துருக்கியில் இஸ்லாமிய பழக்கவழக்கங்களுக்கு தடை
வி.என்.முகம்மது உசேன் ( from Tmmk.in )
துருக்கியில், 40 வருடங்களுக்குப் பிறகு, ஒரு தனிக்கட்சி மக்களவை தேர்தல் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சி செலுத்தி வருகிறது. இதுவரை ஐரோப்பிய ஆபாச நாகரீகத்தில் மூழ்கிக் கிடந்த துருக்கி மக்களை அதிருந்து விடுபட செய்து, இஸ்லாமிய பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கும் ஓர் அரசாங்கமாக இருந்து வருகிறது. ஐரோப்பா கண்டத்தில் ஒரு சில நாடுகளில் தான் முஸ்ம்கள் அதிகமாக வாழ்கின்றனர். இதில் ஒன்று துருக்கி; மொத்தம் ஏழுகோடி மக்களில், மிகுதியானோர் முஸ்ம்கள். இந்நாட்டின் அதிபர், பிரதமர், உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி, அரசாங்க மூத்த வக்கீல் என எல்லா முக்கிய பதவிகளிலும் முஸ்ம்கள் இருக்கின்றனர். எனினும் ''மதச்சார்பற்ற கொள்கை'' என்ற பெயரில், இஸ்லாமிய பழக்க வழக்கத்திற்கு அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதிக்க முயல்கின்றது.
துருக்கியர் :
துருக்கியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை ஆராய்வதற்கு முன்னதாக, துருக்கியில் உள்ள முஸ்ம்களுக்கும் தமிழ்நாட்டில் வாழும் முஸ்ம்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை காணலாம். இந்த இரு நாட்டு மக்களையும் இணைப்பது இஸ்லாமிய மார்க்கம். மற்றப்படி மொழி, உணவு, உடை பழக்கவழக்கங்களில் மிகுதமாக வேற்றுமையை காணலாம். இருப்பினும் தமிழ்நாட்டில் உள்ள முஸ்ம்களை இங்குள்ள இந்துக்கள் விளங்காமல் துருக்கியர் என்று சில காலங்களுக்கு முன்பு வரை அழைத்து வந்தனர். 70லி80 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் வாழ்ந்த முஸ்ம்கள், சரக்குகளை அளக்கும் மரக்கால் போன்ற வடிவில், மெருன் கலரில், குஞ்சம் வைத்த தொப்பியை அணிந்து வந்தனர். அதே தொப்பியை துருக்கியிருந்து. மேலும் இறக்குமதி செய்து தமிழ்நாட்டில் உள்ள சில முஸ்ம்கள் அணிந்து வந்தனர். இதனாலேயே தமிழ் மண்ணில் பிறந்து, இங்கேயே வளர்ந்து வந்த முஸ்ம்களை சிலர் துருக்கியர் என்று அழைத்தனர். இப்போது இந்த தொப்பி துருக்கியிலு மில்லை தமிழ்நாட்டில் இந்தப் பெயரும் மறைந்து வருகிறது.
ஐரோப்பிய யூனியன் :
ஐரோப்பிய நாட்டில் உள்ள பதினைந்து நாடுகள் சேர்ந்து ஐரோப்பிய யூனியன் என்ற அமைப்பினை ஏற் படுத்தி உள்ளது. இந்த நாடுகளுக்கு பொதுவான நாணயமாக 'யூரோ' உள்ளது. இந்த நாடுகளுக்கு இடையே வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இந்த நாடுகள் எல்லாம் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளாக மாறி வருகின்றன. இந்த யூனியனில் துருக்கியை சேர்த்துக் கொள்ள தயங்குகின்றனர். ஐரோப்பிய யூனியனில் துருக்கி சேர்ந்தால் அதன் பொருளாதார வளர்ச்சியும் வேகம் அடையும். எனவே ஐரோப்பிய நாகரீகத்தை பின்பற்ற வேண்டும் என்று துருக்கியிலுள்ள வசதி படைத்த முஸ்ம் கள் நினைக்கின்றனர். ஐரோப்பிய யூனியனில் சேர வேண்டும், அதே சமயம் இஸ்லாமிய பழக்க வழக்கங்களை விட்டு விடக்கூடாது என்ற கொள்கை உடைய அரசியல் கட்சிதான் இன்று துருக்கியில் ஆட்சியில் அமர்ந்து இருக்கும் ''நீதியும் பொருளாதார வளர்ச்சியும்'' என்ற கட்சி.
இன்று துருக்கியில் ஏற்பட் டுள்ள அரசியல் நெருக்கடியை தெரிந்து கொள்வதற்கு முன், மதச்சார்பற்ற கொள்கை, மதவிரோத கொள்கை இரண்டிற்கும் உள்ள வேற்றுமையை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு, குங்குமம் வைப்பதை இந்து மத பழக்கமாக கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள முஸ்ம் பெண்கள் தலை, முகத்தை மறைத்துக் கொள்ள ஸ்கார்ப் அணிவதை அல்லது உடல் முழுவதும் மறைக்க பர்தா அணிவதை பழக்கமாக கொண்டுள்ளனர்.
இதில் அரசாங்கம் தலையிடாமல் இருந்தால் அது மதச்சார்பற்ற கொள் கைக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ள லாம். இந்துப் பெண்கள் பொட்டு இடுவதையும், முஸ்ம் பெண்கள் பர்தா அணிவதையும் தடுத்தால் மத விரோத கொள்கையாக எடுத்துக் கொள்ளலாம். இன்று துருக்கியில் உள்ள அரசியல் சட்டம் மதச்சார்பற்ற கொள்கை என்று கருதி, மதவிரோத கொள்கையை சட்டமாக கொண்டு உள்ளது.
துருக்கி நாட்டின் அரசியல் சட்டம், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவி கள் தலையில் 'ஸ்கார்ப்' அணிவதை தடைசெய்து உள்ளது. ரிசப்தய்யூப் எர்டோகன் என்பவரை பிரதமராக கொண்டு இன்று துருக்கியில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், ஸ்கார்ப் அணியும் பழக்கத்தை தடை செய்யும் சட்டத்தை நீக்க முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து அரசாங்க வக்கீல் துருக்கி நாட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கினை எடுத்துக் கொண்ட துருக்கி உச்சநீதி மன்றம் பிரதமரையும், அவருடைய கட்சியையும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யும் வழக்கினை விசாரிக்க ஏற்றுக் கொண்டுள்ளது.
துருக்கி நாட்டின் பிரதமர் எர்டோகனுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் செல்வாக்கு உள்ளது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசாங்கத்தை நீதிமன்றம் மூலம் கலைக்க எதிர்க்கட்சி கள் முயற்சிக்கின்றன என்று எர்டோகன் குற்றம் சாட்டி உள்ளார். சென்ற வருடம் பிரதமர் எர்டோகன், குல் என்பவரை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக தேர்ந் தெடுக்க முயற்சித்தவுடன், துருக்கி ராணுவம், அரசாங்கத்தை கைப்பற்ற நினைத்தது, உடனே எர்டோகன் மக்கள வைக்கு முன்னதாக தேர்தல் நடத்த உத்தரவிட்டார். கடந்த நாற்பது ஆண்டு களில் கண்டிராத அளவிற்கு, மகத்தான வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலும் நடந்து, குல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஒரு வருடமாக ஐரோப்பிய நாகரீகத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் வசதி படைத்த முஸ்ம்கள், துருக்கியில் உள்ள உயர் அதிகாரிகள் ஒரு பக்கமாக வும், இஸ்லாமிய மார்க்க பழக்கவழக்கங் களை பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை கொண்ட, தற்போது பிரதமராக இருக்கும் எர்டோகன் கட்சியான ''நீதியும் வளர்ச்சியும்'' மறுபக்கமும் செயல்பட்டு வருகின்றன. துருக்கி மக்கள் எர்டோகன் கட்சிக்கு மகத்தான ஆதரவு அளித்து வருவது, உலக முஸ்ம்களை மகிழ்ச்சி யில் ஆழத்தி உள்ளது.
பொருளாதார வளர்ச்சி :
கடந்த மூன்று ஆண்டுகளில் துருக்கியின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 2007லில் ஆறு சதவீதமாக இருந்தது. வெளிநாட்டு முதலீடு 2007லில், 100 பில்யன் டாலராக இருந்தது. கோல்டுமென் சாக்ஸ் முதலீடு வங்கி துருக்கி நாட்டிற்கு பதினோறாவது இடத்தை அளித்து உள்ளது. 2002ல் துருக்கியில் 5500 வெளிநாட்டு நிறுவனங் கள் இருந்தன. இன்று துருக்கியில் 17000 வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. துணிமணிகள், சிராமிக்ஸ், கிளாஸ், கப்பல் கட்டுதல், இரும்பு உற்பத்தி, ஆபரண நகைகள் கட்டுமான தொழில்களில் உலகில் முதல் பத்து நாடுகளின் வரிசை யில் துருக்கி இருக்கிறது. துருக்கியில் 40,000 ஏற்றுமதியாளர்கள் இருக்கிறார் கள். உலக வங்கியின் 2008 வருடாந்திர அறிக்கையில், துருக்கி நாட்டிற்கு 57வது இடத்தை அளித்துள்ளது. துருக்கியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மத்திய ஆசியாவில் பல நாடுகளில் முதலீடு செய்துள்ளன.
நிலையான ஆட்சி :
துருக்கியில் சென்ற ஆண்டு பொதுத் தேர்தலும் அதிபர் தேர்தலும் நடந்தன. பல ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் தனிக் கட்சி ஆட்சியை பிடித்து நிலையான அரசாங்கம் அமைந்துள்ளது. இந்த நிலையான ஆட்சியின் மூலம் பிரதமர் எர்டோகன் துருக்கி மக்களின் பொருளாதாரம் சமூக வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முன் வந்துள்ளார். தொலை தொடர்புத்துறை, கல்வித்துறை, நீதித்துறை முதயவற்றை நவீனப்படுத்த முன்னு ரிமை கொடுக்கின்றார். துருக்கியில் உள்ள தொழிலாளர்கள் திறன் மிக்கவர்கள். தொழில் நுட்ப கலைஞர்களை பெருக்குவதற்கான வழிவகைகளை இப்போது உள்ள அரசாங்கம் செய்து வருகிறது. பொருளாதாரத்தில் நிலையான தன்மையை ஏற்படுத்தி வேகமான வளர்ச்சியை அடைய முற்படுகின்றது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் துருக்கியின் தனி நபர் வருமானம் பத்தாயிரம் டாலராக அடைவதற்கு குறியீடு அமைத்துள்ளது. இதைப்போல் துருக்கியின் ஏற்றுமதி 200 மில்யன் டாலராக அடைவதற்கு குறியீடு நிர்ணயித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் :
ஐரோப்பிய யூனியனில் துருக்கி சேர்ந்து கொண்டால். துருக்கி நாட்டிற்கு பொருளாதார பயன்கள் கிடைக்கும். துருக்கியிருந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு வியாபாரம் தங்குதடையின்றி நடைபெறும். இதன் மூலம் வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் தொடர்பு ஏற்படுட்டு தங்களுடைய பொருளாதார வளர்ச்சியையும் மேம் படுத்த உதவும். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளும் துருக்கியின் முக்கியத்துவத்தை உணர்கின்றன. முழு உறுப்பினர் ஆவதற்கு பத்து பதினைந்து ஆண்டுகள் கூட ஆகலாம். துருக்கி ஐரோப்பியா யூனியனில் உறுப்பினராகிவிட்டால் பலரின் நீண்டநாள் கனவு நிஜமாகி விடும். இதில் உறுப்பினர் ஆவதற்கு துருக்கி மக்களின் வாழ்க்கை தரம் ஐரோப்பிய மக்களின் வாழ்க்கை தரத்திற்கு ஈடாக இருக்க வேண்டும். இதனால் துருக்கி அரசாங்கம் பல பொருளாதார சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. அதே சமயம் துருக்கி மக்கள் இஸ்லாமிய கொள்கைகளை விட்டுவிடுவதற்கு தயாராக இல்லை என்பதை பல காலகட்டங்களில் காட்டி இருக்கின்றனர். உதாரணமாக போஸ்னியா, மான்டி நெக்ரோ, ஈராக், சோமாயா, ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் முஸ்ம்களுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம், முஸ்ம்களுக்கு ஆதரவாக துருக்கி அரசாங்கமும் அதன் மக்களும் குரல் கொடுத் திருக்கின்றனர். இது போன்ற நேரங்களில் ஐரோப்பாவில் உள்ள நாடுகள் கிருஸ்தவ மக்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள். முஸ்ம்களுக்கு பல நாடுகளில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம், இந்த நாடுகள் தலையிடாமல் அல்லது எதிராக நடந்து கொண்டதை இங்கே குறிப்பிடலாம்.
துருக்கி - இந்திய வியாபாரம் :
சென்ற மாதம் துருக்கி வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் குர்சத் தர்மன் இந்தியாவிற்கு வந்திருந்தார். இந்தியாவிற்கும் துருக்கி நாட்டிற்கும் வியாபாரம் பெருகுவதற்கும் பல வாய்ப்புகள் உள்ளதை எடுத்துக் கூறினார். இரு நாடுகளும் பல வருடங்களாக நட்புடன் இருந்து வருகிறது. இரு நாட்டு வியாபார நிறுவனங்களும் பல துறைகளில் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு பொருளாதார வளர்ச்சியை பெருக்குவதற்கான வழிவகைகளை எடுத்துக் கூறினார். இந்தியாவிற்கும், துருக்கிக்கும் வியாபார உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பு இல்லாமல் பரஸ்பர பாதுகாப்பு வியாபாரம், முதலீடுகள் மேம்படுவதற்கான வழிவகைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் மத்தியில் இந்திய துருக்கி நாடுகளுக்கான பொருளாதார கமிஷன் சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையே வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெற வழிவகைகள் வகுக்க இருக்கிறது.
ஏற்றுமதி இறக்குமதி :
துருக்கியின் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியா முக்கியமான பங்கு வகிக்கின்றது. 2007லில் துருக்கியில் இருந்து 347 மில்யன் டாலர்கள் மதிப்புள்ள பொருள் களை இந்தியாவிற்கு துருக்கி ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவிருந்து 2.30 பில்யன் டாலர்கள் மதிப்புள்ள பொருள்கள் துருக்கிக்கு ஏற்றுமதியாகி உள்ளன. ஆசியா பசிபிக் மண்டலத்தில் துருக்கி இந்தியாவுடனான வர்த்தகம் நான்காவது இடத்தில் உள்ளது. இரும்பு, எஃகு, தாது பொருள்களும், வாகன உதிரி பாகங்களும், நிலக்கரியும், துருக்கியிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி யாகின்றன. பருத்தி, பருத்தி நூல், பாயஸ்டர், பெட்ரோ யம் என பல ரசாயன பொருள்களும் இந்தியாவி ருந்து துருக்கிக்கு ஏற்றுமதியாகின்றன. இந்தியாவும் துருக்கியும் கூட்டு சேர்ந்து பல தொழிற்சாலைகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.
துருக்கியில் உள்ள கட்டுமான தொழில் ஒப்பந்தக்காரர் கள் 70 வெளிநாடுகளுக்கு சென்று 4,200 திட்டங்களில் ஈடுபட்டு அதனுடைய மதிப்பு 100 பில்யன் டாலராக உள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அடுத்தப்படி யாக துருக்கியின் ஒப்பந்தக் காரர்கள் கட்டுமானத் தொழில் உலகின் மூன்றாவது இடத்தில் இருக்கின்ற னர். துருக்கியில் உள்ள ஒப்பந்தக்காரரர்கள் இந்தியாவில் உள்ள கப்பல் துறைமுகங்கள், விமானத்தளங்கள், தொலைத்தொடர்பு துறைகள் என 500 பில்யன் டாலர் மதிப்புள்ள திட்டங்களில் ஈடுபட இருக்கின்றனர். 2007லில் இந்தியாவிருந்து 45,000 சுற்றுலா பயணிகள் துருக்கிக்கு சென்று வந்துள்ளனர்.
துருக்கியில் இஸ்லாமிய பழக்கவழக்கங்களுக்கு தடை
Labels:
Ulagam,
துருக்கியில்