துபாய்: துபாயில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது.உலக அளவிலான கல்வி மற்றும் வேலை வாய்ப்புக் கண்காட்சி துபாயில் உலக வர்த்தக மையம் அருகேயுள்ள கண்காட்சி அரங்கில் நேற்று தொடங்கியது. வரும் 5ம் தேதி வரை இக்கண்காட்சி நடக்கிறது.இதில் தமிழகத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம், இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம், ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இதுதவிர, வளைகுடா, அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்களும் இதில் கலந்து கொண்டுள்ளன.மேலும், வேலைவாய்ப்புக்காக பல்வேறு வங்கிகள், வளைகுடா வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்களின் ஸ்டால்களும் இந்த கண்காட்சியில் உள்ளன. வெளிநாட்டு வேலை தேடும் தமிழக இளைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்பு என்று கண்காட்சிக்கு வந்தவர்கள் கூறினர்