சவுதி: சாலை விபத்தில் இந்தியர்கள் பலி
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் பேருந்தும் டிரக்கும் நேருக்குநேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில், இரண்டு இந்தியர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் ரியாத்தில் இருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அப்குவைக் என்ற இடத்தில், வியாழனன்று மாலை இந்த சம்பவம் நடந்ததாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் இறந்த 16 பேரில், பாகிஸ்தானியர்கள் 3 பேரும், பங்களாதேஷ் நாட்டவர்கள் 11 பேரும் அடங்குவர். இதுதவிர 18 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.