சென்னை ஆலந்தூர், ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ளது மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல். இந்த பள்ளி வளாகத்தில் சிறுவர்கள் படிப்பதற்கான மதரஸாவும் உள்ளது. அமைதியான முறையில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்தி வந்துகொண்டிருந்ததை பொறுக்க இயலாத பள்ளிவாசலுக்கு பக்கத்து வீட்டில் வசித்துவந்த சுப்பிரமணி என்பவர் தனது வீட்டு வாசலில் பிள்ளையார் சிலை ஒன்றையும், காவிக் கொடியையும் நட்டி பிரச்சினைக்கு சுழிபோட்டார்.
பள்ளிவாசலுக்கு அடுத்த வீட்டின் வாசலிலேயே பிள்ளையார் சிலை வழிபாடு நடத்துவது நாளை வீண் பிரச்சினைகளை வர வழைக்கும் என்பதை உணர்ந்த பள்ளி வாசல் நிர்வாகிகள் சுப்பிரமணியத்திடம் கேட்டதற்கு விதண்டாவாதம் பேசியிருக்கிறார். இதையடுத்து ஜமாஅத் நிர்வாகிகள் 10வது வார்டு தமுமுகவினரை அணுகினர். உடனடியாக 10வது வார்டு கிளை தமுமுக நிர்வாகிகளும், ஆலந்தூர் நகர நிர்வாகிகளும் காவல்துறையை அணுகினர்.

காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். இதற்கிடையில் சம் பவம் தமுமுகவினரால் துணை ஆணையர் வரதராஜுலு அவர் களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து துணை ஆணையர், காவல்துறையினருக்கு உத்தரவிட்டதன் பெயரில் சம்பந் தப்பட்ட சிலை உடனடியாக அகற்றப்பட்டதுடன் சுப்பிரமணியும் கைது செய்யப்பட்டார்.
சுப்பிரமணி ஏற்கனவே இதேபோன்று சிலை வைக்க முயற்சி செய்து தமுமுக புகாரின் பேரில் எச்சரித்து விடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக செயல்பட்டு பிரச்சினையைத் தீர்க்க உதவி செய்த தமுமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் ஜமாஅத் நிர்வாகிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர். துரிதமாக நடவடிக்கை எடுத்த துணை ஆணையர் வரதராஜுலு பாராட்டுக்குரியவரே.

Source : TMMK Website