் உண்டு"

என்று எழுதி இருப்பதன் மூலம் மேற்கண்ட ஊர்மக்கள் மட்டும்தான் தமிழகத்தில் ஹவாலா மூலம்பணம் அனுப்பி வருவதாகவும் மற்றவர்கள் வங்கிகள் மூலமே பணப்பரிவர்த்தனை செய்வதாகவும் காழ்புணர்வுடன் எழுதியுள்ளதும். மேற்குறிப்பிட்ட ஊர்களில் முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டால் தினமல(ர்)த்தின் வெறி தெளிவாக விளங்குகிறது.

தொடர்புடைய தினமல(ர்)ம் நாளிதழ் செய்திகளின் சுட்டிகள்:

http://www.dinamalar.com//Sambavamnewsdetail.asp?News_id=2022

http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=2022&cls=row3&ncat=TN

http://www.dinamalar.com//kutramnewsdetail.asp?News_id=606

இனியும் தினமலர் முஸ்லிம்கள் குறித்த செய்திகளில் காழ்புணர்வைக் கொட்டி எழுதி வந்தால், தினமலர் பரவலான அதிரை மற்றும் முஸ்லிம் வாசகர்களை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

நன்றி : அதிரை எக்ஸ்ப்ரெஸ்