ஈரானிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பகல் மூன்று மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் அமீகரத்தில் எதிரொலித்துள்ளது. ஈரான் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.இந் நிலநடுக்கம் துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது.இதையடுத்து கட்டடங்கள், அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பாதிப்பு குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை.
- தட்ஸ் தமிழ் செய்திகள்
ஈரான்-அமீரகத்தில் நிலநடுக்கம்
சாலை விபத்தில் மூன்று இந்தியர்கள் உள்பட நான்கு பேர் பலி
துபாய்: ஷார்ஜாவில் நடந்த சாலை விபத்தில் மூன்று இந்தியர்கள் உள்பட நான்கு பேர் பலியானார்கள்.
ஷார்ஜாவில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஒரு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். முக்கியச் சாலை ஒன்றுக்கு வந்த அந்த வேன், எதிர் திசையில், மணல் ஏற்றி வந்த நீண்ட டிரெய்லர் இணைக்கப்பட்ட லாரி வருவதை அறியாமல் சாலையில் நுழைந்தது.
அப்போது மணல் லாரி, தொழிலாளர்கள் இருந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் இரு வாகனங்களும் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டன. மணல் ஏற்றி வந்த டிரெய்லர் லாரி படு வேகமாக வந்ததால் மோதிய வேகத்தில், அதன் பின்புறம் இணைக்கப்பட்டிருந்த டிரெய்லர் கழன்று, தொழிலாளர்கள் இருந்த வாகனத்தின் மீது ஏறி விழுந்து நசுக்கியது.
இதில் அதில் இருந்த மூன்று இந்தியர்களும், ஒரு பாகிஸ்தானிய தொழிலாளியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்த நால்வரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
துபாய்: நீல ரத்னக் கற்களில் உலகின் மிகச் சிறிய குரான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த நீல ரத்னக் கற்களில் உலகின் மிகச் சிறிய குரானை மிர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.
10,000 குரான் வாசகங்கள் இந்த குரானில் பொறிக்கப்பட்டுள்ளன. 58 மி.மீ. அகலமும், 98 மி.மீ. உயரமும் கொண்ட 20 நீல ரத்னக்கல் பட்டிகளில் இந்த வாசகங்கள் வெண்தங்கம் என்றழைக்கப்படும் பிளாட்டினம் உலோகத்தால் எழுதப்பட்டுள்ளன.
துபாயில் கடந்த ஏப்ரல் 23 முதல் 26 வரை நடந்த நகை கண்காட்சியில் இந்த குரான்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் விலை தலா 15,000 தினார்களாகும்.
இது பற்றி மிர் எண்டர்பிரைசஸ் நிர்வாக மேலாளர் டாக்டர் மிர் மொக்தாரி கூறுகையில், 'மெக்கா' (MEQA - Micro Engineering of Quran as Art) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ரத்னக்கல் குரானை தயாரிக்க 2 வருடங்கள் பிடித்தன.
குரான் வாசகங்கள் விரல்களில் பட்டு சேதமடையாமல் இருக்கும் வகையில் அதன்மீது குவார்ட்ஸ் இழை பூச்சு அமைக்கப்பட்டுள்ளது.
குரானின் புனிதம் பாதுகாக்கப்படும்வகையில், மிக குறைந்த அளவிலேயே இந்த ரத்னக்கல் குரான்கள் தயாரிக்கப்பட்டன.
திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளை போற்றும் நினைவுப்பரிசாக இந்த குரான்களை வாங்கி வழங்கலாம் என்றார்.
இந்த குரான்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிலுள்ள வாசகங்களை படிப்பதற்கு வசதியாக பூதக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துபாய்: 4 மணி நேரம் பஸ்சுக்குள் அடைபட்ட எல்.கே.ஜி. சிறுவன் பலி
துபாய்: அபுதாபியில், பள்ளி பேருந்தில் நான்கு மணி நேரம் அடைபட்ட கேரளாவைச் சேர்ந்த நான்கு வயது எல்.கே.ஜி குழந்தை மூச்சித் திணறி இறந்தான்.
கேரளாவைச் சேர்ந்த ஆதிஷ் என்கிற அந்த நான்கு வயது சிறுவன், அபுதாபியில் உள்ள மெர்ரி லேன்ட் கின்டர்கார்டன் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். வியாழக்கிழமை காலை பள்ளிப் பேருந்தில் அவன் ஏறினான். இந்த நிலையில் அன்று பிற்பகல் 12.50 மணிக்கு ஆதிஷின் தந்தைக்கு பள்ளியிலிருந்து போன் வந்தது. உங்கள் மகன் விபத்தில் சிக்கி விட்டான் என்று பள்ளித் தரப்பில் கூறியுள்ளனர்.
ஆதிஷின் தந்தை ஷெபின் ஸ்ரீதர் துபாய், ஜெபல் அலி பகுதியில் வேலை பார்த்து வருகிறார். பள்ளியிலிருந்து வந்த தகவல் குறித்து ஸ்ரீதர் கூறுகையில், போன் வந்ததும், நான் எனது மனைவி, தந்தை மற்றும் நண்பர்கள் ஷேக் கலீபா மருத்துவ நகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு போனது போது எங்களது மகன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்னர்.
எனக்கு அவன் ஒரே மகன். எனது மகன் எப்படி இறந்தான் என்பதை டாக்டர்கள் சொல்லவில்லை. ஆனால் அவன் மூச்சுத் திணறி இறந்துள்ளதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.
பள்ளிக்கு பேருந்தில் சென்ற அவன் பள்ளி வந்ததும் பேருந்திலிருந்து இறங்கவில்லை. காலை 7.35 மணிக்கு அவனை எனது தந்தை பேருந்தில் ஏற்றி அமர வைத்தார். ஆனால் பள்ளியை பேருந்து அடைந்ததும், அவன் இறங்கி விட்டானா, இல்லையா என்பதை ஓட்டுநரோ, நடத்துநரோ கவனிக்கவில்லை.
எனது மகன் உள்ளே இருப்பது தெரியாமலேயே பேருந்தை மூடியுள்ளனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் அவன் பேருந்துக்குள்ளேயே இருந்துள்ளான். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான் என்றார் ஸ்ரீதர
ஜாக் புதிய கிளை
அமீரக JAQH புதிய நிர்வாகிகள்
துபையில் JAQH புதிய நிர்வாகிகள்
தலைவர் : இஜாஸ் அஹ்மது கீழக்கரை
துணைத்தலைவர் : அப்துல் அஜீஸ் , தோப்புத்துறை
செயலாளர் : கோவை சிராஜ்
துணைச்செயலாள்ர் : முஹம்மது இஸ்மாயீல், தென்காசி
பொருளாளர் : முஹம்மது சுலைமான்
அபுதாபி JAQH புதிய நிர்வாகிகள்
தலைவர் : முஹைதீன் , தென்காசி
துணைத்தலைவர் : யூசுப் , கோவை
செயலாளர் : பைஸல் பிர்தவ்ஸி , திருவை
துணைத்தலைவர் : ஷரீப் , கோட்டாறு
பொருளாளர : முஹம்மது , ஏறுவடி
ஐகோடு பொறுப்பாளர் : உமர் , பொதக்குடி
பன்யாஸ் பொறுப்பாளர் :டி. சி. முஜாஹித், திருச்சி
ஷார்ஜாவில் JAQH புதிய நிர்வாகிகள்
தலைவர் : நஜ்முத்தீன், அத்திக்கடை ,
துணைத்தலைவர் : பொறியாளர் இஸ்ஹாக், கோட்டாறு,
செயலாளர் : அப்துர்ரஹ்மான், திருச்சி,
துணைச்செயலாளர் : கலீலுர்ரஹ்மான், மேலப்பாளயம்,
பொருளாளர் : இல்யாஸ் , மதுக்கூர் ,
ஷார்ஜாவில் இந்தியர் மர்ம சாவ
துபாய்: ஷார்ஜாவில் வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கிய இந்தியர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.ஷார்ஜாவில் அல் குபாய்பா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த குமார் (40) தன் மனைவியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் ஷார்ஜாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குமாரை அவரது குடும்பத்தினர் கொண்டு சேர்த்தனர்.வீட்டுக்குள் குமார் தூக்கு போட்டுக்கொண்டு தொங்கியதாகவும் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு வந்ததாகவும் மருத்துவமனையில் டாக்டர்களிடம் குமார் மனைவி கூறினார். ஆனால் குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.மேலும் குமாரின் தலையில் ரத்தக்காயம் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இதுபற்றி அல் கார்ப் போலீசாருக்கு புகார் செய்தனர். இதையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் குமாரின் உடலைக் கைப்பற்றினர்.அவரது தலையில் உள்ள காயம் பற்றி குமாரின் மனைவியிடமும், மற்றொரு உறவினரிடமும் போலீசார் விசாரித்தனர். இதற்கு, வீட்டின் உள்ளே மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய குமாரை தரையிறக்கும்போது எதிர்பாராதவிதமாக அவரது உடல் சரிந்து விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக குமாரின் மனைவி விளக்கம் அளித்தார்.ஆனால் இதில் திருப்தியடையாத போலீசார், குமாரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பினர்.குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பிணப் பரிசோதனை முடிவு வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
குவைத்: இந்தியர் பெருக்கத்தை கட்டுப்படுத்த கோரிக்கை
துபாய்: குவைத் நாட்டில் பெருகி வரும் இந்தியர் உள்ளிட்ட அன்னிய தொழிலாளர் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திற்கு முக்கிய அரசியல் பிரமுகர் அறிவுரை கூறியுள்ளார்.குவைத் தேசிய தேர்தல் வரும் மே மாதம் 17ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடவுள்ள சாத் அல்-கான்ஃபோர் என்ற முக்கிய அரசியல் பிரமுகர், குவைத்தில் பெருகிவரும் அன்னியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.அவர் கூறுகையில், குவைத் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய 30 லட்சம் ஆகும். இதில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். மொத்தம் 5,32,000 இந்தியர்களும், 2,51,000 வங்கதேசத்தினரும் வசிக்கின்றனர்.குவைத் மக்கள் தொகையில் 64 சதவீதத்தினர் அன்னிய தேசத் தொழிலாளர்கள். இந்தளவுக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவையில்லை. இதில் 12 சதவீதம் பேர்தான் உயர்கல்வித் திறன் உள்ளவர்கள். மற்றவர்கள் கீழ்மட்டத் தொழிலாளர்கள்.கீழ்மட்டத் தொழிலாளர்களால் நாட்டில் வீணாக தொற்றுநோய் ஏற்படும் அபாயம்தான் உண்டாகும். அதேபோல் திருமணமாகாத அன்னிய தொழிலாளர் பெருக்கத்தால் ஒருநாள் நிச்சயம் கேடுவிளையத்தான் போகிறது. எனவே இந்தப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த குவைத் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.குவைத்தின் பொருளாதாரமே பெட்ரோலியத்தையும் வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் தான் முழுக்க முழுக்க சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . - Thats Tamil.com
ஷார்ஜாவில் கலவரம் - 600 இந்தியர்கள் கைது
ஷார்ஜாவில் 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் திடீரென கல்வீச்சு மற்றும் கலவரத்தில் இறங்கினர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்து 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷார்ஜாவில் உள்ள டைகர் கான்ட்ராக்ட் கம்பெனியின் மூலம் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அனைவரும், சமீபத்தில் ஒரு தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டனர். அந்தக் கட்டடம் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை.இதனால் தங்களால் அங்கு தங்க முடியாது என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை அவர்களது முகாம் அதிகாரி கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அனைத்துத் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.துபாய் - ஷார்ஜா நெடுஞ்சாலையில், அல் நஹ்தா என்ற இடத்தில் திரண்ட அவர்கள் கல்வீச்சில் இறங்கினர். சாலையில் சென்ற வாகனங்கள் மீதும் கற்கள் வீசித் தாக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் 600க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்னர்.மொத்தம் 800 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பலர் தங்களது முகாமுக்குள் இருந்தபடி போராடினர். மற்றவர்கள்தான் சாலைக்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷார்ஜா போலீஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மோதலில் 15 தொழிலாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் ஷார்ஜாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கலவரம் பெரிதாகாமல் தடுக்க துபாய், அபுதாபி யிலிருந்து கலவரத் தடுப்புப் போலீஸார், சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.
துபாயில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சி
துபாய்: துபாயில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது.உலக அளவிலான கல்வி மற்றும் வேலை வாய்ப்புக் கண்காட்சி துபாயில் உலக வர்த்தக மையம் அருகேயுள்ள கண்காட்சி அரங்கில் நேற்று தொடங்கியது. வரும் 5ம் தேதி வரை இக்கண்காட்சி நடக்கிறது.இதில் தமிழகத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம், இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம், ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இதுதவிர, வளைகுடா, அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்களும் இதில் கலந்து கொண்டுள்ளன.மேலும், வேலைவாய்ப்புக்காக பல்வேறு வங்கிகள், வளைகுடா வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்களின் ஸ்டால்களும் இந்த கண்காட்சியில் உள்ளன. வெளிநாட்டு வேலை தேடும் தமிழக இளைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்பு என்று கண்காட்சிக்கு வந்தவர்கள் கூறினர்
குவைத்தில் மரண தண்டனையிலிருந்து தப்பிய இந்தியர்!
குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர், மத்திய அரசின் தலையீட்டால், மரண தண்டனையிலிருந்து தப்பி விடுதலையாகவுள்ளார்.நேபாளத்தைச் சேர்ந்தவர் ஜமுனா தாபா. இவர் கடந்த 2005ம் ஆண்டு குவைத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடன் பணியாற்றி வந்த கேரள மாநிலம் எலத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளகத் என்பவரை குவைத் போலீஸார் கைது செய்து அவர் மீது ஷரியத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த விசாரணையில் செளகத் குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இந்த நிலையில், தாபாவின் குடும்பத்தினர் தங்களுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடாக செளகத் கொடுத்தால் அவரை மன்னிப்பதாக அறிவித்தனர். இதையடுத்து மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டது.இதுகுறித்து கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், தாபாவின் குடும்பத்தினர் ரூ. 20 லட்சம் இழப்பீடு கொடுத்தால் செளகத்தை மன்னிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து செளகத் ரூ. 20 லட்சம் பணத்தை கோர்ட்டில் கட்டினால் அவரை விடுதலை செய்வதாக தெரிவித்தது.இதையடுத்து மத்திய அரசு இந்தப் பணத்தை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி மத்திய அரசு ரூ. 10லட்சம் பணத்தைக் கொடுக்கும். தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத இருவர் தலா ரூ. 5 லட்சம் தருவதாக தெரிவித்துள்ளனர்.இந்தப் பணம் ஜமுனா தாபாவின் குடும்பத்தாரிடம் வழங்கப்படும். எனவே விரைவில் செளகத் விடுதலை ஆவார் என்றார் ரவி.
சவூதி பஸ் விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 9 பேர் பலி
சவூதி அரேபியாவில் பெட்ரோல் டாங்கரும், பயணிகள் பஸ்சும் மோதி தீப்பிடித்ததில் 2 இந்தியர்கள் உள்பட 9 பயணிகள் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.சவூதி அரேபியாவில் 20 பாகிஸ்தானியர்கள், 15 இந்தியர்கள், 12 வங்கதேசத்தினர் ஒரு பேருந்தில் உம்ரா புனித யாத்திரை மேற்கொண்டிருந்தனர். பேருந்தை பஹ்ரைனை சேர்ந்த டிரைவர் ஓட்டிச் சென்றார்.ரியாத்- காசிம் நெடுஞ்சாலையில் உள்ள ஜலாஜில் என்ற இடத்தில் பேருந்து போய்க் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓர் ஆயில் டேங்கருடன் பேருந்து நேருக்கு நேராக மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.பஸ்ஸுக்குள் மளமளவென்று தீ பரவியதால் புகை மூட்டத்தில் வெளியேற முடியாமல் எல்லோரும் அலறினர். இந்த பயங்கர விபத்தில் 9 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியாயினர்.இதில் இந்தியாவை சேர்ந்த சர்புதின் அகமது, கே.டி.பி.பவாஸ் ஆகியோர் பலியானது தெரிந்தது. இறந்தவர்களின் உடல்கள் மிகவும் மோசமாக கருகி விட்டதால், இந்தியாவுக்கு கொண்டு செல்லாமல் சவூதியிலேயே இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்தது.இறந்தவர்களில் 5 பேரின் உடல் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகி உருக்குலைந்திருப்பதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி தெரிவித்தார். காயமடைந்தவர்கள் ரியாத் அருகே மஜ்மா என்ற இடத்தில் உள்ள கிங் காலீத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.காயமடைந்தவர்களில் எத்தனைபேர் இந்தியர்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. இதுவரை 2 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 பேர் சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். 18 பேருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. இதில் 4 பேர் அபாய கட்டத்தில் இருப்பதாக சவூதி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.விபத்துக்குள்ளான பஸ் இன்ஸ்யூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு
துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு
துபாய் கல்விக்கண்காட்சி ஏப்ரல் 2 முதல் 5 வரை துபாய் உலக வர்த்தக மையம் அருகேயுள்ள கண்காட்சி அரங்கில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மற்றும் திருச்சி, ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம், சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்கள் உட்பட இந்தியா, வளைகுடா, அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இக்கல்வி கண்காட்சியில் வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு வங்கிகள், வளைகுடா வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவையும் பங்கேற்றுள்ளன. வேலை தேடும் வளைகுடா பயணம் மேற்கொண்டுள்ள தமிழக இளைஞர்களுக்கு மிகுந்த பயனுடையதாய் இருக்கும் என கண்காட்சிக்கு வருகைபுரிந்துள்ள வேலை தேடும் தமிழக இளைஞர் நபீஸ் அஹமது தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் இந்திய மற்றும் வளைகுடா இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உயர்கல்வி குறித்த விபரங்களைச் சேகரித்து செல்வதாக சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மைய பிரதிநிதி சுபாஷ் தெரிவித்தார்.
This post was submitted by முதுவை ஹிதாயத்
துபாயில் காணாமல் போன தமிழர் கொலை செய்யப்பட்டதாக தகவல்
துபையில் தமிழரைக் காணவில்லை’ என்று நாம் ஒரு மாதத்திற் க்கு முன்பு அறிப்பு செய்திருந்தோம், ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்தே வந்தது, இப்போது அவர் ஒரு வாரத்திற்கு முன்பு துபை ஜுமைரா கடற்கடையில் முகங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் துபை காவல்துறை கண்டெடுத்தது. அவர் ஏன்? எதற்காக? கொலை செய்யப்பட்டார் என்பது மர்மமாகவும் கேள்விக்குறியாகவும் உள்ளது.
இந்த கொலை எப்படி நடந்திருக்கும் என்று, துபையில் நம் சகோதரர்கள் விபரங்களை கேட்டறிந்துக் கொண்டு இருக்கிறார்கள் முழு விபரம் கிடைத்தால் விரைவில் வெளியிடுவோம்.
இவர் தஞ்சை வடக்கு மாவட்ட திருநறையுரை சார்ந்த அப்துல் காதர் மகன் அப்துல்லாஹ். மேலும் இவர் துபாயில் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்தார்.
http://tvtntj.blogspot.com/2008/03/blog-post_28.html
உங்கள் தொழில் முன்னேற்றத்தில் நாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்...
துபாயில் வேலை வாங்கி தருவதாக மோசடி : போலி விசாக்கள் பறிமுதல்: இருவர் கைது
துபாயில் வேலை வாங்கி தருவதாக மோசடி : போலி விசாக்கள் பறிமுதல்: இருவர் கைது
சென்னை: துபாயில் வேலை வாங்கித் தருவதாக, பலரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெளி நாட்டு விசாக்கள் பறிமுதல் செய்யப் பட்டன. எஸ்பிளேனடு உதவிக் கமிஷனர் நாராயணமூர்த்தி மேற்பார்வையில், எஸ்பிளேனடு குற்றப்பிரிவு எஸ்.ஐ., ராஜேந்திரன், தனிப்படை தலைமைக் காவலர் காமராஜ், காவலர் தாவூத் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பாரிமுனை மூக்கர் நல்லமுத்து தெரு, வாணியர் தெரு சந்திப்பில் ஒரு நபர் நின்றிந்தார். சந்தேகத்தின் பேரில், அந்நபரிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தார். மேலும், அவரது பெட்டியில் வெளிநாட்டு விசாக்கள் ஏராளமாக இருந்தன. அதிர்ச்சியடைந்த போலீசார் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுõர் இக்பால் தெற்கு தெருவைச் சேர்ந்த காஜா மொய்தீன் என்பவரின் மகன் குலாம் தஸ்தகீர் 36 என்று தெரிந்தது. தொடர் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு: துபாயில் வேலை பார்த்த குலாம், இரண்டு வருடங்களுக்கு முன்பு கடையநல்லுõருக்கு திரும்பினார். பலரும் இவரிடம் வெளிநாட்டில் தங்களுக்கும் வேலை கிடைக்குமா என்று கேட்டனர். புரோக்கர்கள் மூலமாக, சிலருக்கு வேலை வாங்கிக் கொடுத்ததில் கமிஷன் குறைவாக கிடைத்ததால் நாளடைவில், இவரே தனியாக வெளிநாட்டிற்கு ஆட் களை அனுப்பத் தொடங்கினார். ஏராளமானோர் வேலைக்காக லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்தனர். ஓரிரு மாதங்கள் கழித்து துபாய் உள்பட பல்வேறு நாடுகளின் விசா தருவார். விசா கிடைத்த மகிழ்ச்சியில், வேலைக்குச் செல்பவர்கள் விமான நிலையத்திற்குச் சென்றால் குலாம் கொடுத்தது போலி விசா எனத் தெரியவரும். இப்படி ஏமாறுபவர்கள் குலாமிடம் பணத்தை கேட்டால் இழுத் தடிப்பார். கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த முகமது இப்ராகிம் என்பவரின் மகன் அஷ்ரத் அலி 51 என்பவருடன் கூட்டாக விசா அச்சடித்ததாக தெரிவித்தார். இதன்பேரில் அஷ்ரத் அலியை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, பறிமுதல் செய்யப் பட்ட விசாக்கள் போலியானவை என்று தெரியவந்துள்ளது. எஸ்பிளேனடு குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, மேற்படி இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கேரளாவில் அச்சடிப்பு: பறிமுதல் செய்யப்பட்ட விசாவில், ஐக்கிய அரபு நாடுகளின் விசாக்கள்தான் ஏராளமாக உள்ளன. இந்த விசாக் களை கேரளாவில் குறைந்த விலைக்கு அச்சடித்து, ஏமாறுபவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளனர். போலி விசா மூலமாக, எத்தனை நபர்களை வேலைக்கு அனுப்பியுள்ளனர் என்ற விவரங்களையும், போலி விசா அச்சடிப்பில் இவர்களுக்கு, பின்னணியாக செயல்படுபவர்கள் யார் என்ற விவரங்களையும், போலீசார் சேகரிக் கின்றனர். இக்கும்பல் பிடிபட்டால், பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.dinamalar.com/2008MAR21/district/chennai.asp
This post was submitted by முதுவை ஹிதாயத்.
துபாயில் தமிழக இளைஞர் தற்கொலை
துபாயில் தமிழக இளைஞர் தற்கொலை
துபாய் புளு ஸ்கை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அப்பாஸ் ஷேக் ( வயது சுமார் 21 ) 16.03.2008 ஞாயிறன்று பிற ஊழியர்கள் பணிக்குச் சென்ற நேரத்தில் பேனில் கயிறை மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.
எக்ககுடியைச் சேர்ந்த இவர்களது குடும்பம் தற்பொழுது முதுகுளத்தூரில் வசித்து வருகின்றனர்.
தனது மகன் துபாய் சென்று குடும்பத்திற்கு உதவியாக இருப்பான் என நினைத்த இவரது குடும்பத்தினருக்கு ஷேக்கின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேக்கிற்கு தகப்பனார், தாய், இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் இருக்கின்றனர்.
பிற ஊழியர்கள் பகலில் பணிக்குச் சென்று திரும்பி விட்டு அறைக் கதவைத் திறந்ததும் ஷேக் தூக்கில் தொங்கியது கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
துபாய் காவல்துறை சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக இந்திய தூதரக அலுவலகங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இந்தியர் தற்கொலை விகிதம் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடின்றி அதிகரித்து வருவது அதிர்ச்சியலைகளை இந்திய சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
This post was submitted by muduvaihidayath.
துபாயில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை நிகழ்ச்சி
துபாயில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை நிகழ்ச்சி
துபாயில் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் அல் கூஸ் பகுதியில் உணர்வாய் உன்னை எனும் தன்னம்பிக்கை நிகழ்ச்சியினை 20.03.2008 வியாழக்கிழமை காலை எட்டு மணி முதல் துபாய் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழக கிளை ஏற்பாடு செய்துள்ளது.
சமீபகாலமாக துபாயில் தொழிலாளர்கள் மத்தியில் குறிப்பாக இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது. தொழிலாளர்கள் குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்ந்து வருவதால் பல்வேறு காரணங்களால் மனச்சோர்வின் காரணமாகவும், தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உரிய ஆலோசனை பெற இயலாத சூழ்நிலையினைப் போக்க இத்தகைய தன்னம்பிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர்.
இனிமையான இத்தகைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 050 3851929 / 055 9761677 / 050 7640972 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
www.unarvaiunnai.cjb.net
This post was submitted by muduvaihidayath.
அபுதாபியில் சீரத்துந் நபி
அபுதாபியில் சீரத்துந் நபி
அபுதாபியில் 20 மார்ச் 2008 வியாழக்கிழமை மாலை ஐ.சி.சி. கேரளா வில்லா எண் 7 ல் நடக்க இருக்கிறது. மாலை 7 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில் ஆபேத் அத்தர் நபிகளாருக்கு முன்னும், பின்னும் இவ்வுலகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்த இருக்கிறார். அதனைத் தொடர்ந்து மௌலானா அஹமத் சிராஜ் உரை நிகழ்த்த இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு : டாக்டர் சலீம் கான் 050 4453768 / பாஸிஹ் 050 582 8905 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
This post was submitted by muduvaihidayath

