ராஸ் அல் கைமா சாலை விபத்தில் 2 இந்திய சிறுமிகள் பலி
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ராஸ் அல் கைமா பகுதியில் நடந்த சாலை விபத்தில் இரண்டு இந்திய சிறுமிகள் பரிதாபமாக பலியானார்கள்.
ராஸ் அல் கைமாவில் உள்ள இந்தியன் பள்ளியில், படித்து வந்த மாணவிள் சசினாஸ் ஜெயதாஸ் (5), ஜோஜி மாத்யூ குருவில்லா.
கடந்த 14ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவர்கள் பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கினர்.
சாலையின் எதிர்புறம் சசினாஸின் வீடு உள்ளது. அவள் சிறுமி என்பதால் சாலையைக் கடக்க ஜோஜி மாத்யூ குருவில்லா உதவினார். அப்போது வேகமாக வந்த கார் அவர்கள் மீது பலமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயடைந்தனர்.
சசினாஸின் தாயார் தனது வீட்டு வாசலில் மகளுக்காக, தனது இன்னொரு மகளுடன் காத்திருந்தபோது அவரது கண் முன்பாகவே இந்த விபத்து நடந்தது.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிப் பேருந்தின் பஸ் டிரைவரும், பேருந்தின் நடத்துநராக செயல்பட்டவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிறுமிகள் மீது மோதிய பேருந்தின் டிரைவரும் கைது செய்யப்பட்டார்.
ராஸ் அல் கைமா சாலை விபத்தில் 2 இந்திய சிறுமிகள் பலி
Labels:
Gulf,
India,
Ras Al Khamah,
Thamilagm,
Ulagam