துபாயிலிருந்து வந்த கண்டெய்னருக்குள் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் பதுக்கல் *தூத்துக்குடியில் சிக்கின தூத்துக்குடி : துபாயிலிருந்து தூத்துக்குடி தனியார் கம்பெனிக்கு வந்த கண்டெய்னருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரை டன் துப்பாக்கி தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் ராஜாத்தி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கம்பெனி உள்ளது. அதன் உரிமையாளராக முருகேசன், மேனேஜராக அதிசய குமார் ஆகியோர் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் துபாயிலிருந்து கப்பல் மூலம் அக்கம்பெனிக்கு கண்டெய்னர் ஒன்று வந்தது. நேற்று கம்பெனிக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த கண்டெய்னர் திறந்து பார்க்கப்பட்டது. அதனடியில் மொத்தம் அரை டன் எடை கொண்ட ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதுப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை தாளமுத்து நகர் போலீசார் பறிமுதல் செய்தனர். அதுகுறித்து டி.எஸ்.பி.,க்கள் முகமது கோரி, நடராஜ மூர்த்தி மற்றும் கியூபிரிவு, உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். சுங்க இலாகா அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கும்மிடிப்பூண்டி தனியார் கம்பெனியில் ராக்கெட் லாஞ்சர்கள் சிக்கின. அது போல தூத்துக்குடி கம்பெனிக்கு வந்த கண்டெய்னரிலும் ராக்கெட் லாஞ்சர்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களுக்கு ஒரு கேள்வி ?இன்றைய கால கட்டத்த்ல் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மீடியாக்கள் சித்தரிக்கப் பட்டு கைது செய்யப்ப் படுவதும் பின்னர் அனைத்து பத்திரிகைகளிலும் அது மாதக் கணக்கில் தலைப்பு செய்திகளாக இடம்பெறுவதும் நாம் அனைவரும் அறிந்த ஓன்று.இப்படி கைது செய்யப் படும் போலி தீவிர வாதிகள் பின்னர் எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்று விடுதலை ஆவது இன்று நம்மில் பலரும் அறிந்திராத ஓன்று.நிலைமை இப்படி இருக்க இன்று ஆயிரக் கணக்கில் டெட்டனேட்டர்கள் பிடிபடுவதும் ஒரு ஆயுதக் கிடங்கு என்று சொல்லும் அளவுக்கு துப்பாக்கி குடுகள் ராக்கெட் லான்செர்கள் போன்ற படுபயங்கரமான ஆயுதங்கள் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பிடிக்கப் படுகிறது. இது எந்த ஒரு முஸ்லிமுக்கும் சொந்தமானது இல்லை என்பதனால் இன்று பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக காண முடியவில்லை.இருந்தாலும் ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய கேள்வி என்னவென்றால் இத்தகைய ஆயுதங்கள் ஏன் எதற்க்காக பதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது, இதன் உண்மை பின்னணி என்ன எனபது பற்றி தான்.நீங்கள் ஒரு உண்மை இந்தியன் என்றால் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேளுங்கள் விடை தேட முயலுங்கள். நம் தாய் நாட்டை காப்பாற்றுங்கள்
ஒருங்கிணைத்தவர் Irai Adimai @ bayamairukku.blogspot.com