Showing posts with label அல் அயின். Show all posts
Showing posts with label அல் அயின். Show all posts

ஈரான்-அமீரகத்தில் நிலநடுக்கம்

ஈரானிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பகல் மூன்று மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் அமீகரத்தில் எதிரொலித்துள்ளது. ஈரான் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.இந் நிலநடுக்கம் துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது.இதையடுத்து கட்டடங்கள், அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பாதிப்பு குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை.

- தட்ஸ் தமிழ் செய்திகள்

மீண்டும் தொடங்கும் எமிரேட்ஸ்-கோவா விமான சேவை

துபாய்: ஐக்கிய அரபு எமிரேஸுக்கும், கோவாவுக்கும் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த மார்க்கத்தில் தனது விமான சேவையை நிறுத்தியது இந்தியன் ஏர்லைன்ஸ். இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் மீண்டும் இச்சேவையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவுக்கான பிராந்திய இயக்குநர் அபய் பதக் கூறுகையில், அடுத்த வாரம் முதல் துபாயிலிருந்து கோவாவுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன சேவை தொடங்கும் என்றார்.

கோவாவுக்கும், ஷார்ஜாவுக்கும் இடையே வாரம் இரு நேரடி விமானங்களை கடந்த மார்ச் 30ம் தேதி வரை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வந்தது. அதேபோல கடந்த டிசம்பர் மாதம், ஏர் இந்தியா நிறுவனம் தான் இயக்கி வந்த வாரம் ஒருமுறை குவைத் -துபாய் -கோவா விமான சேவையை நிறுத்தியது என்பது நினைவிருக்கலாம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 50 ஆயிரம் கோவா மாநிலத்தவர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய்: 4 மணி நேரம் பஸ்சுக்குள் அடைபட்ட எல்.கே.ஜி. சிறுவன் பலி

துபாய்: அபுதாபியில், பள்ளி பேருந்தில் நான்கு மணி நேரம் அடைபட்ட கேரளாவைச் சேர்ந்த நான்கு வயது எல்.கே.ஜி குழந்தை மூச்சித் திணறி இறந்தான்.

கேரளாவைச் சேர்ந்த ஆதிஷ் என்கிற அந்த நான்கு வயது சிறுவன், அபுதாபியில் உள்ள மெர்ரி லேன்ட் கின்டர்கார்டன் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். வியாழக்கிழமை காலை பள்ளிப் பேருந்தில் அவன் ஏறினான். இந்த நிலையில் அன்று பிற்பகல் 12.50 மணிக்கு ஆதிஷின் தந்தைக்கு பள்ளியிலிருந்து போன் வந்தது. உங்கள் மகன் விபத்தில் சிக்கி விட்டான் என்று பள்ளித் தரப்பில் கூறியுள்ளனர்.

ஆதிஷின் தந்தை ஷெபின் ஸ்ரீதர் துபாய், ஜெபல் அலி பகுதியில் வேலை பார்த்து வருகிறார். பள்ளியிலிருந்து வந்த தகவல் குறித்து ஸ்ரீதர் கூறுகையில், போன் வந்ததும், நான் எனது மனைவி, தந்தை மற்றும் நண்பர்கள் ஷேக் கலீபா மருத்துவ நகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு போனது போது எங்களது மகன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்னர்.

எனக்கு அவன் ஒரே மகன். எனது மகன் எப்படி இறந்தான் என்பதை டாக்டர்கள் சொல்லவில்லை. ஆனால் அவன் மூச்சுத் திணறி இறந்துள்ளதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.

பள்ளிக்கு பேருந்தில் சென்ற அவன் பள்ளி வந்ததும் பேருந்திலிருந்து இறங்கவில்லை. காலை 7.35 மணிக்கு அவனை எனது தந்தை பேருந்தில் ஏற்றி அமர வைத்தார். ஆனால் பள்ளியை பேருந்து அடைந்ததும், அவன் இறங்கி விட்டானா, இல்லையா என்பதை ஓட்டுநரோ, நடத்துநரோ கவனிக்கவில்லை.

எனது மகன் உள்ளே இருப்பது தெரியாமலேயே பேருந்தை மூடியுள்ளனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் அவன் பேருந்துக்குள்ளேயே இருந்துள்ளான். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான் என்றார் ஸ்ரீதர

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புதிய தலைநகரம்

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புதிய தலைநகரம் உருவாகி வருகிறது. அபுதாபி அருகே உள்ள கலீபா சிட்டியில் இந்த தலைநகரம் அமையவுள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகராக தற்போது அபுதாபி உள்ளது. அபுதாபியில் நாளுக்கு நாள் போக்குவரத்து உள்ளிட்ட நெரிசல்கள் அதிகரித்து வருவதால், புதிய தலைநகரை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.அதன்படி அபுதாபிக்கு அருகில் 15 கி.மீ தொலைவில் உள்ள கலீபா சிட்டி என்ற நகரை புதிய தலைநகராக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.ஒரு முழுமையான அரபு நகராக கலீபா சிட்டி விளங்கும் என புதிய தலைநகர் நிர்மானத் திட்டத்தின் பொறுப்பாளரும், நகர்ப்புற திட்டக் கவுன்சிலின் இயக்குநருமான அல் அஹ்பாபி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், புதிய தலைநகரம் 4,900 ஹெக்டேர் பரப்பளவில் அமையும். புதிய தலைநகருக்கும், தற்போதைய நகருக்கும் இடையிலான தூரம் 15 முதல் 20 கிமீ இருக்கும்.25 ஆண்டுளில் இங்கு 30 லட்சம் பேர் குடியமருவார்கள். அனைத்து அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகங்கள், அமைச்சரவை தலைமை அலுவலகங்கள், உள்ளூர் அரசு அலுவலகங்கள் புதிய தலைநகரிலிருந்து செயல்படும். இதுதவிர தூதரகங்கள், தூதரக அலுவலகங்களும் இங்கு இடம் பெயரும்.குடியிருப்புகள், கண்காட்சி அரங்குகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் புதிய நகரில் இடம் பெறும் என்றார் அவர்.

ஷார்ஜாவில் இந்தியர் மர்ம சாவ

துபாய்: ஷார்ஜாவில் வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கிய இந்தியர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.ஷார்ஜாவில் அல் குபாய்பா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த குமார் (40) தன் மனைவியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் ஷார்ஜாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குமாரை அவரது குடும்பத்தினர் கொண்டு சேர்த்தனர்.வீட்டுக்குள் குமார் தூக்கு போட்டுக்கொண்டு தொங்கியதாகவும் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு வந்ததாகவும் மருத்துவமனையில் டாக்டர்களிடம் குமார் மனைவி கூறினார். ஆனால் குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.மேலும் குமாரின் தலையில் ரத்தக்காயம் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இதுபற்றி அல் கார்ப் போலீசாருக்கு புகார் செய்தனர். இதையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் குமாரின் உடலைக் கைப்பற்றினர்.அவரது தலையில் உள்ள காயம் பற்றி குமாரின் மனைவியிடமும், மற்றொரு உறவினரிடமும் போலீசார் விசாரித்தனர். இதற்கு, வீட்டின் உள்ளே மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய குமாரை தரையிறக்கும்போது எதிர்பாராதவிதமாக அவரது உடல் சரிந்து விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக குமாரின் மனைவி விளக்கம் அளித்தார்.ஆனால் இதில் திருப்தியடையாத போலீசார், குமாரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பினர்.குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பிணப் பரிசோதனை முடிவு வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.