சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில், 15 மாதக் குழந்தையை அவரது தாயாரின் கண் எதிரிலேயே கத்தியால் தலையைத் துண்டித்து அவரது உறவினர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கொடூரக் கொலையை செய்த நபர் சிரியாவைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 25. இவருக்கும் இவரது உறவுக்காரப் பெண்மணிக்கும் இடையே, பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் அந்தப் பெண் தனது 15 மாதக் கைக்குழந்தையுடன் காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த அப்பெண்ணின் உறவினர், காய்கறிக் கடையில் இருந்த பழம் நறுக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணிடம் ஓடினார்.
பின்னர் அவரது கையில் இருந்த குழந்தையை வேகமாகப் பறித்து, குழந்தை என்றும் பாராமல் மிகக் கொடூரமாக குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொன்றார்.
இந்த பயங்கர சம்பவத்தைப் பார்த்து அலறிய குழந்தையின் தாய் அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்தார். அந்த மார்க்கெட்டில் இருந்த நூற்றுக்கணக்கானோரும் என்ன நடந்தது என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் சமைந்து விட்டனர்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விைரந்து வந்து மயங்கிக் கிடந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மார்க்கெட் மூடப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் தெரிவிக்கவில்லை.
ஜெட்டாவில் இந்த கொடூரக் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெட்டாவில் 15 மாத குழந்தை தலை துண்டித்து கொடூர கொலை
Labels:
Abuthabi,
Dubai,
Gulf,
India,
Ras Al Khamah,
Thamilagm,
Thopputhurai,
Ulagam