ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புதிய தலைநகரம்

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புதிய தலைநகரம் உருவாகி வருகிறது. அபுதாபி அருகே உள்ள கலீபா சிட்டியில் இந்த தலைநகரம் அமையவுள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகராக தற்போது அபுதாபி உள்ளது. அபுதாபியில் நாளுக்கு நாள் போக்குவரத்து உள்ளிட்ட நெரிசல்கள் அதிகரித்து வருவதால், புதிய தலைநகரை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.அதன்படி அபுதாபிக்கு அருகில் 15 கி.மீ தொலைவில் உள்ள கலீபா சிட்டி என்ற நகரை புதிய தலைநகராக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.ஒரு முழுமையான அரபு நகராக கலீபா சிட்டி விளங்கும் என புதிய தலைநகர் நிர்மானத் திட்டத்தின் பொறுப்பாளரும், நகர்ப்புற திட்டக் கவுன்சிலின் இயக்குநருமான அல் அஹ்பாபி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், புதிய தலைநகரம் 4,900 ஹெக்டேர் பரப்பளவில் அமையும். புதிய தலைநகருக்கும், தற்போதைய நகருக்கும் இடையிலான தூரம் 15 முதல் 20 கிமீ இருக்கும்.25 ஆண்டுளில் இங்கு 30 லட்சம் பேர் குடியமருவார்கள். அனைத்து அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகங்கள், அமைச்சரவை தலைமை அலுவலகங்கள், உள்ளூர் அரசு அலுவலகங்கள் புதிய தலைநகரிலிருந்து செயல்படும். இதுதவிர தூதரகங்கள், தூதரக அலுவலகங்களும் இங்கு இடம் பெயரும்.குடியிருப்புகள், கண்காட்சி அரங்குகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் புதிய நகரில் இடம் பெறும் என்றார் அவர்.