அரியலூர்: "அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்' இதுபற்றி மாவட்ட கலெக்டர் சுடலைகண்ணன் கூறியுள்ளதாவது: சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி(எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்பட) பயில்பவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கபடுகிறது. இதற்கான தகுதிகள்: ப்ளஸ் 2 படிப்பில், கடந்த (2007-2008) ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். * அதேபோல, சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பட்ட மேற்படிப்புக்கான கல்வி உதவி தொகை வழங்கபடுகிறது. இதன்படி, ப்ளஸ் 1 முதல், ஆராய்ச்சி கல்வி வரை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்படும். பள்ளி தகுதிகள்: அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனங்கள் கல்லூரிகளில் கடந்த (2007-2008) ஆண்டின் பள்ளி இறுதி தேர்வில் 50சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வழங்கப்படும் கல்வி உதவி தொகை பற்றிய விபரம்: ப்ளஸ் 1 முதல் ப்ளஸ் 2 வரை உள்ள வகுப்புகளுக்கு சேர்க்கை மற்றும் படிப்பு கட்டணம் உள்பட ரூபாய் ஏழு ஆயிரம், பராமரிப்புக் கட்டணமாக விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு ரூபாய் இரண்டாயிரத்து 350, விடுதி வசதியின்றி பயில்பவர்களுக்கு ரூபாய் ஆயிரத்து 400 வழங்கபடும். ஐ.டி.ஐ., மற்றும் ஐ.டி.சி., நிறுவனங்களில் தொழில்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை மற்றும் படிப்பு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரம், விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு பராமரிப்பு கட்டணமாக ரூபாய் இரண்டாயிரத்து 350, விடுதி வசதியின்றி பயில்பவர்களுக்கு ரூபாய் ஆயிரத்து 400 வழங்கப்படும். இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கு சேர்க்கை கட்டணமாக ரூபாய் மூன்றாயிரத்து 500, விடுதியில் தங்கி பயில ரூபாய் மூன்றாயிரத்து 350, விடுதியின்றி பயில்பவர்களுக்கு ரூபாய் மூன்றாயிரத்து 300 வழங்கப்படும். ஆராய்ச்சி படிப்பு பயிலும், மாணவ, மாணவிகளுக்கு பராமரிப்புக் கட்டணமாக விடுதியில் தங்கி பயில ரூபாய் ஐந்தாயிரத்து 100, விடுதியின்றி பயில்பவர்களுக்கு ரூபாய் மூன்றாயிரத்து 300 வழங்கப்படும்.
சிறுபான்மை மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
பழனியில் முஸ்லீம் லீக் இரங்கல் ஊர்வலம்
பழனியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனத்வாலா மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவரது மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பள்ளிவாசல் செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.
இதில் கட்சியின் மாவட்ட தலைவர் சுலைமான், செயலாளர் பாரூக், நகர தலைவர் உபையதுல்லா, நகர் மன்ற தலைவர் ராஜமாணிக்கம், குருசாமி, கமிட்டி செயலாளர் அருள் செல்வன், த.மு.மு.க சாந்துமுகமது மற்றும் பள்ளிவாசல் அறங்காவலர்கள் சையது அபுதாகீர், அலி, சாகுல் ஹமீது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதிர்ச்சி தகவல்: ஏழைகளிடம் இருந்து பெறப்படும் லஞ்சம் மட்டும் ரூ.900 கோடி
அதிர்ச்சி தகவல்: ஏழைகளிடம் இருந்து பெறப்படும் லஞ்சம் மட்டும் ரூ.900 கோடி
வறுமைக் கோட்டிக்கு கீழ் வாழும் ஏழை - எளிய மக்களிடமிருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ. 900 கோடி லஞ்சம் பெறப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
டிரான்ஸ்பிரென்ஸி இண்டர்நேஷனல் இந்தியாவும், ஆராய்ச்சி அமைப்பு ஒன்றும் இணைந்து நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
இந்தப் பணம் அனைத்தும் அடிப்படைத் தேவைகளை பெறுவதற்காக லஞ்சமாக கொடுக்கப்பட்டவை ஆகும்.
இவ்வாறு லஞ்சமாகப் பெறப்பட்ட தொகையில் பெருமளவு போலீஸ் துறைக்கே சென்றுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதனைத் தொடர்ந்து, நில ஆவணங்கள் பதிவு செய்தலில் அதிகக் தொகை ஏழை - எளியோரிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது விநியோக முறை, மருத்துவம், கல்வி, மின்சாரம், குடிநீர் விநியோகம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், வங்கி போன்றவற்றில் அதிக முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் பல்வேறு காரணங்களுக்காக காவல்நிலையத்தை அணுகியதாகவும், அதில் தங்களது புகாரினை ஏற்கச் செய்வதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் சுமார் ரூ. 215 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நில ஆவணத்தைப் பதிவு செய்வதற்காக, 3 லட்சத்து 50 ஆயிரம் ஏழை - எளிய மக்கள் லஞ்சம் கொடுத்துள்ளனர்.
இவை தவிர, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை மக்களின் நிலையோ அதைவிடக் கொடுமையாக உள்ளது.
புறநோயாளிகளுக்கான அட்டை பெறுவது, பரிசோதனை மேற்கொள்ளுதல், படுக்கை வசதியைப் பெறுதல் போன்ற ஒவ்வொன்றிற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதால், சுகாதார வசதி வேண்டி வரும் அப்பாவி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவத் துறை மட்டுமின்றி, கல்வித்துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகப் புகார் கூறப்பட்டுள்ளது.
தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்பும் அடிதட்டு மக்கள், குழந்தைகளுக்கு தேவையான சான்றுகளை பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த பின்னரே அதனைப் பெற முடிவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்த ஆய்வை மேற்கொண்ட திட்ட இயக்குநர் டாக்டர் சுப்ரதோ மோன்டல், “மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தகவல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம், மின்னனு நிர்வாகம் உள்ளிட்ட வசதிகள் மூலம் ஏழை-எளியோருக்கு விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்வதால் மட்டுமே இவ்வாறான பிரச்னைகளைக் களைய முடியும். இதற்கு வெளிப்படைத்தன்மையான நிர்வாகம் அவசியம்’ என்றார்.
தகவல்: ஹிதாயத்
ஷார்ஜாவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
கடந்த வெள்ளி ( 26 - 06 - 2008 ) அன்று ஷார்ஜா பல்தீயா கேம்ப் -ல் -த.மு.மு.க சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு தோப்புத்துறை அபுல் ஹசன் தலைமை வகித்தார், தென்காசி மிஸ்பாஹுல் ஹுதாநத்வி அவர்கள் "ஷகாபாக்களின் தியாக வரலாறு" என்ற தலைமையில் சிறப்புரைஆற்றினார் , பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர், புளியங்குடிசித்திக் நன்றி உரையாற்றினார், மேலும் கூட்டத்தில் மாதம் தோறும் இது போன்று நிகழ்ச்சி க்கு ஏற்பாடு செய்ய முடிவு எடுக்க பட்டுள்ளது ,
மேலும் விபரங்களுக்கு 050 8606498 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
காலிமனைகள் விற்பனைக்கு...
மதுரையை சுற்றி உள்ள வாடிபட்டி , சோழவந்தான் , திருமங்கலம் மற்றும் கூடல் நகர் ஆகிய ஊர்களில் காலிமனைகள் விற்பனைக்கு உள்ளதுதொடர்புக்கு...
அமீரகத்தில் : 00971 55 8441796 ( அப்துல்லா )
இந்தியாவில் : 0091 9842151558
---------------------------------------------------------------------------------
சென்னை, திருச்சி மற்றும் கோயம்பத்தூர் ஏர்போர்ட் களிலிருந்து வீடுகளுக்கு செல்ல வாகன வசதிசெய்து தரப்படும், மேலும் மதுரை யில் கார் மற்றும் அனைத்து வகையான வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கும்
----------------------------------------------------------------------------------
மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் நிகழ்ந்த தியேட்டர் குண்டுவெடிப்பு சதி தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் வாஷி பகுதியில் விஷ்னுதாஸ் பவே ஆடிட்டோரியத்திலும், தானேயில் உள்ள கத்காரி ரங்கயாதன் ஆடிட்டோரியத் திலும் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர் பாக உடனடியாக செய்தி வெளியிட்ட சில 'முந்திரிக் கொட்டை' பத்திரிகைகள் வழக்கம்போல் முஸ்லிம்களை வேத னைப்படுத்தும் விதமாகவும், நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் விதமாகவும் இவர்களே சிறப்பு புலனாய்வு செய்து கண்டுபிடித்ததைப் போன்றும் விஷமச் செய்திகளை வெளியிட்டன. காவல்துறையினரும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதைப் போன்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீதே சந்தேகக் கண் கொண்டு பார்த்ததாக தகவல்கள் பரவின.
பின்னர், மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படையினரின் தீவிர புலனாய்வுக் குப் பின், நாட்டின் பழம்பயங்கரவாத இயக்கமான சங்பரிவார் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்து செயல்பட்ட தகவல்கள் அம்பலமாயின.
இதனைத் தொடர்ந்து நான்கு சங்பரிவார் பயங்கரவாதிகள் தீவிரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப் பட்டனர்.
1. மங்கேஷ் தினகர் நிகாம்
2. ரமேஷ் ஹனுமந்த் காத்கரி
3. சந்தோஷ் ஆங்ரே
4. விக்ரம் பவே
என்ற நால்வரும் கைது செய்யப் பட்டனர்.
முதலில் இவர்கள் பஜ்ரங்தள் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் கூறினர். ஆனால் தற்போது ஜனஜாகுருதி சமிதி மற்றும் சந்தன் சந்த்ஸா என்ற தீவிர இந்துத்துவ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என பிடிபட்ட பயங்கரவாதிகள் வாக்கு மூலம் அளித்தனர்.
பொதுவாகவே பிடிபட்ட உடன் தங்களது தாய் இயக்கத்தை காட்டிக் கொடுக்காமல் ஏதாவது ஒரு பெயரைச் சொல்வதே இவர்களது வழக்கம். இது கோட்சே காலத்திலிருந்தே தொன்று தொட்டு இருந்துவரும் வழக்கம். அந்த பாணியையே இப்போதும் சங் பயங்கர வாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்புச் சதியில் ஈடுபட்ட சங்பரிவார் பயங்கரவாதிகளை தீவிரமாக விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் கள் வெளிவந்ததைத் தொடர்ந்து பயங்கரவாத குற்றவாளிகளின் வீட்டில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
பயங்கரவாதிகள் வீடுகள் அமைந் திருக்கும் ராய்காட் மாவட்டம் வர்சாகிரா மம் மற்றும் பென் கிராமத்தில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிக்கியவை:
1. அம்மோனியம் நைட்ரேட் பவுடர் (பாக்கெட் பாக்கெட்டாக)
2. 20 டெட்டனேட்டர்கள்
3. ஏராளமான ஜெலட்டின் குச்சிகள்
4. டைமர்கள்
5. வோல்டேஜ் மீட்டர்கள்
6. இரண்டு ரேடியோ சர்க்யூட்கள்
7. ரிமோட் கண்ட்ரோல்கள்
8. ரிவால்வர்கள்
9. 92 தோட்டாக்கள்
சங்பரிவார் பயங்கரவாதிகள் முழுமை யாக அம்பலப்படுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
தேசத் துரோகிகள் தண்டிக்கப்படுவார்களா?
Source from Tmmk website
இன்சா அல்லாஹ்.... வருகின்ற 13 (July)
ஆம் தேதி என்னுடைய திருமணம் நடக்க இருப்பதால் நமது சமுதாய செய்திகள் வெளியிடவதில் தாமதம் ஏற்படும், முறையான இணைய தொடர்பு வசதி இல்லாததால் இச் சிரமத்திற்கு வருந்து கிறேன்...
மேலும் எனது திருமணம் வரதட்சணை மற்றும் ஆடம்பரம் இன்றி நடக்க இருக்கிறது , இத் திருமணம் நல்லவிதமாக நடந்து முடிய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
என்றும் உங்கள் MannadyKaka
இந்தியாவில் தொடர்க்கு.... 0091 97863 85245
ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்
இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் 25-06-2008 (புதன்) மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
ஆலந்தூர்: கலவரம் ஏற்படுத்த சதி
பள்ளிவாசலுக்கு அடுத்த வீட்டின் வாசலிலேயே பிள்ளையார் சிலை வழிபாடு நடத்துவது நாளை வீண் பிரச்சினைகளை வர வழைக்கும் என்பதை உணர்ந்த பள்ளி வாசல் நிர்வாகிகள் சுப்பிரமணியத்திடம் கேட்டதற்கு விதண்டாவாதம் பேசியிருக்கிறார். இதையடுத்து ஜமாஅத் நிர்வாகிகள் 10வது வார்டு தமுமுகவினரை அணுகினர். உடனடியாக 10வது வார்டு கிளை தமுமுக நிர்வாகிகளும், ஆலந்தூர் நகர நிர்வாகிகளும் காவல்துறையை அணுகினர்.
சுப்பிரமணி ஏற்கனவே இதேபோன்று சிலை வைக்க முயற்சி செய்து தமுமுக புகாரின் பேரில் எச்சரித்து விடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக செயல்பட்டு பிரச்சினையைத் தீர்க்க உதவி செய்த தமுமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் ஜமாஅத் நிர்வாகிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர். துரிதமாக நடவடிக்கை எடுத்த துணை ஆணையர் வரதராஜுலு பாராட்டுக்குரியவரே.
துபாயில் சொற்பொழிவு : பெற்றோர் - குழந்தைகள் : உரிமைகளும்,கடமைகளும்
துபாயில் எதிர்வரும் வெள்ளியன்று ( 27 ஜுன் 2008 ) மாலை எட்டு மணிக்கு பெற்றோர் குழந்தைகள் : உரிமைகளும், கடமைகளும் எனும் தலைப்பில் உரை ரியாத் குறைஷி அல் கிஸஸ் பகுதில் அமைந்துள்ள கலிமா செண்டரில் நிகழ்த்த இருக்கிறார்.
இந்நிகழ்வில் ஆண்களும், பெண்களும் பங்கேற்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புக்கு : 04 2644115
www.kalemah.org
This post was submitted by முதுவை ஹிதாயத்.
ராக்கெட் லாஞ்சர் குண்டுகள பின்னணி என்ன ?
துபாயிலிருந்து வந்த கண்டெய்னருக்குள் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் பதுக்கல் *தூத்துக்குடியில் சிக்கின தூத்துக்குடி : துபாயிலிருந்து தூத்துக்குடி தனியார் கம்பெனிக்கு வந்த கண்டெய்னருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரை டன் துப்பாக்கி தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் ராஜாத்தி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கம்பெனி உள்ளது. அதன் உரிமையாளராக முருகேசன், மேனேஜராக அதிசய குமார் ஆகியோர் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் துபாயிலிருந்து கப்பல் மூலம் அக்கம்பெனிக்கு கண்டெய்னர் ஒன்று வந்தது. நேற்று கம்பெனிக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த கண்டெய்னர் திறந்து பார்க்கப்பட்டது. அதனடியில் மொத்தம் அரை டன் எடை கொண்ட ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதுப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை தாளமுத்து நகர் போலீசார் பறிமுதல் செய்தனர். அதுகுறித்து டி.எஸ்.பி.,க்கள் முகமது கோரி, நடராஜ மூர்த்தி மற்றும் கியூபிரிவு, உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். சுங்க இலாகா அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கும்மிடிப்பூண்டி தனியார் கம்பெனியில் ராக்கெட் லாஞ்சர்கள் சிக்கின. அது போல தூத்துக்குடி கம்பெனிக்கு வந்த கண்டெய்னரிலும் ராக்கெட் லாஞ்சர்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களுக்கு ஒரு கேள்வி ?இன்றைய கால கட்டத்த்ல் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மீடியாக்கள் சித்தரிக்கப் பட்டு கைது செய்யப்ப் படுவதும் பின்னர் அனைத்து பத்திரிகைகளிலும் அது மாதக் கணக்கில் தலைப்பு செய்திகளாக இடம்பெறுவதும் நாம் அனைவரும் அறிந்த ஓன்று.இப்படி கைது செய்யப் படும் போலி தீவிர வாதிகள் பின்னர் எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்று விடுதலை ஆவது இன்று நம்மில் பலரும் அறிந்திராத ஓன்று.நிலைமை இப்படி இருக்க இன்று ஆயிரக் கணக்கில் டெட்டனேட்டர்கள் பிடிபடுவதும் ஒரு ஆயுதக் கிடங்கு என்று சொல்லும் அளவுக்கு துப்பாக்கி குடுகள் ராக்கெட் லான்செர்கள் போன்ற படுபயங்கரமான ஆயுதங்கள் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பிடிக்கப் படுகிறது. இது எந்த ஒரு முஸ்லிமுக்கும் சொந்தமானது இல்லை என்பதனால் இன்று பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக காண முடியவில்லை.இருந்தாலும் ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய கேள்வி என்னவென்றால் இத்தகைய ஆயுதங்கள் ஏன் எதற்க்காக பதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது, இதன் உண்மை பின்னணி என்ன எனபது பற்றி தான்.நீங்கள் ஒரு உண்மை இந்தியன் என்றால் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேளுங்கள் விடை தேட முயலுங்கள். நம் தாய் நாட்டை காப்பாற்றுங்கள்
ஒருங்கிணைத்தவர் Irai Adimai @ bayamairukku.blogspot.com
காவிகளின் காதல் வலையில் வாழ்கையை தொலைக்கும் இஸ்லாமிய பெண்கள்
விருதுநகரைச் சேர்ந்த நசீர் அகமது மகள் ஜாஸ்மின்(18). இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கின்றார். ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் டிரைவர் ரெங்கராஜ். இவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது ஜாஸ்மினுக்கும், ரெங்கராஜூக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டாக காதலித்து வரும் இவர்கள் உல்லாசமாக திரிந்தனர். இந்நிலையில் ஜாஸ்மினுக்கு திருமணம் செய்ய பெற்றோர், மாப்பிள்ளை பார்க்கத் துவங்கினர்.இதுபற்றி ரெங்கராஜிடம் ஜாஸ்மின் கூறினார். ""கோவிலில் திருமணம் செய்துகொள்ளலாம் புறப்பட்டுவா,'' என தெரிவித்ததும். ஜாஸ்மின் திருச்சி வந்தார். இருவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டு ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தனர். காதல் ஜோடிகளின் பெற்றோர்களிடம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். காதல் ஜோடிகள் மிகவும் மிகழ்ச்சியுடன் சென்றனர்இதற்க்கு முன்னும் இதுபோல பல பெண்கள் காதல் வலையில் விழுந்து தன்னுடைய பெற்றோர்களையும் உறவினர்களையும் மார்க்கத்தையும் மறந்து ஓடிப் போய் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் அவமானங்களை தேடி தந்த வரலாறு நிறைய உண்டு.ஆனால் அத்தகைய பெண்களின் தற்ப்போதைய வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டவர்களுக்கு தெரியும் இத்தகைய காதல் நாடகங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை அகோரம். இனிய சகோதரிகளே இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்.இவர்களின் உண்மை ரூபங்களை அறிந்துக் கொள்ளுங்கள்.
Thanks :bayamairukku.blogspot.com
கிரைண்டர் கண்டன்சர் வைச்சிருந்தவன் தீவிரவாதின்னா டெட்டனேட்டர் வச்சிருந்தவன் தியாகியா?
கிரைண்டர் கண்டன்சர் வைச்சிருந்தவன் தீவிரவாதின்னா டெட்டனேட்டர் வச்சிருந்தவன் தியாகியா?
டெட்டனேட்டர் திருட்டு வழக்கில் குழப்பம் 'கரன்ஸி' பலத்தில் பலர் 'எஸ்கேப்'கரூர்: கரூர் அருகே திருட்டு போனதாக கூறப்படும் 17 ஆயிரம் டெட்டனேட்டர் தொடர்பான விசாரணையில் எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், பின்னணியில் இருந்த முக்கிய புள்ளிகள் பலர் வழக்கில் இருந்து தங்கள் செல்வாக்கு மூலம் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புன்னம்சத்திரத்தில், கரூரை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் கடந்த மாதம் 24ம் தேதி 17ஆயிரத்து 100 டெட்டனேட்டர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி., சண்முகவேல் தலைமையில் விசாரணை நடந்தது. தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களிலும் விசாரணை தொடர்ந்தது.திருட்டு நடந்ததாக கூறப்படும் குடோனுக்கு அருகில் முருகேசன், வடிவேலு, தங்கராஜ் மற்றும் தேவராஜ் ஆகியோர் தோட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இது குறித்து பின்னர் எந்த தகவலையும் போலீஸார் வெளியிடவில்லை. மேலும், அனுமதி பெறாமல் கணக்கில் காட்டப்படாத அளவு டெட்டனேட்டர்களை முருகேசன் இருப்பு வைத்துள்ளதாகவும் போலீஸார் கூறினர். வழக்கில் தொடர்புடைய முருகேசன், அவர் சகோதரர் குமரேசன் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறிய போலீஸ் தனிப்படை, பிறகு அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. முக்கியமாக கணக்கில் காட்டப்படாமல் வெடிமருந்து வாங்கிய, இருப்பு வைத்திருந்த குவாரி உரிமையாளர்கள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், திடீரென விசாரணை நிறுத்தப்பட்டது.பின்னர் குவாரிகளில் வெடிமருந்து இருப்பு பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கில் சம்மந்தப்பட்ட வெடிமருந்து குடோன் உரிமையாளர்கள், குவாரி உரிமையாளர்கள் அனைவரும் மாவட்டத்தின் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அதிகார பலம் மற்றும் "கரன்ஸி' பலம் இவர்களை காப்பாற்றியதாக அதிருப்தி போலீஸார் கூறினர். கரூர் மாவட்டத்தில் 23 குவாரிகளில் இருந்து கணக்கில் காண்பிக்கப்படாத ஏராளமான டெட்டனேட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே, முருகேசனுக்கு சொந்தமான குடோனில் திருடப்பட்ட டெட்டனேட்டர் அனைத்தும் கடல் கடந்திருக்கும் என்று போலீஸ் சந்தேகப்படும் நிலையில், தற்போது திடீரென 15 ஆயிரம் டெட்டனேட்டர் கணக்கில் காட்டப்பட்டது போலீஸாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தற்போது காட்சிக்கு வைத்திருக்கலாம் என்று தனிப்பிரிவு போலீஸார் கூறுகின்றனர். கடந்த 15ம் தேதி சேலம் மாவட்டம், நங்கவள்ளியை சேர்ந்த முருகன் உட்பட எட்டு பேரை கைது செய்து வழக்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். எவ்வாறு திருட்டு நடவடிக்கை நடந்தது? கரூரில் இருந்து கடத்தி செல்லப்படும் வெடிமருந்து விற்பனையாகும் இடம், வாங்குவோர் யார்? என்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மாவட்டத்தின் முக்கிய "புள்ளிகள்' சிலரை காப்பாற்றவே, மாவட்ட போலீஸ் அவசரமாக எட்டு பேரை கைது செய்து விசாரணையை முடித்ததாக பாதிக்கப்பட்ட குவாரி உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.
நன்றி : bayamairukku.blogspot.com
சாதாரணக் குற்றவாளியை கூட தீவிரவாதியாக மாற்ற முடியும்-மீடியாக்களின் தொடரும் சாதனை
கடையநல்லூர்: திருச்சியில் 3 பாஸ்போர்ட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான புத்தகங்களுடன் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் பிடிபட்டார். அவரது வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
திருச்சி கோட்டை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சமஸ்பிரான் தெருவில் மின்சார வயர்கள், 3 பாஸ்போர்ட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட சில புத்தகங்களுடன் வாலிபர் ஒருவர் பிடிபட்டார்.
விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள வடகரையை சேர்ந்த ராஜாமுகமது என தெரியவந்தது. அவர் சில ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியதும், போலி முகவரி கொடுத்து மூன்று பாஸ்போர்டுகள் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த கோட்டை போலீசார் (?) ராஜாமுகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். தீவிரவாத அமைப்புகளோடு அவருக்கு தொடர்பு இருக்கிறதா, என விசாரணை நடத்தப்பட்டது.
ராணுவத்தில் இவர் எந்த பிரிவில் பணியாற்றினார், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பிரிவு அல்லது தொழில்நுட்ப பிரிவில் அவர் வேலை பார்த்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராஜாமுகமதுவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பற்றி பயிற்சியளித்து வரும் துவாக்குடி அருகேயுள்ள காட்டூரை சேர்ந்த பேராசிரியர் (பேராசிரியர் பெயரை இன்னும் கண்டு பிடிக்க வில்லையோ என்னவோ )ஒருவரிடமும், கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தென்காசி அருகேயுள்ள ராஜாமுகமதுவின் வீட்டில் திருச்சி தனிப்படை போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று அச்சன்புதூர் போலீசார் சோதனை நடத்தினர். அதில் ஒன்றும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.
திருச்சி தனிப்படை போலீசாரும் நேற்று சோதனை நடத்த தென்காசிக்கு வருவதாக அச்சன்புதூர் போலீசார் தெரிவித்தனர்.
நன்றி : தட்ஸ் தமிழ்
ஒருங்கிணைத்தவர் Irai Adimai
முகவை தமுமுக வின் கல்வி உதவி
இராமநாதபுரத்தில் நகர் தமுமுக வழங்கிய கல்வி உதவி நிகழ்சியில் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப தங்கவேலன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரவி சந்திர ராமவன்னி மற்றும் இராமநாதபுர (மத்திய) மாவட்ட தமுமுக தலைவர் சலிமுல்லாஹ் கான் உட்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(இன்ஷாஅல்லாஹ்) கல்லாமை என்பதை இல்லாமையாக்குவோம்!
இரத்த தானம் செய்தீடுவீர்! மனித உயிர் காக்க உதவிடுவீர்!!
வரதட்சணைக் கொடுமைகளை ஒழிப்போம்! மஹர் கொடுத்து மணம் முடிப்போம்!!!
குவைத்தில் புதிய தமிழ் மாத இதழ் வெளியீட்டு விழா!
'நீதியின் குரல்'
The "Needhiyin Kural (Voice of Justice)" new tamil monthly magazine releasing program conducted on June 13, 2008 Friday @ 10:00am at Trichy (Flower) Restaurant, Mirqab, Kuwait.
The program was presided over by Parangi Pettai Moulavi Afzal-ul-Ulamaa A.B. Khaleel Ahmed Baaqavee M.A., PGDCA (General Secretary, K-Tic & Co-Editor, Pirai Newsletter, Kuwait) while welcome speech was made by Mr. Aruvikkavizar Anantha Ravi (Asst. Editor, Needhiyin Kural Magazine, Kuwait).
The new tamil magazine was released by Dr. Pal Manuwel (Professor, Kuwait University & Advisor, Needhiyin Kural Magazine, Kuwait) and magazine received by Dr. Anwar Batcha (Organizer, Kuwait Indian Union Muslim League (KIUML)), Mrs. Aani Fransis (Treasure, Tamil Tamizhosai Poet Association, Kuwait) and Mr. Thamizhosai Raawanan (Ex-Secretary, Tamizhosai Tamil Poet Association, Kuwait).
The appreciated speeches was delivered by Dr. Pal Manuwel (Professor, Kuwait University & Advisor, Needhiyin Kural Magazine, Kuwait) and magazine received by Dr. Anwar Batcha (Organizer, Kuwait Indian Union Muslim League (KIUML)), Mr. Thamizhosai Raawanan (Ex-Secretary, Tamil Tamizhosai Poet Association, Kuwait), Mr. Anbarasan (Secreatary, Thaiman Kalai Ilakkiya Peravai, Kuwait), Mr. A. Sahmsudeen (President, Muththamizh Mandram, Kuwait), Mr. Vidhya Sagar (Advisor, Needhiyin Kural Magazine, Kuwait) and Mr. Mubarak Razvi (Vise-President & Media Coordinator, Kuwait Indian Union Muslim League (KIUML) & Designer, Needhiyin Kural Magazine, Kuwait).
The vote of thanks delivered by Community Poet Vizhuppuram Shaji M.A., B.Ed., (Edotor, Needhiyin Kural Magazine, Kuwait). The program was concluded at 12.00 pm with lunch. The program was attended a large number of Tamil brothers, journalists and poets with their relatives and friends from various parts of Kuwait and also from various Tamil Associations.
For sending your valuables suggestions, articles and advises please mail to: villupuramshaji@gmail.com or call (+965) 7984308.
News: - Portonovo 'Aiman', Kuwait
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு
சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-ந்தேதி நடக்கிறது
கருணாநிதி பங்கேற்கிறார்
சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மணிவிழா மாநாடு 21-ந் தேதி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் கே.எம்.காதர் மொகைதீன் எம்.பி., சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
60 பேருக்கு விருது
இந்திய ïனியன் முஸ்லிம் லீக் கட்சி 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபடுவது, சிறுபான்மை சமுதாய கலாசார தனித்தன்மையை பாதுகாப்பது போன்ற அடிப்படை கொள்கைகளை கொண்டுள்ளது. கட்சியின் மணிவிழா (60-வது ஆண்டு) மாநில மாநாடு சென்னையில் 21-ந்தேதி பலகட்டங்களாக நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் கே.எம்.காதர்மொகைதீன் எம்.பி., தலைமையில் விருதுவழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் மணிவிழா மாநாட்டு மலரை மில்லத் ஜி.எம்.பனாத்வாலா வெளியிடுகிறார். அதனை மத்திய மந்திரி ஆ.ராசா பெற்றுக்கொள்கிறார். முஸ்லிம் சமுதாயத்தில் முன்னுதாரணமாக விளங்கிய 60 பேருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருதினை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபட்டு வரும் இந்திய கம்ïனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம். ஸலாஹுத்தீன், வின்சென்ட் சின்னதுரை ஆகியோருக்கு அமைச்சர் அன்பழகன் சமுதாய நல்லிணக்க விருது வழங்குகிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் பணியாற்றி வருபவர்களுக்கு காயிதே மில்லத் விருதினை மத்திய மந்திரி இ.அஹமது வழங்குகிறார்.
ஜெயந்திநடராஜன்-கனிமொழி
அதே போல மகளிரணி சார்பில் சென்னை ராஜாஜி ஹாலில் காலை 10 மணிக்கு கல்வி மேம்பாட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதற்கு கட்சியின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஏ.எஸ்.பாத்திமா முசபர் தலைமை தாங்குகிறார். இதில் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளரும், முன்னாள் மத்தியமந்திரியுமான ஜெயந்தி நடராஜன் எம்.பி., வக்கீல் அருள்மொழி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 6 பெண்களுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்படுகிறது.
பின்னர் மாலையில் சென்னைத் தீவுத்திடலில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு நிறைவு விழா நடைபெறுகிறது. அதனையொட்டி மாலை 3.30 மணிக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் இருந்து ஊர்வலம் புறப்படும். அதில் முதல் முறையாக 12 ஆயிரம் இளைஞர்கள் வெள்ளை சட்டை பேண்டு அணிந்து பச்சை தொப்பியுடன் சீருடைப் பேரணியாக தீவுத்திடலுக்கு வருவார்கள்.
கருணாநிதி நிறைவுரை
அங்கு நடைபெறும் நிறைவு விழாவுக்கு மாநில தலைவர் கே.எம்.காதர்மொகைதீன் எம்.பி., தலைமை தாங்குகிறார். அனைவரையும் டாக்டர் எஸ்.ஏ.சையர்சத்தார் வரவேற்கிறார். முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.
இதில் கட்சியின் அகில இந்திய தலைவர் ஜி.எம்.பனாத்வாலா, மத்திய மந்திரி இ.அஹமது, மத்திய மந்திரி ஜி.கே.வாசன், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இந்திய கம்ïனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு கே.எம்.காதர்மொகைதீன் எம்.பி. கூறினார்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.
அப்துல் கலாம் கூற்றை நனவாக்கும் ஆலிம் முகம்மது சாலிஹ் கல்லூரி
மாணவ -மாணவியரே கனவு காணுங்கள் என்று உன்னத தலைமகன் மரியாதைக்குரிய ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் கூற்று நன்கு கற்றால்தான் செயல்திறன் பெறலாம். செயல்திறன் அதிகரித்தால் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் பரிணமிக்கும் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் அறிவுசக்தியாக மிளிரும் அந்த அறிவு நல்வாழ்வை வளமாக்கும். இதனால் நம் அறிவு வளர்ந்து நம்நாடு வளம் பெறும்.
ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் கல்விப் பணியை கடந்த 15 வருடங்களாக ஆலிஹ் முகம்மது சாலீஹ் அறக்கட்டளை மூலம் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கொடுப்பதில் பெருமைப்படுகிறோம். எங்களது கல்லூரியில் இன்ஜினீயரிங் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.
பி.டெக்.கில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப் பிரிவும் சிவில் இன்ஜினீயரிங் மெக்கானிக் இன்ஜினீயரிங் உள்ளது. மற்றும் மேலாண்மைப் படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு எம்.பி.ஏ., இரண்டு வருட எம்.சி.ஏ., படிப்பு உள்ளது.
ஆலிஹ் முகம்மது சாலீஹ் பாலிடெக்னிக் பிரிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், சிவில், மெக்கானிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகள் மூலம் சிறந்த கல்வியை கொடுத்து வருகிறோம்.
எங்களது கல்வி நிறுவனத்தில் பாரா மெடிக்கல் சயின்ஸ் பிரிவில் பி.பி.டி, படிப்பும் வழங்கி வருகிறோம். இன்டஸ்ட்ரியல் டிரைனிங் பிரிவில் எலக்ரிஷியன், பிட்டர், மோட்டார் வாகனம் பற்றிய படிப்புகளும் உள்ளது.
கடந்த 2003-2004, 2004-05ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டாண்டுகள் பிசியோதெரபி பாடத்தில் தங்க மெடல் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தகவல் : ஹிதாயத் , முதுகளத்தூர்
தமிழர்களைக்காத்த குவைத் தமுமுக
பிழைப்புத் தேடி குவைத்திற்குச் சென்ற தமிழர்கள் ஒன்பது பேர் முதலாளியின் சித்திரவதைகளைப் பொறுக்க முடியாமல் அவரிடமிருந்து எப்படியோ ரகசியமாகத் தப்பியிருக்கிறார்கள். கடந்த ஒரு வார காலமாய் சோறு தண்ணியின்றி நடு ரோட்டில் அலையும் அவர்களை இந்தியத் தூதரகமும் அலட்சியப்படுத்தி விடவே, நாடு திரும்ப வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட த.மு.மு.க.வினர் அவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியில் இறங்கியிருப்பது ஆறுதலான விஷயம்.
கடலூர்மாவட்டம் சாத்தப்பாடியைச்சேர்ந்த ரவிச்சந்திரன்,உதயகுமார், முருகன்,கருணாகரன், அப்துல்கனி மற்றும் திருவாரூர் மாவட்டம் மாங்குடியைச் சேர்ந்த மணிவண்ண பாண்டியன்,ராஜாராமன், முருகானந்தம்,இளையராஜா ஆகியோர்தான் குவைத்தில் தவித்துக்கொண்டிருக்கும் அந்த அப்பாவி ஜீவன்கள்.
நெல்லைப் பக்கம் தாழையூத்தைச் சேர்ந்தவர் பீர் மரைக்காயர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகச் செயலாளராய் இருந்து பலவிதமான பொதுநலப் போராட்டங்களில் ஈடுபட்டவர். இவர் பிழைப்பிற்காக குவைத் சென்றார். அங்கு பஸ் டிரைவராய் இருக்கிறார். அவர் கடந்த 6-ம் தேதி நமது அலுவலகத்திற்கு போன் செய்து... `சார்... பிழைப்புத் தேடி குவைத்திற்கு வந்த ஒன்பது தமிழர்களை அவர்களின் முதலாளி தொடர்ந்து சித்திரவதை செய்ததால் ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் அங்கிருந்து தப்பி வந்து ஒரு வார காலமாய் பசி பட்டினியால் தவித்தனர். அவர்களை நான்தான் மீட்டு என்னுடன் தங்க வைத்திருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் என் அறையிலிருந்தால் எனக்குப் பிரச்னையாகி விடும். எனவே, அவர்கள் தாய் நாட்டிற்குத் திரும்ப உதவி செய்யுங்கள்' என்றவர், ஒன்பது பேரும் சேர்ந்து எழுதிய கடிதத்தையும் நமக்கு இ-மெயில் செய்தார். அந்தக் கடிதத்தில் ஒன்பது பேரும் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விலா வாரியாய் எழுதியிருந்தார்கள்.
சற்று நேரத்தில் குவைத்திலிருந்தே மணிவண்ண பாண்டியன் என்பவர் நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார். ``சார் நானும் எனது நண்பர்கள் ராஜாராமன், முருகானந்தம், இளையராஜா ஆகியோரும் வேலை தேடிக்கிட்டிருந்தோம். அப்ப எங்க ஊரைச் சேர்ந்த புரோக்கர் முருகன் என்பவர்தான் `குவைத்தில் டிரைவர் வேலை இருக்கு, மாசம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம், தங்குமிடம், சாப்பாடு இலவசம்'னு ஆசை காட்டினாரு. உடனே நாங்களும் வீட்டிலிருந்த நகைகளையெல்லாம் அடகு வைச்சி, 90 ஆயிரம் ரூபாய் வரை செலவு செஞ்சி கடந்த 2005-ம் ஆண்டு குவைத்திற்கு வந்தோம். இங்குள்ள அல்ஹசீரா கார் ரென்டிங் எஸ்டேட் என்கிற கம்பெனியில் டிரைவர் வேலை கிடைச்சது. இந்த கம்பெனியில் இருபதுக்கும் மேற்பட்ட பஸ்கள் இருக்கு. அவங்களுக்குச் சொந்தமான பல கம்பெனிகளின் ஊழியர்களை அழைத்துக் கொண்டு அந்தந்த கம்பெனியில் கொண்டு போய் விடுவதே எங்கள் வேலை.
மாசம் பதினஞ்சாயிரம் சம்பளம்னு சொன்னதாலே உற்சாகமாய் வேலை செஞ்சோம். எல்லாம் கொஞ்ச நாள்தான். முதல் மாசம் சம்பளம் தரலே. இரண்டாம் மாசமும் தரலே. கேட்டா லைசன்ஸ், அடையாள அட்டை எடுக்க சம்பளம் சரியாப் போச்சுன்னுட்டாங்க. எங்களுக்கெல்லாம் பயங்கர அதிர்ச்சி. ஆனா ஒண்ணும் பேச முடியாது. தலைவிதியை நொந்தபடி வேலை செஞ்சோம். அப்புறமும் இரண்டு மாச சம்பளம் தரலே. அதைக் கேட்டா அது டெபாசிட்டிலே இருக்கும்னுட்டாங்க. எங்களுக்கு ஒண்ணும் புரியலே. ஆனா நாட்கள் செல்லச் செல்லத்தான் புரிஞ்சிது. அதாவது, நாங்க ஓட்டுற பஸ் 1980-ம் ஆண்டு மாடல். ரொம்பப் பழசு. சரியா பிரேக் கூட பிடிக்காது.ஏதாவது சின்ன சுவரில் மோதித்தான் வண்டியை நிறுத்தணும்.அப்படி மோதும்போது வண்டியில் ஏதாவது சேதம் ஏற்பட்டாலோ, பஞ்சரானாலோ டெபாசிட் பணத்துலே கழிச்சிருவாங்க.
எங்களுக்கு 21 மணி நேர வேலை, மூன்று மணி நேரம்தான் தூக்கம். காலையிலே 4 மணியிலே இருந்து மாலை 6 மணி வரை டிரைவர் வேலை பார்க்கணும். ஆறு மணிக்கு மேலே முதலாளி பாலைவனத்துலே கட்டுற கெஸ்ட் ஹவுசில் சித்தாள் வேலை செய்யணும். இரவு 12 மணிக்கு சித்தாள் வேலையை முடிச்சிட்டு ரூமுக்கு வர நள்ளிரவு ஒரு மணி ஆயிடும். அப்புறம் கொஞ்ச நேரம் தூங்கிட்டு மறுபடியும் அதிகாலை நாலு மணிக்கு எழுந்து வேலைக்குப் போகணும். அதனாலே படுத்தா தூக்கம் வராது. தூக்கமில்லாததாலே உடம்பே மெலிஞ்சி போயிட்டுது. எங்களிடம் முதலில் மாசம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றார்கள். ஆனால் வேலைக்குச் சேர்ந்த பிறகு, 8500 ரூபாய்தான் சம்பளம். அதிலும் சாப்பாடு மற்றும் தங்குமிடத்திற்காக நாலாயிரம் ரூபாய் பிடிச்சுக்குவாங்க. கேள்வி கேட்க முடியாது.பேசாம நம்மூரிலேயே நிம்மதியா இருந்திருக்கலாம் போலிருக்கு'' என்றவரின் குரல் கம்மியது.
அவரைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் என்பவர் நம்மிடம் பேசினார். ``எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி. நானும் எனது நண்பர்கள் உதயகுமார், முருகன், கருணாகரன், அப்துல் கனி ஆகியோரும் புரோக்கர் ஆறுமுகம் என்பவர் மூலம் குவைத் வந்தோம். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவைதான் சம்பளம் குடுப்பாங்க. சில சமயம் அதுவும் லேட்டாகும். ஏன்னு கேட்டாப் போதும், எங்க முதலாளிக்குக் கோபம் வந்திடும். கம்பியால் அடிஅடியென அடிப்பான். பூட்ஸ் காலால் மிதிப்பான். பஸ் ரிப்பேராகி நின்னு போனாப் போதும், உடனே கூப்பிட்டு கம்பியால் அடிப்பான். கக்கூஸ் கழுவச் சொல்லுவான். எங்களாலே எதிர்த்து எதுவும் செய்யமுடியாது.அடிச்சதில் உடம்பு பூரா காயமிருந்தாலும் லீவு தரமாட்டான்.வலியைப் பொறுத்துக்கிட்டு வண்டி ஓட்டியே ஆகணும். இதனாலே சில சமயம் தற்கொலை செஞ்சுக்கலாம்னு தோணும். ஆனா வீட்டை நினைச்சிப் பார்த்து எல்லாத்தையும் மறந்துடுவோம். அந்தக் கொடூரத்துக்கு இன்னொரு உதாரணமும் சொல்றேன். போன வருஷம் என்னோட அப்பா ராமலிங்கம் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இறுதிக் காரியம் செய்யிறதுக்காக ஊருக்கு வர 15 நாட்கள் லீவு கேட்டேன்.`நீ போனவுடனே உங்கப்பா என்ன உயிரோடவா வந்திடப்போறாரு?'ன்னு ஏளனம் செஞ்சி லீவு தர மறுத்துட்டான். என்னோட தங்கை அமுதவல்லியின். திருமணத்துக்குக் கூட என்னால் வர முடியலே!'' என்றார் விரக்தியுடன்.
தொடர்ந்து விழுந்த அடி, உதையின் காரணமாக இந்த ஒன்பது பேரும் கூடிப்பேசி இந்த கம்பெனியை விட்டு எஸ்கேப்பாக முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி கடந்த வாரம் பஸ்சை ஆங்காங்கே நிறுத்தி விட்டு ஓரிடத்தில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்திருக்கிறார்கள். அதன் பின்னர் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் போய் புகார் செய்து தங்களை தாய் நாட்டுக்கே திரும்ப அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கோ, மனுவை மட்டும் வாங்கிக்கொண்டு விரட்டிவிட்டார்களாம். சரியான ரெஸ்பான்ஸ் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமலும் கையில் காசில்லாததால் பசி மயக்கத்திலும் கால் போன போக்கில் சுற்றியிருக்கிறார்கள்.
ஒரு வார கால பட்டினிப் போராட்டத்திற்குப் பின்னர், ஒருவழியாய் குவைத்தில் டிரைவராய் இருக்கும் பீர் மரைக்காயரைச் சந்தித்திருக்கிறார்கள். அதைப்பற்றி நம்மிடம் போனிலேயே விளக்கினார் பீர் மரைக்காயர். ``நான் குவைத் முழுக்க வண்டி ஓட்டுபவன். பஸ்சிலே தமிழர்களும் ஏறுவாங்க. ஒருநாள் என்னோட சக டிரைவர் நண்பர் இந்த ஒன்பது பேர் படும் பாட்டைச் சொல்லி, `நீங்கள்லாம் ஊருலே பெரிய பொதுநலவாதினு பீத்திக்குறீங்க. இங்கே தமிழர்கள் ஒன்பது பேர் சித்திரவதையால் பாதிக்கப்பட்டு சாப்பாட்டுக்கே அல்லல்பட்டுக்கிட்டிருக்காங்க. நீங்க முஸ்லிம். இந்துக்களுக்கெல்லாம் எங்கே உதவப்போறீங்க?'ன்னார்.
உடனே நான் `இந்து - முஸ்லிம்னு பிரிச்சுப் பார்க்காதீங்க. நாம எல்லோருமே இந்தியர்கள்தான்'னு சொல்லி அந்த ஒன்பது பேரையும் எனது ரூமுக்கே அழைத்து வரச்சொன்னேன். இப்ப அவங்களை என்னோட ரூமில்தான் தங்க வைச்சிருக்கேன். ஆனா, அவங்களை ஒரு வாரத்துக்கு மேல் என்னுடன் தங்க வைக்க குவைத் சட்டம் இடம் தராது. என்னையும் சேர்த்து குற்றவாளியாக்கிருவாங்க. இந்தியத் தூதரகத்துலே இவங்க புகார் குடுத்ததாலே,அதிகாரிங்க அந்த பஸ் கம்பெனி முதலாளியை விசாரிப்பாங்க. அவனோ, அந்த ஒன்பது பேரும் பஸ்சை திருடிட்டு வந்துட்டாங்கன்னு பொய்யா புகார் குடுத்துட்டான்னா, அவ்வளவுதான். கேஸ் முடியிறவரை ஒண்ணுமே செய்ய முடியாது. எனவே, தமிழக அரசு மூலம் கோரிக்கை வந்தாத்தான் இவங்க பத்திரமா திரும்ப முடியும்'' என்றார்.
தற்போது இந்த இளைஞர்களை பத்திரமாய் மீட்கும் பணியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏற்றிருக்கிறது. அதன் நெல்லை மாநகரச் செயலாளர் உஸ்மான்கானிடம் பேசினோம்.குவைத்தில் தவிக்கும் இளைஞர்களின் மனு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதைக் கொண்டு கடலூர்,திருவாரூர் மாவட்ட கலெக்டர்களைச் சந்திக்க முடிவு செய்திருக்கிறோம். அந்த இளைஞர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவலம் பற்றி இதுவரை தங்கள் வீடுகளுக்குச் சொல்லவில்லை. சொன்னால் அவர்கள் ரொம்ப வருத்தப்படுவார்களே என்கிற பயம்தான் காரணம். ஆனால், இளைஞர்களின் ரத்த சம்பந்த உறவினர்கள்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடம் புகார் செய்யணும். அதுபற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு மாலைராஜா எம்.எல்.ஏ. வரச்சொல்லியிருக்கிறார். தவிர, வைகோவிடமும் சொல்லப்போகிறோம். கண்டிப்பாக அந்த இளைஞர்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கு த.மு.மு.க. துணை நிற்கும்!'' என்றார் உறுதியுடன்.
ஆக,இந்து இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை பத்திரமாய் நாடு திரும்ப முயற்சிகளை எடுக்கும் முஸ்லிம் அமைப்பின் மனித நேயம் பாராட்டத்தக்கது. நமது தேசத்தின் ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு!
கடல் கடந்து ஒரு கண்ணீர் மடல்
(இது சீதனக் கொடுமையால் கற்பை இழந்து தவிக்கும் ஏழைக் குமரின் கண்னீர் கடிதம்)
என் அன்பான குடும்பத்திற்கு..
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)தம்பி! உம்மா! நீங்கள் எப்படி? நான் நல்ல சுகம்.
நீங்கலெல்லாம் சுகத்தோடு வாழ நான் அல்லாஹ்விடம் பிரார்த்திற்கின்றேன். நான் குவைத்திற்கு வந்து சுமார் எட்டு மாதங்களாகின்றது. என்னால் இங்கு வாழ முடியாதுள்ளது. என்னை மிருகத்தை விடக் கேவலமாகவே நடாத்துகின்றார்கள். எனது முதலாலி ஒரு காட்டு மிராண்டி. என்னை பல முறை தகாத உறவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து அனுபவித்துவிட்டான். ஒரு நாளைக்கு பல பெண்களும் ஆண்களும் செய்யும் வேலைகளை எனக்கு மட்டும் தருகின்றார்கள். நான் வேலைக்குச் சென்றிருக்கும் இடத்தில் வயது போன ஒரு பைத்தியம் பிடித்த ஒருவன் இருக்கின்றான். எனது ஆடைகளையும் பொருட்களையும் நான் கவனிக்காமல் இருந்தால் நெருப்பால் எரித்துவிடுகின்றான். ஒவ்வெரு நாளும் துன்பத்தோடுதான் எனது வாழ்வை இங்கு கழிக்கின்றேன்.
உம்மா! ஏன் என்னை வெளிநாடு வெளிநாடு என்று அனுப்பி வைத்தீர்கள்? இங்கு நரகத்தையே நான் காணுகின்றேன். உம்மா! ஊரில் இருக்கும்போது எனக்குத் தொழுகை எப்போதும் தவறுவதில்லை. உங்களுக்குத் தெரியும். ஆனால் நான் இங்கு ஒரு வக்துக் கூடத் தொழ எனக்கு அனுமதி இல்லை.
ஒரு நாள் உங்களோடும் தம்பிமார்களோடும் பேசுவதற்கு அரபியின் வீட்டு போனை நான் அழுத்திய போது எனது எஜமானி என்னைக் கண்டுவிட்டாள். உடனே எனக்குப் பயங்கரமாக அடித்து விட்டு சிறிதாக துவாரமுள்ள ஒரு ரூமுக்குள் என்னைக் கட்டி வைத்தாள். சுமார் ஒரு இரவும் இரண்டு பகல்களும் அந்த ரூமுக்குள் நான் எவ்வித உணவோ குடிநீரோ இன்றித் தவித்துக் கிடந்தேன்.அப்போது தற்கொலையாவது செய்து கொண்டால் என்ன என்ற சிந்தனைகூட வந்தது. உம்மா! பிறகு உங்களது முகங்கள் எனது ஞாபகத்திற்கு வந்தவுடன் அதை நிறுத்திக்கொண்டேன்.
நான் இவ்வளவு மிருகத்தனமாக நடாத்தப்படுவது உங்களுக்கெல்லாம் வேதனை அளிக்கும். ஆனால் என்னைப் போன்று மோசமாக எத்தனையோ குமருகள் இங்கு அரபிகளால் நடாத்தப்படுவது உங்களுக்குத் தெரியாது.
உம்மா! எனது கூட்டாளி பெளசியாவுக்கு போன மாதம் திருமணம் நடந்ததாக இங்கு ஒரு ட்ரைவர் சொன்னார். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு இப்போது வயது இருபத்தி எட்டு. நான் இங்கு வந்ததே எனது திருமணத்திற்கு வீடு கட்டத்தான். உங்களுக்குத் தெரியும்.
உம்மா! நான் ஒரு முடிவெடுத்துள்ளேன். எனக்கு இனிமேல் திருமணம் வேண்டாம். எனக்கு நீங்கள் எந்த ஆம்பிளையையும் திருமணம் பேச வேண்டாம். மரியாதையும் மார்க்கமும் உள்ள யாராவது முன் வந்து வீடு காணி கைக்கூலி இல்லாமல் என்னை முடிக்க வந்தால் அவரோடு வாழ நான் விரும்புகின்றேன். இல்லாவிட்டால் நான் இப்படியே வாழ்ந்து கொள்கின்றேன்.
உம்மா! எனது தம்பிமார்களுக்கு திருமணம் செய்யும் போது யாரிடத்திலும் வீடோ சொத்துக்களோ வாங்காதீர்கள். அக்கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டுதான் இதனைக் கூறுகின்றேன். அல்லாஹ்வின் அச்சமில்லாத கோழைகளே பெண்களிடத்தில் வீடு வாகனம் சொத்துக்களை வாங்குவார்கள். நம்மட தம்பிமார்களை அவ்வாறான ஆண்களாக ஆக்கிவிடாதீர்கள்.
சீதனக்கொடுமையால் இன்று முஸ்லிம் குமருகள் படும் கஷ்டங்களை ஏன் உம்மா நம்மட உலமாக்கள் புரிகின்றார்களில்லை???
உம்மா! நம்மட வாப்பா மரணித்து சுமார் மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. நாம் எங்கு வாழ்ந்தாலும் மானமும் மரியாதையும் தான் முக்கியம். இதை மறந்துவிடாதீர்கள்.
எல்லாவற்றிற்கும் அந்த நாயன் இந்த சீதனம் வாங்கும் ஆண்களை சும்மா விடமாட்டான்.உம்மா! இம்மடலில் எனது கஷ்டங்களில் ஒரு பகுதியைத் தான் கூறியுள்ளேன். மிக விரைவில் நான் நாடு திரும்புவதற்கு துஆச் செய்யுங்கள்.
சீதனத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் நமது ஊரிலிருக்கும் 'தாருல் அதருக்கு' கட்டாயம் ஞாயிற்றுக் கிழமைகளில் பெண்களுக்கான பயானுக்கு போங்கள். இம்மடலை முடிக்கின்றேன். வஸ்ஸலாம்.
கண்னீருடன்…
ஷர்மிலா
(அன்பின் இளைஞர்களே! இது கற்பனைக் கடிதமல்ல. பெயர்களை மட்டும் மாற்றியுள்ளோம். நமது ஏழைக்குமருகள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் படும் அவஸ்தைகள் தான் நீங்கள் கண்டது. கடல் கடந்து கற்பையும் இழந்து நடுவீதியில் நிற்கும் இக்குமருகளுக்கு என்ன தீர்வு???
வீடுவாங்கும் சீதனக்கொடுமைதானே காரணம்? அல்லாஹ் ஹராமாக்கிய இக்கொடுமையை செய்யும் அத்தனை இளைஞர்களும் அந்த மறுமைநாளில் அல்லாஹ்வின் முன்னால் நிச்சயம் நிறுத்தப் படுவார்கள். சீதனம் எனும் இக்கொடுமையில் இருந்து அல்லாஹ் நம்மனைவர்களையும் பாதுகாத்து அருள்வானாக!)
லால்பேட்டை இனைய தளம்
நன்றி : தாருல் அதர் அத்தஅவிய்யா
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பிலுள்ள வக்ஃப்போர்டு சொத்துகள் மீட்கப்படும்: வாரியத் தலைவர் ஹைதர்அலி
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பிலுள்ள வக்ஃப்போர்டு சொத்துகள் மீட்கப்படும்: வாரியத் தலைவர் ஹைதர்அலி
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் போர்டு சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் ஹைதர் அலி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் வண்டிமேடு, மாம்பழபட்டு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் போர்டு சொத்துகளை அவர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:
விழுப்புரத்தில் வக்ஃப் போர்டு சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதுபோல் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. வக்ஃப் போர்டுக்கு சொந்தமான சொத்துகளை யாரும் ஆக்கிரமிப்பு செய்யவோ, விற்கவோ முடியாது. இதை 1995-ம் ஆண்டு சட்டத்தின்படி ரத்து செய்யலாம்.
தமிழகத்தில் சுமார் ரூ. 1000 கோடி மதிப்பில் வக்ஃப் போர்டுக்கு சொத்துகள் உள்ளன. ரூ. 5,400 கோடி மதிப்பிலான சொத்துகள் மறைமுக ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
வக்ஃப் போர்டு என்று இருப்பதை மாற்றி வக்ஃப் என்று மட்டும் பெயர் வைக்க சட்டம் இயற்ற வேண்டும். தமிழக அரசு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்துள்ளது. இது அவர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு உதவும்.
இந்தியாவில் வட்டியில்லா வங்கிகளை அறிமுகப்படுத்த வேண்டும். ஒரு வங்கியொன்று ஏற்கெனவே இதுபோல் கடன் வழங்க முன்வந்தது. ஆனால் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி அளிப்பதற்கு அமெரிக்காவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார் என்றார் ஹைதர் அலி.
பேட்டியின் போது வக்ஃப் போர்டு கண்காணிப்பாளர் அப்துல்சமது, ஆய்வாளர் ஷஃபிபாபு, ஜமாத் கூட்டமைப்பு தலைவர் அப்பாஸ், பொருளர் ஷாகுல் அமீது ஆகியோர் உடனிருந்தனர்.
This post was submitted by முதுவை ஹிதாயத்
இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை!
பதில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை! எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் மிகவும் கடுமையான பதிலடியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் முஸ்தபா மொஹமத் நஜ்ஜார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்தவாரம் இஸ்ரேல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷால் மொஃபாஸ் ஒரு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஐ.நா. பொருளாதாரத் தடைகள் ஈரான் அணு ஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் ராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாதது" என்று கூறியிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் நஜ்ஜார் கூறியதாவது:எங்கள் ராணுவமும் தயார் நிலையிலேயே உள்ளது. எங்கள் மீது எவரேனும் தாக்குதல் நடத்த நினைத்தால் மோசமான பதிலடியை சந்திக்க வேண்டியதிருக்கும். இஸ்ரேல் அமைச்சர் மொஃபாஸ் மீது ஐ.நா. பாதுகாப்பு குழு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். (மூலம் - வெப்துனியா)
ரஸ் அல் கைமா நகரில் இந்தியரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது
ரஸ் அல் கைமா: ஐக்கிய அரபு நாடுகளின் ரஸ் அல் கைமா நகரில் இந்தியரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.எமிரேட்ஸைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவரது தொழில் வளாகத்தில் அழுகிய நிலையில் கிடந்தது. அவரது பெயரை டி.கே. என்று மட்டும் போலீசார் தெரிவித்துள்ளார்.30 வயதான அவர் குடிப்பழக்கம் உள்ளவர் எனத் தெரிய வந்துள்ளது. பல நாட்களாக வேலைக்கும், தங்கியிருந்த அறைக்கும் வராததால் அது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் சக்ர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.பிரேதப் பரிசோதனையில் அவர் இயற்கையான மரணம் அடையவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்திய குண்டுவெடிப்புகளின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் - JUNIOR VIKATAN ARTICLE
இந்திய குண்டுவெடிப்புகளின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் - JUNIOR VIKATAN ARTICLE
நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கம் பல செயல்கள் பலரால் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், நாம் செய்யத் தவறிய அல்லது தவறாகச் செய்யும் ஒரு செயல் பலருடைய கண்டனத்துக்கு உள்ளாகிறது. குhல்பந்து விளையாட்டில் எதிரணியினர் போட மயலும் எத்தனையோ 'கோல்'களை ஒரு கீப்பர் எடுத்திருக்கலாம். ஆனால், அவர் தடுக்கத் தவறியதால் விழுந்த 'கோல்' மட்டுமே நம் நினைவில் வகிநிறது. ஆதைப் போலவே பயங்கரவாதத் தாக்குதல்களை காவல்துறை பலமுறை தடுத்திருக்கலாம். உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட இருந்த பயங்கர வாதிகளைக் கைது செய்திருக்கக்கூடும். ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தவுடன் அரசு தடுக்க தவறிவிட்டது என்ற எண்ணமே நம் அனைவருடைய மனதிலும் நிறைந்துவிடுகிறது.இந்த எண்ணம் சாதாரணமாக மக்கள் மனதில் எழுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் இதுபோன்ற துயரமான நிகழ்வுகளைகூட அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடிவிதில்லை.கடந்த மே மாதம் 13-ம் நாள் ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறிந்து பாரதிய ஜனதா கட்சி எழுப்பிய கண்டனங்களில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டும் இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பலவீனமான அரசு என்றும், சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியைக் கருத்தில்கொண்டு பயங்கரவாதிகளுக்கு சதிராக உறுதியாக நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு தயங்குகிறது என்றும் மத்திய அரசு மீது குற்ற்ச்சாட்டுகள் எழுந்தன. முணி;டும் மீண்டும் ஒரே புகாரைச் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் அதை உண்மையென நம்பிவிடுவார்கள் என்று பீ.ஜெ.பி கருதுகிறது போலிருக்கிறது. போடா சட்டம் அமலில் இருந்த போதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன என்பதை இந்திய மக்கள் மறந்து பொயிருப்பார்கள் என்று அந்தக் கட்சித் தலைமை நினைக்கக்கூடும். இப்பொது கர்நாடக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பீ.ஜெ.பி. பெற்றிருக்கும் நிலையைப் பார்க்கும்போது அந்தக் குற்றச்சாட்டும்கூட கர்நாடக மக்கள் மத்தியல் எதிரொலித்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.இந்தியவில் நடக்கும் பயங்கரவாத செயல்களில் அப்பாவி மக்கள் குறி வைக்கப்படுகிறார்கள் நம்முடைய மக்கள் கோயில்களிலும் மசூதிகளிலும் இறக்கிறார்கள். பேருந்துகளிலும் தொடர்வண்டிகளிலும் பயணம் செய்து கொண்டிலுக்கும்போதே மடிகிறார்கள். கடைவீதிகளிலும் பொழுதுபோக்குப் பூங்காகளிலும் சிதறி சின்னா பின்னமாகிறார்கள். எதற்கா சாகிறோம் என்று அறியக்கூட அவகாசம் இல்லாமல் அப்பாவிகளுடைய உயிர் பறிக்கப்பட்டு விடுகிறது. இவர்களில் பலர் அவர்களுடைய குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருக்கலாம். இவர்களுடைய மறைவுக்குப் பிறகு அந்தக் குடும்பங்கள் பலவிதமான துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகலாம். ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் சிலர் இந்தத் துயரங்களில் அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்கள்.
ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கம் ஏதாவது ஓர் அமைப்புகாரணம் என்ற முடிவுக்கு வருகிறோம். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று யாராவது சிலர் கைது செய்யப்படுகிறார்கள்.மோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இருந்தும், அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி என்றால், முதலில் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது கொல்லல்ட்டவர்கள் தவிர, புதிதுபுதிதாக பயங்கரவாத இயக்கங்களில் உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொருளாகிறது அல்லது கைது செய்யப்பட்டவர்களோ,கொல்லப்பட்டவர்களோ முந்தைய சம்பவத்துடன் தொடர்பில்லாதவர்கள் என்று அர்த்தமாகிறது.
இந்த பயங்கரவாத நிகழ்வுகளால் அரசியல் ஆதாயம் யாருக்குக் கிடைக்கிறது? இந்த சம்பவங்கள் நடைபெறவேண்டிய நாளைத் தீர்மானிப்பது யார்? அதில் ஏதேனும் அரசியல் இருக்கிறதா? ஒவ்வொரு பயங்கராவாத நிகழ்வும் வேறு ஏதாவது சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கிறதா? இவை எதுவும் அர்த்தம் இல்லாத கேள்விகளாக இருக்கலாம். அல்லது இவற்றில் ஒன்றிரண்டு கேள்விகளுக்கான விடைகளில் ஏதேனும் உண்மை ஒட்டிக் கொண்டிருக்கலாம். இந்த வினாக்கள் பலருடைய சிந்தனையில் எழுந்திருக்கக்கூடும். இருந்தும், தொடர்ந்து அவற்றுக்கான விடை தேடும் பணியில் ஒருவர் ஈடுபட முடியாமல் அவருடைய அன்றாடப் பணிகள் அவரை ஆக்கிரமித்திருக்கலாம்.அண்மையில் தற்செயலாக இணையதளத்தில் படிக்க நேர்ந்த ஒரு ஆங்கிலக்கட்டுரையில் இடம் பெற்றிருந்த சில தகவல்கள் இந்தக் கேள்விகளில் அர்த்தம் இல்லாமல் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தின.சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் சர்வதேச பின்னணி இருக்கக்கூடும். தேர்தல் மூலம் பாக்கிஸ்தானில் அமைந்த அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மே 20-22 தேதிகளில் சந்திக்க இருந்தார். இரு நாடுகளுக்கு இடையில் நல்லுறவு ஏற்பட்டால் யாருக்கு இழப்பு ஏற்படுமோ, அவர்களே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கக்கூடும்.
1948ம் வருடம் மே 14 அன்று இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி உலகமெங்கும் இஸ்லாமியர்களும் பாலஸ்தீன ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அந்த செய்தியபை; பின்னுக்குத் தள்ளி 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற செய்தி உலக ஊடகங்களில் இடம் பெறும் வகையில் ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்திருக்கின்றன. லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்க ஜூலை 11, 2006 அன்று மும்பையில் தொடர்வண்டியில் குண்டுகள் வெடித்தன.
மேலும் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் சட்ட மன்றத் தேர்தலுக்கான வாக்கப்பதிவு நடக்க இருந்தது இதேபோல, குஜராத் தேர்தல் வாக்கப் பதிவுக்கு இரு மாதங்களுக்கு முன்தாக அஷhதாம் கோயிலில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். 2005, மே 2ம் நாள் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்ததையொட்டி மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் இந்தியாவில் நடந்தன. அதற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு வாரணாசியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.
இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த எதிர்ப்பு அதிகமாக இருந்த கடந்த ஆண்டில் ஹைதராபாத் பூங்காவில் குண்டுகள் வெடித்தன என்று அந்தக் கட்டுரை பட்டியலிடுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பல நாடுகளில் தங்களுடைய பங்காளிகளுக்கு அரசியல் அதாயம் கிடைக்கும் செயல்களைச் செய்வார்கள் என்று அரசியல் தளத்தில் நிலவும் கருத்துக்கு வலுவூட்டுகிற வகையில் அந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் இருந்தது.இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா அல்லது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குதம் முடிச்சுப் போடுவது போல் இட்டுக்கட்டி சொல்லப்படும் அரசியல் வாதங்களா என்பதை நம்மைப்போல சாதாரண மக்களால் அறிந்துகொள்ள முடியாது. அதிகாரம் நிறைந்த ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளும்தான் இதற்கான முன் முயற்சியை எடுக்கவேண்டும். அவர்களால்கூட கண்டுபிடித்து நிரூபிக்க முடியாத வகையில் செயல்படும் வல்லமை சர்வதேச பயங்காரவாதிகளுக்கு ஒருவேளை இருக்கக்கூடும். அந்தந்தப் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு இயக்கத்தின் மூலம் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வலிமை அவர்களுக்கு இருக்கலாம்.இந்நிலையில் இந்தியா முழுவதும் நடந்த பல பயங்கரவாத நிகழ்வுகள் குறித்து முழுமையான ஆய்வு நடத்தி விசாரிப்பதற்கு சுதந்திரமான ஓர் ஆணையத்தை இந்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக அறிய முடிகிறது. எப்பொதும் சொல்லப்படும் இந்து-முஸ்லிம், இந்திய – பாக்கிஸ்தான் போன்ற முரண்பாடுகளையும் தாண்டி வேறு யாருடைய கரங்களாவது இந்திய மக்களை பலிவாங்கும் பயங்கரவாதச் செயல்களில் இருக்கிறதா என்பதை மக்களுக்கு அறியத்தர வேண்டும்.நன்றி : vikadan http://www.vikatan.com/jv/2008/jun/01062008/jv0503.asp
Posted By முகவைத்தமிழன் to தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை