பதில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை! எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் மிகவும் கடுமையான பதிலடியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் முஸ்தபா மொஹமத் நஜ்ஜார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்தவாரம் இஸ்ரேல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷால் மொஃபாஸ் ஒரு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஐ.நா. பொருளாதாரத் தடைகள் ஈரான் அணு ஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் ராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாதது" என்று கூறியிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் நஜ்ஜார் கூறியதாவது:எங்கள் ராணுவமும் தயார் நிலையிலேயே உள்ளது. எங்கள் மீது எவரேனும் தாக்குதல் நடத்த நினைத்தால் மோசமான பதிலடியை சந்திக்க வேண்டியதிருக்கும். இஸ்ரேல் அமைச்சர் மொஃபாஸ் மீது ஐ.நா. பாதுகாப்பு குழு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். (மூலம் - வெப்துனியா)