விருதுநகரைச் சேர்ந்த நசீர் அகமது மகள் ஜாஸ்மின்(18). இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கின்றார். ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் டிரைவர் ரெங்கராஜ். இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது ஜாஸ்மினுக்கும், ரெங்கராஜூக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டாக காதலித்து வரும் இவர்கள் உல்லாசமாக திரிந்தனர். இந்நிலையில் ஜாஸ்மினுக்கு திருமணம் செய்ய பெற்றோர், மாப்பிள்ளை பார்க்கத் துவங்கினர்.இதுபற்றி ரெங்கராஜிடம் ஜாஸ்மின் கூறினார். ""கோவிலில் திருமணம் செய்துகொள்ளலாம் புறப்பட்டுவா,'' என தெரிவித்ததும். ஜாஸ்மின் திருச்சி வந்தார். இருவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டு ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தனர். காதல் ஜோடிகளின் பெற்றோர்களிடம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். காதல் ஜோடிகள் மிகவும் மிகழ்ச்சியுடன் சென்றனர்இதற்க்கு முன்னும் இதுபோல பல பெண்கள் காதல் வலையில் விழுந்து தன்னுடைய பெற்றோர்களையும் உறவினர்களையும் மார்க்கத்தையும் மறந்து ஓடிப் போய் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் அவமானங்களை தேடி தந்த வரலாறு நிறைய உண்டு.ஆனால் அத்தகைய பெண்களின் தற்ப்போதைய வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டவர்களுக்கு தெரியும் இத்தகைய காதல் நாடகங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை அகோரம். இனிய சகோதரிகளே இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்.இவர்களின் உண்மை ரூபங்களை அறிந்துக் கொள்ளுங்கள்.
Thanks :bayamairukku.blogspot.com