ரஸ் அல் கைமா: ஐக்கிய அரபு நாடுகளின் ரஸ் அல் கைமா நகரில் இந்தியரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.எமிரேட்ஸைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவரது தொழில் வளாகத்தில் அழுகிய நிலையில் கிடந்தது. அவரது பெயரை டி.கே. என்று மட்டும் போலீசார் தெரிவித்துள்ளார்.30 வயதான அவர் குடிப்பழக்கம் உள்ளவர் எனத் தெரிய வந்துள்ளது. பல நாட்களாக வேலைக்கும், தங்கியிருந்த அறைக்கும் வராததால் அது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் சக்ர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.பிரேதப் பரிசோதனையில் அவர் இயற்கையான மரணம் அடையவில்லை எனத் தெரியவந்துள்ளது.