பழனியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனத்வாலா மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவரது மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பள்ளிவாசல் செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.
இதில் கட்சியின் மாவட்ட தலைவர் சுலைமான், செயலாளர் பாரூக், நகர தலைவர் உபையதுல்லா, நகர் மன்ற தலைவர் ராஜமாணிக்கம், குருசாமி, கமிட்டி செயலாளர் அருள் செல்வன், த.மு.மு.க சாந்துமுகமது மற்றும் பள்ளிவாசல் அறங்காவலர்கள் சையது அபுதாகீர், அலி, சாகுல் ஹமீது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.