அல்லாஹ்வின் திருப்பெயரால்..
உலக நாடுகளை கவரும் "அல் ஜஸீரா" தொலைக்காட்சி
நிறுவன சேவைகள்
ஆதிக்கசக்திகள் ஊடகத்துறைக்குள் புகுந்து எந்தெந்த அளவில் பொய்களை புகுத்த வேண்டுமோ அந்தெந்த அளவில் பொய் செய்திகளை புகுத்தி மக்களிடம் உண்மைகளை மறைத்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இஸ்லாத்திற்கு ஏதிராக ஆதிக்கச்சக்திகள் பரப்பி விடும் பல பொய் செய்திகள் உலக மக்களிடம் எடுபடவில்லை. பொய்ப்பிரச்சாரங்கள், பொய் செய்திகள், நேர் ஏதிரான கருத்துக்களை மட்டுமே பரப்பி வரும் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பல ஆதிக்கச்சக்திகள் சொல்லும் செய்திகளை மட்டுமே ஒளி ஒலிப்பரப்பி வருகின்றன.
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பாக, டோஹா கத்தார் நாட்டில் துவங்கப்பட்ட “அல்ஜஸீரா” தொலைக்காட்சி நிறுவனமானது மற்ற தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முன்னோடியாக விளக்குகிறது என்றால் மிகையாகாது. ஆரம்பத்தில் அரேபிய மொழியில் மட்டுமே துவங்கப்பட்ட இதன் செய்தி நிகழ்ச்சிகளானது அதிகமான மக்களை கவர்ந்து விட்டது.
ஈராக் ஆக்கிரப்புக்குப்பின் அந்நாட்டில் ஆதிக்கக்சக்திகள் என்ன கொடுமைகளை நடத்தின, ஆப்கானிஸ்தான் நாட்டில் எத்தகைய இன்னல்களை அங்குள்ள பொது மக்கள் அனுபவித்தனர். பாலஸ்தீன நாட்டின் உண்மை நிலை என்ன போன்ற தகவல்களை உடனுக்குடன் படம் பிடித்து உண்மையான தகவல்களை மக்களிடம் தரும் பணியினை செம்மையாக செய்து வருகிறது. ஆகையால் உலக மக்களின் நன் மதிப்பினை அல்ஜஸீரா தொலைக்காட்சியானது பெற்றுக்கொண்டு வருகிறது. அதனை பிடிக்காத ஆதிக்கச்சக்திகள் இந்நிறுவனத்திற்கு ஏதிராக பல எதிர்ப்புகளை காட்டியது. அந்த எதிர்ப்புக்கிடையே அல்ஜஸீராவின் வளாச்சியானது, மேன்மேலும் பரவி தற்போது ஆங்கில மொழியில் தன்னுடைய ஒலி ஒளிப்பரப்பினை அமெரிக்கா நாட்டில் துவங்கி விட்டது. BBC – British Broad Casting நிறுவனம் மற்றும் CNN – Net work போன்ற ஆதிக்கச்சக்திகளின் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திகளை விட அல் ஜஸீராவின் செய்திகளை மக்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள் என்றால் மிகையாகாது.
மே 14.5.2008 புதன் கிழமையன்று, அமெரிக்க நாட்டில் அல் ஜஸீரா தொலைக்காட்சியின் சேவையானது துவங்கபட்டது. அதனுடைய ஆங்கில சேவையின் பொது இயக்குனர் டோனி புர்மன் (Tony Burman – Managing Director of Al Jazeera’s English languages service) அவர்கள் குறிப்பிடுகையில் (இவர் இதற்கு முன்பாக கனடா தகவல் மையத்தின் இயக்குராக பணி புரிந்து ஜீலை 2007 வேலையிலிருந்து நீக்கினார்) அமெரிக்காவில் DISH Net work மூலமாக , இந்நிகழ்ச்சிகளை காணலாம். மற்றும் 160 மில்லியன் இல்லங்களை தேடி அல் ஜஸீரா நிகழ்ச்சியானது செல்ல வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டார். அமெரிக்காவின் பல பகுதிகளிலும் மற்றும் வடக்கு அமெரிக்கா நாடுகளிலும் இதனுடைய ஒலி ஒளிப்பரப்பானது துவங்க பட உள்ளது. அத்துடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரான்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து போர்ச்சுகல் மற்றும் ஹங்கெரி நாடுகளிலும் சேவைகள் துவங்கப்பட உள்ளது.
ஆசிய நாடுகளில் ஒன்றான வியாட்நாம் நாட்டில் VTC என்ற நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய ஆங்கில சேவையினை அங்கு செய்து வருகிறது. சிஙகப்பூர் நாட்டில் SINGTEL என்ற நிறுவனத்துடன் இணைந்து அங்கு சேவையினை செய்து வருகிறது. மற்றும் ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அல் ஜஸீரா ஆங்கில சேவையானது துவங்கப்பட்டு விட்டது. அல் ஜஸீராவின் அலை வரிசையின் சேவையானது, பிஜி, மாலத்தீவு, மால்டா, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் சேவையானது உள்ளது.
இணையத்தளம் வாயிலாக மக்களுக்கு உண்மையான செய்திகளை You Tube Video Clip – Sharing site மூலமாக வழங்குகிறது. முதல் ஆண்டு துவங்கத்திலேயே, 21 மில்லியன் மக்கள் இந்த இணையத்தளம் மூலமாக செய்திகளை பார்த்து இருக்கிறார்கள் என்ற தகவலை அல் ஜஸீரா செய்திக்குறிப்பானது கூறுகிறது.
தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்
உலக நாடுகளை கவரும் "அல் ஜஸீரா" தொலைக்காட்சி
Labels:
அபூ ஆஃப்ரின்,
அர்டிகள்,
அல் ஜசீரா,
கட்டுரை