சாலை விபத்தில் மூன்று இந்தியர்கள் உள்பட நான்கு பேர் பலி

துபாய்: ஷார்ஜாவில் நடந்த சாலை விபத்தில் மூன்று இந்தியர்கள் உள்பட நான்கு பேர் பலியானார்கள்.

ஷார்ஜாவில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஒரு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். முக்கியச் சாலை ஒன்றுக்கு வந்த அந்த வேன், எதிர் திசையில், மணல் ஏற்றி வந்த நீண்ட டிரெய்லர் இணைக்கப்பட்ட லாரி வருவதை அறியாமல் சாலையில் நுழைந்தது.

அப்போது மணல் லாரி, தொழிலாளர்கள் இருந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் இரு வாகனங்களும் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டன. மணல் ஏற்றி வந்த டிரெய்லர் லாரி படு வேகமாக வந்ததால் மோதிய வேகத்தில், அதன் பின்புறம் இணைக்கப்பட்டிருந்த டிரெய்லர் கழன்று, தொழிலாளர்கள் இருந்த வாகனத்தின் மீது ஏறி விழுந்து நசுக்கியது.

இதில் அதில் இருந்த மூன்று இந்தியர்களும், ஒரு பாகிஸ்தானிய தொழிலாளியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்த நால்வரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரியவில்லை.