இந்தியா பற்றிய படிப்பு: ஆக்ஸ்போர்டு பல்கலை. அறிமுகம்
மாணவர்களிடையே இந்தியா தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளதால், இந்தியா பற்றிய முதுகலை அறிவியல் படிப்பை ஆகஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
சமகாலத்து இந்தியா (MSc in Contemporary India) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முதுகலை அறிவியல் படிப்பு, வரும் அக்டோபர் மாதம் துவங்கும் என்றும், இதில் இந்தியாவை பற்றியும் அதன் பொருளாதாரம் பற்றியும் கற்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை பெற்றுள்ள இந்தியா, தற்போது ஐடி மற்றும் வர்த்தக துறையில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து வருவதாக தெரிவித்த பல்கலைக்கழக பேராசிரியர் பார்பரா ஹாரிஸ், இந்தியா பற்றி படிப்பது மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலையில் படித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பற்றிய படிப்பு: ஆக்ஸ்போர்டு பல்கலை. அறிமுகம்
Labels:
Editorials,
India,
Kalvi,
Ulagam