துபாயில் தமிழக அரசியல் பிரமுகரும், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், திராவிட முன்னேற்றக்கழக முக்கியப் பிரமுகருமான ஆயிரம் விளக்கு முஹம்மது உசேனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மே 1 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் ஸ்கை குரூப் இயக்குநர் கீழக்கரை செய்யது எம். அப்துல் காதர், பிரபல பாடகர் இறையன்பன் குத்தூஸ், ஏ. அஷ்ரப் அலி உள்ளிட்ட பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஷ்ரஃப் அலி செய்து வருகிறார். மேலதிக விபரம் பெற 050 625 46 28 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.