அப்பாவிகளை கொல்வதில்லை-அல்கொய்தா

கத்தார்: அப்பாவிகளை கொல்வது எங்கள் இயக்கத்தின் வழக்கம் அல்ல என்று அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின்லேடனின் வலதுகரமான அய்மன் அல்ஜவாஹிரி கூறியுள்ளார்.அல்ஜவாஹிரி பேசியுள்ள புதிய ஆடியோவை அல்ஜசீரா டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில், எகிப்தில் அல்காய்தா மற்றும் அதன் ஆதரவு படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது அப்பாவிகள் பலியானது உண்மை. ஆனால் வேண்டுமென்றே இந்த உயிர்களை பறிக்கவில்லை. பலியான அப்பாவி மக்களை 'மனிதக் கேடயமாக' எதிரிகள் பயன்படுத்தியதால் நடந்த விளைவு.அல்ஜீரியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஐ.நா. சபைக்கு சொந்தமான கட்டடத்தை தாக்கியபோது அருகிலிருந்த மருத்துவமனை இடிந்து 60 பேர் பலியானார்கள்.ஐ.நா. சபை இஸ்லாமிய மதத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரி. அதனால் தாக்கினோம்.பின்லேடனுக்கு ஒரு குறையும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார். கவலை வேண்டாம். முழு ஆரோக்கியத்துடன் இருந்தாலும் எல்லோரையும் போல் ஒருநாள் இறக்கப் போகிறவர்தானே என்று பேசியுள்ளார் அல்ஜவாஹிரி.