லாஸ் ஏஞ்செலஸ்: பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார். தனது பெயரையும் மிகயீல் எனவும் அவர் மாற்றி விட்டார்.
பனோராமா என்ற இதழின் இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.. தான் இஸ்லாமின் ஐந்து கடமைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், பெயரை மிகயீல் என மாற்றிக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது மத மாற்றத்தை அறிவிப்பேன் எனவும் ஜாக்சன் இந்த இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பஹ்ரைனில் செட்டில் ஆகிறார்:
மேலம் விரைவில் பஹ்ரைனுக்குப் போய் ஜாக்சன் செட்டிலாகப் போவதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே அவர் செயற்கைத் தீவு ஒன்றில் இடம் வாங்கிப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
தனது மத மாற்றம் குறித்து நெருக்கமானவர்களிடம் ஜாக்சன் பேசுகையில், எனது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு சரியான மதமாக இஸ்லாம் உள்ளது. யூதர்கள் எல்லாம் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் எனக் கூறினாராம் ஜாக்சன். தொடர்ந்து ஜாக்சன் கூறுகையில், இந்த அட்டைப் பூச்சிகளால் நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். யூதர்கள் எல்லாம் நிறைய சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரிய வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள், கார்கள், வசதிகள் என சந்தோஷமாக இருக்கிறார்கள். இதெல்லாம் அவர்களின் சதி செயலால் கிடைப்பவை..
விரைவில் எனது ஸ்டுடியோவையும், சொத்துக்களையும் அமெரிக்காவிலிருந்து பஹ்ரைனுக்கு மாற்றிக் கொள்ளப் போகிறேன். அமெரிக்காவில் இதுவரை எனக்குக் கிடைக்காத சுதந்திரம் பஹ்ரைனில் கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜாக்சன்.
சமீபத்தில் லாஸ் ஏஞ்செலஸில் உள்ள தனது நண்பரின் வீட்டில், குரான் முன்பு தான் இஸ்லாமில் நம்பி்ககை வைத்துள்ளதாக சத்தியம் செய்தாராம் ஜாக்சன். அங்குதான் அவர் முறைப்படி இஸ்லாமியராகவும் மாறினார் என்று கூறப்படுகிறது.
எளிமையாக நடந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு இமாம் கலந்து கொண்டுள்ளார். தரையில்,விரிக்கப்பட்டிருந்த துணியில், தலையில் தொப்பியோடு ஜாக்சன் அமர்ந்திருக்க, அவருக்கு இஸ்லாம் மத மார்க்கப்படி மத மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஷேக் போட்ட வழக்கு:
இதற்கிடையே, பஹ்ரைன் இளவரசர் அப்துல்லா அல் கலீபா ஜாக்சன் மீது லண்டன் கோர்ட்டில் தொடர்ந்துள்ள ஒரு வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. அதில் ஜாக்சன் ஆஜராக வேண்டும். இந்த நிலையில் அவரது மத மாற்ற செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் அவர் பஹ்ரைனில் குடியேறப் போவதாகவம் அந்த செய்தி கூறுவது முக்கியத்துவம் வாய்ந்தது.
ரெக்கார்டிங் காண்டிராக்டை ஜாக்சன் மீறியதாக பஹ்ரைன் இளவரசர் லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.