ஸ்டிரைக்: 45 இந்தியர்களுக்குத் தண்டனை!

துபாய்: ஸ்டிரைக் என்ற பெயரில் வேலை பார்க்காமல் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும் நடந்து கொண்டதாக கூறி 45 இந்தியத் தொழிலாளர்களுக்கு துபாய் நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

தங்களுக்கு அடிமாட்டு அளவுக்கு குறைந்த ஊதியம் தருவதை எதிர்த்தும், ஊதிய உயர்வு கோரியும் துபாயைச் சேர்ந்த பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் வேலைநிறுத்தம் செய்தனர். அந்த போராட்டத்தின்போது சில இடங்களில் தங்கியிருந்த முகாம்களில் தொழிலாளர்கள் பொருட்களை உடைத்து சேதப்படுத்தவும் செய்தனர்.

இதையடுத்து 45 இந்தியத் தொழிலாளர்களை துபாய் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சட்டவிரோதமாக ஸ்டிரைக் நடத்தியது, வன்முறை செயல்களில் ஈடுபட்டது, சொத்துக்களை சேதப்படுத்தியது, நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை போராட்டத்திற்குத் தூண்டியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தவறான செயல் தடுப்புக்கான துபாய் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜஸ்ஸம் பக்கீர், 45 பேருக்கும் தலா 6 மாத சிறைத் தண்டனை விதித்தார். தண்டனைக் காலம் முடிந்ததும், 45 பேரும் நாடு கடத்தவும் அவர் உத்தரவிட்டார்.

தீர்ப்பு குறித்து ஜஸ்ஸம் பக்கீர் கூறுகையில், இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு. இத்தகைய தீர்ப்பு இப்போதுதான் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு தொடர்பாக சட்டவிரோதமான செயல்களை நாட நினைக்கும் பிற தொழிலாளர்களுக்கு இது உறுதியான எச்சரிக்கையாக அமையும் என்றார்.

அபுதாபியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்

அபுதாபி: வளைகுடா நாடான அபுதாபியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதிய முடிவினை அபுதாபி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி அபுதாபி நகரம், மேற்கு அபுதாபி எமிரேட், கிழக்கில் உள்ல அல் அய்ன் ஆகிய பகுதிகளில் பொது இடங்கள், தெருக்களில் எச்சில் துப்பினால் 100 திர்ஹாம் (27.25 டாலர்கள்) அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதாக நகராட்சி நிர்வாக இயக்குநர் ஓமர் அல் ஹாஷ்மி கூறியுள்ளார்.

எச்சில் துப்புவோர் பிடிபட்ட இடத்திலேயே அபராதம் கட்ட வேண்டும். எச்சில் துப்புபவர்களைப் பிடிப்பதற்காக ஏராளமான நகராட்சி இன்ஸ்பெக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

டாக்சி டிரைவர்கள், மோட்டார் வாகனங்களில் வருவோர் அல்லது மற்றவர்களால் அபராதம் கட்ட முடியாவிட்டால், அவர்கள் வைத்திருக்கும் வாகனங்கள், ஓட்டுநர் உரிமங்கள் அல்லது ஒர்க் பெர்மிட் போன்றவை பறிமுதல் செய்யப்படும்.

அபராதத்தைக் கட்டிய பின்னர் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் சுவர் இடிந்து இந்திய தொழிலாளி பலி

துபாய்: துபாயின் இன்வெஸ்ட்மெண்ட் பார்க் அருகே கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த இந்தியத் தொழிலாளி மீது காண்க்ரீட் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.

அந்த சுவரின் அருகே 10 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்தது. இதில் 9 பேர் காயங்களுடன் தப்பிவிட்டனர்.

ஆனால், 24 வயதான தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி பலியானார்.

ராஸ் அல் கைமா சாலை விபத்தில் 2 இந்திய சிறுமிகள் பலி

ராஸ் அல் கைமா சாலை விபத்தில் 2 இந்திய சிறுமிகள் பலி

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ராஸ் அல் கைமா பகுதியில் நடந்த சாலை விபத்தில் இரண்டு இந்திய சிறுமிகள் பரிதாபமாக பலியானார்கள்.

ராஸ் அல் கைமாவில் உள்ள இந்தியன் பள்ளியில், படித்து வந்த மாணவிள் சசினாஸ் ஜெயதாஸ் (5), ஜோஜி மாத்யூ குருவில்லா.
கடந்த 14ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவர்கள் பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கினர்.

சாலையின் எதிர்புறம் சசினாஸின் வீடு உள்ளது. அவள் சிறுமி என்பதால் சாலையைக் கடக்க ஜோஜி மாத்யூ குருவில்லா உதவினார். அப்போது வேகமாக வந்த கார் அவர்கள் மீது பலமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயடைந்தனர்.

சசினாஸின் தாயார் தனது வீட்டு வாசலில் மகளுக்காக, தனது இன்னொரு மகளுடன் காத்திருந்தபோது அவரது கண் முன்பாகவே இந்த விபத்து நடந்தது.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிப் பேருந்தின் பஸ் டிரைவரும், பேருந்தின் நடத்துநராக செயல்பட்டவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிறுமிகள் மீது மோதிய பேருந்தின் டிரைவரும் கைது செய்யப்பட்டார்.

ராசல் கைமாவில் முப்பெரும் விழா!

ராசல் கைமாவில் முப்பெரும் விழா!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராசல்கைமாவில், பொங்கல், புத்தாண்டு மற்றும் பக்ரீத் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழா 22ம் தேதி நடைபெறுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் ராசல்கைமா தமிழ் மன்றம், இந்தியன்
அசோசியேஷன் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபை போன்ற ஏழு மாநிலங்களில் ஒன்று ராசல் கைமா. இங்கு தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆண்டுதோறும் விழா கொண்டாடி தமிழர்களிடையே ஒருங்கிணைப்பை ராசல்கைமா தமிழ்மன்றம் ஏற்படுத்தி வருகிறது. அதுபோல இவ்வாண்டும் முப்பெரும் விழாவை நடத்துகிறது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்திலிருந்து திரைப்பட இயக்குநர் உதயகுமார், நடிகர் கருணாஸ் அவரது மனைவி கிரேஸி கருணாஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

டோன்ஸ் அன்ட் டியூன்ஸ் இசைவிருந்து நடைபெறும்.

அமீரகத்தின் பலபகுதிகளிலிருந்தும் தமிழர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக இதன் அமைப்பாளர் பாரூக் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு 050 7994218, கமால் -050-7458771 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0220-ras-al-khaima-tamil-sangam-celebrate-mupperum.html

This post was submitted by muduvaihidayath.

துபாயில் தலைமைப்பண்பு பயிற்சி முகாம்

துபாயில் தலைமைப்பண்பு பயிற்சி முகாம்

துபாயில் சென்டர் ஃபார் இன்பர்மேஷன் அண்ட் கைடன்ஸ் ( சிஜி ) எனும் அமைப்பு 88 வது வாரமாக நடத்தும் தலைமைப் பண்பு பயிற்சி முகாம் 27 பிப்ரவரி 2008 புதன்கிழமை மாலை துபாய் தேரா பிளோரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது.

பயிற்சி ஆங்கிலத்தில் நடைபெற இருக்கிறது.

தொடர்புக்கு : cigiuae@gmail.com

This post was submitted by muduvaihidayath

அபுதாபியில் 210 வருடத்திற்கு முந்தைய ஹதீஸ் நூல்

அபுதாபியில் டாக்டர் அஹமது கூரி ( வயது 56 ) தனது வீட்டில் சுய ஆர்வத்துடன் அருங்காட்சியகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் 210 வருடத்திற்கு முந்தைய ஹதீஸ் நூல் உள்ளிட்ட பல்வேறு அரிய பொருட்களை வைத்துள்ளார்.

இதனைக் காண விரும்புவோர் 055 444 34 14 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு வரலாம் எனத் தெரிவித்துள்ளார் அஹ்மது கூரி.

http://www.gulfnews.com/nation/Heritage_and_Culture/10192145.html

This post was submitted by muduvaihidayath.

துபாயில் தொழிலாளர்கள் போராட்டம்

துபாயில் 1800க்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். துபாயில் உள்ள போகாவோ கட்டுமான நிறுவனத்தில் ஆசிய நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் 1800பேர் தங்களுக்கு சம்பள உயர்வு கோரியும், இருப்பிடங்களில் வசதியை மேம்படுத்த கோரியும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் தரப்பில் ஒருவர் கூறுகையில் வேலைநிறுத்தத்தில 2,200க்கும் மேற்பட்டடோர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்


தொகுப்பாளர்: அதிரை புதியவன்

ரியாத்: தமிழில் இஸ்லாமிய பயிற்சி வகுப்பு

ரியாத்தில் உள்ள ராவ்தா இஸ்லாமிய மையம் தனது 7வது இஸ்லாமிய பயிற்சி வகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை இந்த வகுப்பு நடைபெறுகிறது. தமிழில் வகுப்புகள் நடைபெறும்.

வகுப்புகள் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை, திங்கள்கிழமைகள் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறும். இஷா பிரார்த்தனைக்குப் பின்னர் இரவு 10 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

குறைந்த அளவிலான சீட்களே இருப்பதால் விரைவில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த வகுப்பில், அல் குரான் அல் கரீம், அல் தவ்ஹீத், அல் ஹதீத், அல் பிக், அல் தவாஹ், நபிகள் நாயகம் குறித்த வகுப்பு, அரபி மொழியின் அடிப்படை ஆகிய பிரிவுகளில் வகுப்புகள் நடைபெறும்.

போக்குவரத்துக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படிப்புக்கான அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும். இரவு சாப்பாடும் வழங்கப்படும். வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்குவோருக்கு இலவச உம்ரா மற்றும் ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு: 0507129963, 0558994867, 2492727 -221-281 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

rfaris100@yahoo.com என்ற இ மெயிலிலும் தொடர்பு கொண்டு தகவல் அறியலாம்.

http://thatstamil.oneindia.in/news/2008/02/15/tn-keelakarai-sea-shore-heading-ecological-diaster.html

This post was submitted by muduvaihidayath.

தோப்புத்துறை அல் நூர் பள்ளி ஆண்டுவிழா 2008




http://satrumun.com/localnews/?p=24

தோப்புத்துறை அல் நூர் பள்ளி ஆண்டுவிழா 2008

தோப்புத்துறை அல் நூர் பள்ளி ஆண்டுவிழா எதிர்வரும் மார்ச் 1 ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஐந்து மணியளவில் நடைபெற இருக்கிறது. ராஜகிரி தாவூத்பாட்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளரும்,முதல்வருமான டாக்டர் எம்.ஏ. தாவுத் பாட்சா ஆண்டு விழா நிகழ்ச்சியின் சிறப்பு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விழாப் பேருரை நிகழ்த்த உள்ளார்.

மேலும் பல்வேறு தரப்பட்ட பிரமுகர்கள், கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

பள்ளி மாணவ, மாணவியரின் திறனை வெளிப்படுத்தும் விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஆண்டுவிழாவுக்கான ஏற்பாடுகளை பெற்றோர் - ஆசிரியை கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

தகவல் :
noordeen@hotmail.com

துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்

துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் கலிஃபுல்லாஹ் முஹம்மது ஜியாவுதீன் ( வயது 38 ) . தற்பொழுது சீர்காழி அருகேயுள்ள காத்திருப்பு என்னும் ஊரில் வசித்து வருபவர். வளைகுடா கனவுகளுடன் கடந்த 09.12.2006 அன்று அபுதாபியில் உள்ள லீடர்ஸ் டெக்கர் எனும் நிறுவனத்தில் பணிக்காக சுமார் ஒரு லட்சம் செலவு செய்து வருகை புரிந்தார். லெபனானைச் சேர்ந்தவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார். இரண்டரை மாதம் கழித்து அந்நிறுவன உரிமையாளர் உன்னை இந்தியாவுக்கு அனுப்பப் போகிறேன் என்றதும் அந்நிறுவனத்தை விட்டுவிட்டு துபாய் மெட்ரோ ரெயில் திட்டத்தில் சப் காண்டிராக்டரிடம் பணிபுரிந்துள்ளார்.

28.12.2007 அன்று ஜடாஃப் எனும் இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கம்பியின் மீதிருந்து கீழே விழுந்துள்ளார். கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தகடு வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். தற்பொழுது நடக்க முடியாத சூழ்நிலையில் தாயகம் செல்லவேண்டும் என்ற சூழலில் பாஸ்போர்ட் அவரிடம் இல்லாத காரணத்தால் அதற்கும் வழியில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உள்ள இவருக்கு யாரேனும் உதவ முன்வருவார்களா ? என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார் ஜியாவுதீன்.
இவரது தொடர்பு எண் 050 9044240.

குறிப்பு : இச்செய்தியை www.thatstamil.com இணைய இதழில் படித்து விட்டு பாலாஜி, பெருமாள் உள்ளிட்ட பல்வேறு சகோதரகள் உதவ முன்வந்துள்ளனர். இதற்காக முயற்சி எடுத்த வி. களத்தூர் கமால் பாஷாவுக்கு வாழ்த்துக்கள்.

http://thatstamil.oneindia.in/news/2008/02/11/world-tamil-youths-suffering-in-dubai.html

http://tmpolitics.blogspot.com/2008/02/blog-post_10.html

ETA-Ascon seeks jets for new airline

ETA-Ascon seeks jets for new airline

By Saifur Rahman, Business News Editor



Dubai: ETA-Ascon, one of the UAE's largest diversified conglomerates, is in talks with regional jet manufacturers Embrayer, Bombardier and ATR to acquire jets to start its new airline in India, a top official said.
"Yes, we have started talking to all three regional jet manufacturers - Embrayer, Bombardier and ATR - to acquire 70-90 seater regional jets for the new airline in India," Syed M. Salahuddin, managing director of the $4.3 billion Emirates Trading Agency-Associated Construction (ETA-Ascon) group, told Gulf News on Wednesday.
"We have already got the licence to start the airline. We are preparing for commercial launch in around October. It will be a regional airline."

New entry

ETA-Ascon group, a major player in shipping, trading, construction, real estate and power sectors, has recently entered into aviation business with Star Aviation - a new leasing entity.
"We already have eight aircraft leased to different airlines and the portfolio size is worth $200 million," Salahuddin said.
The group, jointly owned by Dubai's Al Ghurair Group and a group of non-resident Indians, which had grown its business through trading, shipping and construction, has further diversified its portfolio by entering into real estate, hospitality, cement production, steel manufacturing, retail, jewellery and food services.
It has rebranded its property and hospitality portfolio with ETA Star that has more than 15 million square feet of built-up area in the planning and construction, worth $10 billion.
It is also developing a Dh2 billion luxury neighbourhood - Dubai Lifestyle City in Dubai. "We are planning to develop Lifestyle Cities in other parts of the world," he said.
Shipping
However, the company which employs 58,000 people, is also expanding its core businesses. With 35 vessels, it owns the largest privately owned fleet.
"We have ordered 30 vessels worth $1.5 billion that will join our 35-strong fleet in four years. Among the new vessels, the ratio between bulk carriers and liquid will be 50:50. We are also expanding our liquid carriers fleet," he said.
"As 80 per cent of the global trade move by sea, we are enjoying our share of growth. Last year, we carried 25 million metric tonnes of cargo, which will go up to 30-35 million tonnes."
India expansion
ETA-Ascon group has been investing in India heavily as major opportunities are being unlocked by the Indian government.
"India provides the biggest opportunity for us and we see so much scope for growth," he said.
His company is currently planning and developing two townships in India's Bangalore and Chennai.
"However, investment in infrastructure could unlock opportunities in other areas. For example, we have recently started a cargo rail service (Railway Wagon) to move containers between Delhi and Bombay, which will expand to all other major Indian cities as the economy grows there."

http://www.gulfnews.com/business/Aviation/10188600.html

துபாய் செல்லும் 'தமிழ் அரேபியா'

துபாய் செல்லும் 'தமிழ் அரேபியா'

திருச்சி: தமிழ் அரேபியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் துபாயில் தனது ஒளிபரப்பை விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழ் அரேபியா தொலைக்காட்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் ஆர்.உதயக்குமார் இதுகுறித்துக் கூறுகையில், துபாயில் எங்களது ஒளிபரப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். ஆரம்பத்தில் 2 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். பின்னர் 24 மணி நேர சேனலாக மாறும்.

துபாயைச் சேர்ந்த அஜ்மான் ஸ்டுடியோஸ் எல்எல்சியுடன் இணைந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம்.

உலகம் முழுவதும் தமிழர்கள் பரவியுள்ளனர். குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் அதிக அளவில் தமிழர்கள் உள்ளனர். அவர்களின் திறமைகளை, சாதனைகளை வெளியுலகுக்கு பறை சாற்றும் வகையிலேயே துபாயில் எங்களது விரிவாக்கத்தை திட்டமிட்டுள்ளோம்.

இந்த நிகழ்ச்சிகளை நைஜீரியா, எகிப்து, லிபியா, மாரிடானியா, சோமாலியா, துனிஸ், சூடான், மொராக்கோ, ஈரான், ஈராக், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், பாலஸ்தீனம், கத்தார், சவூதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுளில் பார்க்கலாம் என்றார் அவர்.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

இந்தியர்கள் ஸ்டிரைக்: பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் விவாதம்

துபாய்: பஹ்ரைனில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

பஹ்ரைனில் 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இவர்களில் முக்கால்வாசிப் பேர் இந்தியர்கள், கடந்த இரு தினங்களாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

ஊதிய உயர்வு, அடிப்படை வசதிகள் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய பாலகிருஷ்ணன், முக்மது ஷபி ஆகிய இரு இந்தியத் தொழிலார்கள், நேற்று பஹ்ரைன் அரசால் நாடு கடத்தப்பட்டனர். இரு வேறு விமானங்களில் அவர்கள் பஹ்ரைனை விட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்தியத் தொழிலாளர்களின் போராட்டம் பஹ்ரைனில் பெரும் பரபரப்பையும், அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத் தொழிலாளர்களின் போராட்டம், கோரிக்கை குறித்து பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், தற்போது நடந்து வரும் பிரச்சினை, உறுப்பினர்களின் கோரிக்ைககள் குறித்து பஹ்ரைன் அரசு, அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மஜீத் அல் அலாவியைக் கூப்பிட்டு விசாரித்துள்ளது.

இந்தியா மீது காண்டிராக்ட் நிறுவனங்கள் புகார்:

இதற்கிடையே, இந்தியத் தூதரகம் தான் போராட்டத்தை தூண்டி வருவதாக பல்வேறு காண்டிராக்ட் நிறுவனங்கள் கூறியுள்ளன.

2500 பேர் செய்யும் போராட்டம் மற்ற முகாம்களுக்கும் பரவக் கூடும் என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த நிறுவனங்கள் கூறுகையில், பிரச்சினைக்கு சமூக தீர்வு காண முயற்சிக்காமல், ேவலைநிறுத்தப் போராட்டத்தை இந்திய தூதரகம் தூண்டி விட்டு வருகிறது.

இந்தியத் தூதரகம் மீது பஹ்ரைன் வெளியுறவு அமைச்சகம் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் இந்தியத் தூதரகம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது முட்டாள்தனமான குற்றச்சாட்டு என்றும் இந்தியத் தூதரகம் கூறியுள்ளது. இந்திய அரசின் அறிவுரையின் பேரிலேயே இந்தியத் தூதரகம் நடந்து வருவதாகவும், இந்தியத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசு மிகுந்த அக்கறையுடன் உள்ளதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா பற்றிய படிப்பு: ஆக்ஸ்போர்டு பல்கலை. அறிமுகம்

இந்தியா பற்றிய படிப்பு: ஆக்ஸ்போர்டு பல்கலை. அறிமுகம்
மாணவர்களிடையே இந்தியா தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளதால், இந்தியா பற்றிய முதுகலை அறிவியல் படிப்பை ஆகஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

சமகாலத்து இந்தியா (MSc in Contemporary India) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முதுகலை அறிவியல் படிப்பு, வரும் அக்டோபர் மாதம் துவங்கும் என்றும், இதில் இந்தியாவை பற்றியும் அதன் ‌பொருளாதாரம் பற்றியும் கற்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை பெற்றுள்ள இந்தியா, தற்போது ஐடி மற்றும் வர்த்தக துறையில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து வருவதாக தெரிவித்த பல்கலைக்கழக பேராசிரியர் பார்பரா ஹாரிஸ், இந்தியா பற்றி படிப்பது மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலையில் படித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் தனியே இருந்த பெண்ணை ஏமாற்றி ரூ.10 லட்சம் கொள்ளை

சென்னை: டாடா ஸ்கை நிறுவனத்திலிருந்து வருவதாகக் கூறிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து பெண்ணை ஏமாற்றி ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை ஒருவன் கொள்ளையடித்துள்ளான்.சென்னை சூளைமேடு கில்நகர் 3வது குறுக்கு தெருவில் வசிப்பவர் பி.எஸ்.ராவ். இவர் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லட்சுமி (50). மகன் சீனிவாசன் குடும்பத்தினருடன் இந்தத் தம்பதி வசித்து வருகின்றனர்.இந் நிலையில் நேற்று காலை 9.45 மணியளவில் லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார்.நான் டாடா ஸ்கை டி.வி. நிறுவனத்தில் இருந்து வருகிறேன். உங்கள் வீட்டில் நாங்கள் கொடுத்த டிஷ் ஆன்டெனாவில் பிரச்சனை உள்ளதாக உங்கள் மகன் சீனிவாசன் புகார் கொடுத்துள்ளார். அதை சரி செய்ய வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.இதையடுத்து அந்த வாலிபரை லட்சுமி வீட்டுக்குள் அனுமதித்தார். வீட்டின் மாடிக்கு சென்ற அந்த வாலிபர் ஆண்டெனாவை சரி செய்வதுபோல நடித்துவிட்டு, நீங்கள் மேலேயே இருங்கள். நான் கீழே போய் டி.வியை சரிபார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கீழே வந்துள்ளார்.கீழ் அறையில் இருந்தபடி ஜன்னல் வழியே லட்சுமிக்கு குரல் கொடுத்தபடியே இருந்தார். இதை நம்பி லட்சுமியும் மாடியிலேயே நின்றார்.இந் நிலையில் திடீரென அந்த வாலிபரிடம் இருந்து எந்த சத்தமும் இல்லாததால் லட்சுமி கீழே இறங்கி பார்த்தார். அப்போது டி.வி. இருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ அலங்கோலமாக கிடந்தது. அதில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், பணம் ஆகியவற்றை அந்த வாலிபர் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிவிட்டார்.தகவல் அறிந்து துணை கமிஷனர் ராமசுப்பிரமணி, உதவி கமிஷனர் முரளி ஆகியோர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கைரேகைகளும் ேசகரிக்கப்பட்டன.இந்த வீட்டில் டாடா ஸ்கை ஆண்டெனவாலி பிரச்சனை உள்ளதை எப்படியோ அறிந்து கொண்டும், வழக்கமாக காலை 9 மணியிலிருந்து 10 மணி வரை லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார் என்பதை தெரிந்து கொண்டும் அந்த நபர் இந்த துணிகர கொள்ளையை நடத்தியுள்ளார்.இத்தனைக்கு இந்த வீட்டின் மாடியில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அங்கு வேலை பார்க்கும் 2 பெண்களும் அந்த மர்ம வாலிபரை பார்த்துள்ளனர். வீட்டின் முன்புறம் இஸ்திரி போடுபவரும் வாலிபரை பார்த்துள்ளார்.இவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் கம்ப்யூட்டர் உதவியோடு வாலிபரின் படம் வரையப்பட்டுள்ளது. அவனைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

ராஜ்தாக்ரேவை விரைவில் கைது செய்வோம்

ராஜ்தாக்ரேவை விரைவில் கைது செய்வோம்
-மும்பை போலீசார்

வன்முறையை மற்றும் இனக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசிய மகாராஸ்டிரா நவநிர்மான் சேனா கட்சித்தலைவர் ராஜ்தாக்ரே மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அபு அசிம் அஸ்மி ஆகியோரை இன்னும் ஓரிரு நாளில் மும்பை போலீசார் கைது செய்வார்கள் என இணை கமிஷனர் கே.எல்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்த அவர், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் படி இருவரும் ஜாமீனில் வெளிவர முடியாது என கூறினார்.

இதற்கிடையில், போலீசாரிடம் கைதாவது குறித்து இன்று மாலை தனது கட்சியினருடன் ராஜ்தாக்ரே ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போலீசாரிடம் கைதாவதை தவிர்க்க இடைக்கால ஜாமீன் எதையும் ராஜ்தாக்ரே பெற மாட்டார் என தெரிவித்த மகாராஸ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிதின் சர்தேசாய், நீதிமன்றத்தில் ஆஜரான பின் ஜாமீன் பெறவே ராஜ்தாக்ரே திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

பிற மாநில மக்களின் வருகையால் மராட்டிய மண்ணின் மைந்தர்கள் சிறுபான்மை இனத்தவர்களாக மாறி வருவதாக ராஜ்தாக்ரே தெரிவித்த கருத்து, மாநிலம் முழுவதும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியதால், மும்பை போலீசார் அவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

இதே போல் சிவாஜி பார்க் பகுதியில், கடந்த 3ம் தேதி நடந்த சமாஜ்வாடி கட்சி பேரணியில் மக்களை தூண்டும் வகையில் பேசிய அஸ்மி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சவுதி: சாலை விபத்தில் இந்தியர்கள் பலி

சவுதி: சாலை விபத்தில் இந்தியர்கள் பலி

வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் பேருந்தும் டிரக்கும் நேருக்குநேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில், இரண்டு இந்தியர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் ரியாத்தில் இருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அப்குவைக் என்ற இடத்தில், வியாழனன்று மாலை இந்த சம்பவம் நடந்ததாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் இறந்த 16 பேரில், பாகிஸ்தானியர்கள் 3 பேரும், பங்களாதேஷ் நாட்டவர்கள் 11 பேரும் அடங்குவர். இதுதவிர 18 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஈரான் விண்வெளி ஆய்வு மையம் திறப்பு

ஈரான் விண்வெளி ஆய்வு மையம் திறப்பு


ஈரானின் முதல் விண்வெளி ஆய்வு மையத்தை, அந்நாட்டு அதிபர் அகமது நிஜாத் திறந்து வைத்தார். இனி அந்நாட்டுக்கு தேவைப்படும் செயற்கைக்கோள்கள் இந்த மையத்தில் இருந்து ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள இந்த விண்வெளி மையத்தில், ஆய்வு செயற்கைக்கோள் (ஓமிட்), கட்டுப்பாட்டு அறை மற்றும் விண்வெளி ஏவுதளம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஓமிட் செயற்கைக்கோள் ஈரானிலேயே தயாரிக்கப்பட்டது என்பதும், வரும் மார்ச் 20ம் தேதி இது விண்ணில் ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு, 1,300-1,600 கிமீ தூரம் பாயும், ஷஹாப்-3 என்ற ஏவுகணையை ஈரான் பரிசோதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.