பயங்கரவாதம் இஸ்லாத்துக்கு மாறானது...

பி.பி.சி வானொலியில் தமுமுக தலைவரின் பேட்டி


பி.பி.சி.தமிழோசை: இந்தியாவின் பழைமைவாத முஸ்லிம் கல்வி அமைப்பு என்று கருதப்படும் தேவ்பந்தி அமைப்பின் கல்விமான்கள் இன்று வடஇந்தியாவின் தேவ்பந்தி நகரில் நடத்திய மாநாட்டில், பயங்கரவாதம் இஸ்லாத்துக்கு மாறானது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்தி அறிக்கையில் கேட்டோம்.

இந்த தீர்மானம் குறித்து தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் போராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் கருத்துக் கேட்டேன்.

போரா.ஜவாஹிருல்லாஹ்: காலத்தின் அவசியம் கருதி அழைக்கப்பட்ட மாநாடு அது. சுமார் பத்தாயிரம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இந்தியாவிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்து பங்கு கொண்டிருக்கிறார்கள்.



சர்வதேச ஊடகங்களிலும் சரி, இந்தியாவிலுள்ள ஊடகங்களிலும் சரி, தொடர்ந்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கக்கூடிய ஒரு போக்கும், அதற்கு தூண்டுதலாக இஸ்லாமும், குறிப்பாக இஸ்லாமிய கல்வியை போதிக்கக்கூடிய மத்ரஸாக்களும் தான் காரணமாக இருக்கிறது என்று ஒரு தவறான சித்திரம் தொடர்ந்து வரையப்பட்டு வருகின்றது.

அதை கலையக்கூடிய முகத்திலே, கலையக்கூடிய முகாந்திரமாக இந்த மாநாட்டில் மிகத்தெளிவாக, ஏனென்றால் இப்போதெல்லாம் - 1400 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாம் ஒரு வாழ்வியல் நெறியாக வரையறுக்கப்பட்ட காலத்திலிருந்து அது பயங்கரவாத நடவடிக்கைகளை மிக கண்டிப்புடன் எதிர்த்திருக்கின்றது.

போர்களத்தில் கூட குருமார்கள், பெண்கள், குழந்தைகள் ஏன்!? செடி கொடிகளைக்கூட... பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது, செடி கொடிகளுக்குக்கூட பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது, அழிக்கக் கூடாது என்று சொல்லக்கூடிய மார்க்கம் இஸ்லாம். அதை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள், நாங்கள் மனமார வரவேற்கிறோம்.


பி.பி.சி.தமிழோசை: இப்பொழுது மாறி இருக்கின்ற உலகச் சூழலில், குறிப்பாக செப்டம்பர் 11, அந்த அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்கு பின்னால் உலகம்...உலக அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களை கணக்கில் கொண்டு இந்த தீர்மானம் வரையப்பட்டிருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா?



போரா.ஜவாஹிருல்லாஹ்: நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஒரு தவறான சித்திரம் - நீங்கள் சொன்னது போல செப்டம்பர் 11, க்குப் பிறகு இன்னும் அதிவேகமாக - முஸ்லிம்களையும் இஸ்லாமையும் குறிவைத்து இது போன்ற, ஆங்கிலத்திலே 'maligning' என்று சொல்லுவார்கள். இஸ்லாமிய சமுதாயத்தையே ஒரு கேவலமாக சித்தரிக்கக் கூடிய போக்கு இருக்கிறது. எனவே அதை கருத்தில் கொண்டு செய்திருக்கின்றார்கள்.


பி.பி.சி.தமிழோசை: இந்த தேவ்பந்தி என்ற இந்த அமைப்பு வந்து, ஒரு பழைமை.... ஒரு கண்சர்வேட்டிங் அமைப்பாக கருதப்படுகிறதே? அதனுடைய இன்ஸ்பிரேஷன் என்று சொல்வார்களே, அதனுடைய உந்துதல் - ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த அந்த தாலிபான்கள் இயக்கத்தினருக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மாதிரி ஒரு பழைமைவாதம்....மான ஒரு இயக்கமாக ஒரு அமைப்பாக கருதப்படுகின்ற இந்த அமைப்பிலிருந்து இந்த தீர்மானம் வருவது என்பது இஸ்லாத்திலுள்ள இந்த மாதிரியான ஒரு மிகவும் மையமான அமைப்பில் ஏற்பட்டுள்ள சிந்தனை மாற்றம் என்று சிலர் கருதுகின்றார்கள். அது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

போரா.ஜவாஹிருல்லாஹ்: நிச்சயமாக சிந்தனை மாற்றம் கிடையாது. ஏனென்றால் நான் குறிப்பிட்டது போல, இஸ்லாம் என்பது ஒரு வறையறுக்கப்பட்ட வாழ்வியல் நெறி. அதிலே திருக்குர்ஆனும் நபிகள் நாயகத்தின் வழிமுறையும் தான் இஸ்லாத்தின் அடிப்படையாக இருக்கிறது. அதிலே யாரும் பிறகு எந்த ஒரு மாற்றமும் கொண்டுவர முடியாது.

தேவ்பந்த் மத்ரஸாவில் அதில் பயின்றவர்கள் பிறகு.... தேவ்பந்த் மத்ரஸா என்பது இன்று நேற்றல்ல, விடுதலைக்கு முன்பே இயங்கக்கூடிய தொன்மையான ஒரு இஸ்லாமிய கல்விக்கூடம். அங்கே பயின்றவர்கள் பாக்கிஸ்தானில் இது போன்ற ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கி இருக்கலாம். அதில் யாராவது ஒருவர் வழிகேடர்களுடன்... ஏனென்றால், ஆப்கானிஸ்தானிலே தொடங்கியது என்பது ஒரு விடுதலைப் போராட்டம். ரஷ்யா - யூ.எஸ்.எஸ்.ஆரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து 1979ல் தொடங்கப்பட்டது ஒரு விடுதலைப் போராட்டம்.

அதற்குப் பிறகு அது திசை மாறி இன்று பின்லேடன் போன்றவர்கள் எல்லாம் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப ஒரு பயங்கரவாத நிலைக்கு அதை கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கின்றது. அதற்காக வேண்டி அந்த மத்ரஸாவின் மீதும் அதன் சித்தாந்தத்தின் மீதும் பழி போடுவதும், அதன் காரணமாக இங்கே சிந்தனை மாற்றம் ஏற்பட்டு இது போன்ற ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று சொல்வதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தல்ல.

தமுமுக தலைவரின் பேட்டியை கேட்க இங்கே சொடுக்குங்கள்