ஈரான் விண்வெளி ஆய்வு மையம் திறப்பு
ஈரானின் முதல் விண்வெளி ஆய்வு மையத்தை, அந்நாட்டு அதிபர் அகமது நிஜாத் திறந்து வைத்தார். இனி அந்நாட்டுக்கு தேவைப்படும் செயற்கைக்கோள்கள் இந்த மையத்தில் இருந்து ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள இந்த விண்வெளி மையத்தில், ஆய்வு செயற்கைக்கோள் (ஓமிட்), கட்டுப்பாட்டு அறை மற்றும் விண்வெளி ஏவுதளம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஓமிட் செயற்கைக்கோள் ஈரானிலேயே தயாரிக்கப்பட்டது என்பதும், வரும் மார்ச் 20ம் தேதி இது விண்ணில் ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு, 1,300-1,600 கிமீ தூரம் பாயும், ஷஹாப்-3 என்ற ஏவுகணையை ஈரான் பரிசோதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.