பெங்களூர் தமிழ்ச்சங்கம் தாக்குதல் : அமீரக தமிழர்கள் அமைப்பு கண்டனம்
பெங்களூர் தமிழ்ச்சங்கம், தமிழ் நிறுவனங்கள் மற்றும் தமிழர்கள் மீது தாக்குதல் கன்னட வெறியர்களைக் கண்டித்து அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் 30.03.2008 ஞாயிறன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் உடனடியாக நடுவண் அரசு இவ்விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் தமிழக அரசு கர்நாடக அரசுக்கு வழங்கும் அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சைபுதீன், முஸ்தாக், பரத், ரயீஸ், நயீம், அன்பழகன், சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.