துபாய் செல்லும் 'தமிழ் அரேபியா'
திருச்சி: தமிழ் அரேபியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் துபாயில் தனது ஒளிபரப்பை விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ் அரேபியா தொலைக்காட்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் ஆர்.உதயக்குமார் இதுகுறித்துக் கூறுகையில், துபாயில் எங்களது ஒளிபரப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். ஆரம்பத்தில் 2 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். பின்னர் 24 மணி நேர சேனலாக மாறும்.
துபாயைச் சேர்ந்த அஜ்மான் ஸ்டுடியோஸ் எல்எல்சியுடன் இணைந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம்.
உலகம் முழுவதும் தமிழர்கள் பரவியுள்ளனர். குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் அதிக அளவில் தமிழர்கள் உள்ளனர். அவர்களின் திறமைகளை, சாதனைகளை வெளியுலகுக்கு பறை சாற்றும் வகையிலேயே துபாயில் எங்களது விரிவாக்கத்தை திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிகழ்ச்சிகளை நைஜீரியா, எகிப்து, லிபியா, மாரிடானியா, சோமாலியா, துனிஸ், சூடான், மொராக்கோ, ஈரான், ஈராக், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், பாலஸ்தீனம், கத்தார், சவூதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுளில் பார்க்கலாம் என்றார் அவர்.
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
துபாய் செல்லும் 'தமிழ் அரேபியா'
Labels:
Dubai,
Editorials,
Gulf,
India,
Ras Al Khamah,
Thamilagm,
Ulagam