விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக 3 வயது குழந்தை ஒன்று கைது செய்யப்பட்ட வினோதச் சம்பவம் நடந்துள்ளது.
திருவெண்ணை நல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதில், ஆனத்தூர் குச்சிப்பாளையம் கிராமத்தில் ஒரு கும்பல் சாராயம் விற்பது தெரிய வந்தது. அதிரடியாக அங்கு சென்ற காவல்துறையினர், இத்தொழிலில் ஈடுபட்டிருந்த முருகன், அவரது மனைவி சரோஜா உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் சுமார் ரூ.75,000 மதிப்புள்ள 100 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் முருகன் தம்பதியரின் 3 வயது ஆண் குழந்தை சபரிநாதனும் அடங்கும். பின்னர், குழந்தை உட்பட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
சாராய வழக்கில் பெற்றொர் கைது செய்யப்பட்டதால், அவர்களுடன் பச்சிளம் குழந்தையும் சிறை செல்ல நேரிட்டது அப்பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது