துபாயில் வேலை வாங்கி தருவதாக மோசடி : போலி விசாக்கள் பறிமுதல்: இருவர் கைது

துபாயில் வேலை வாங்கி தருவதாக மோசடி : போலி விசாக்கள் பறிமுதல்: இருவர் கைது

சென்னை: துபாயில் வேலை வாங்கித் தருவதாக, பலரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெளி நாட்டு விசாக்கள் பறிமுதல் செய்யப் பட்டன. எஸ்பிளேனடு உதவிக் கமிஷனர் நாராயணமூர்த்தி மேற்பார்வையில், எஸ்பிளேனடு குற்றப்பிரிவு எஸ்.ஐ., ராஜேந்திரன், தனிப்படை தலைமைக் காவலர் காமராஜ், காவலர் தாவூத் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பாரிமுனை மூக்கர் நல்லமுத்து தெரு, வாணியர் தெரு சந்திப்பில் ஒரு நபர் நின்றிந்தார். சந்தேகத்தின் பேரில், அந்நபரிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தார். மேலும், அவரது பெட்டியில் வெளிநாட்டு விசாக்கள் ஏராளமாக இருந்தன. அதிர்ச்சியடைந்த போலீசார் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுõர் இக்பால் தெற்கு தெருவைச் சேர்ந்த காஜா மொய்தீன் என்பவரின் மகன் குலாம் தஸ்தகீர் 36 என்று தெரிந்தது. தொடர் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு: துபாயில் வேலை பார்த்த குலாம், இரண்டு வருடங்களுக்கு முன்பு கடையநல்லுõருக்கு திரும்பினார். பலரும் இவரிடம் வெளிநாட்டில் தங்களுக்கும் வேலை கிடைக்குமா என்று கேட்டனர். புரோக்கர்கள் மூலமாக, சிலருக்கு வேலை வாங்கிக் கொடுத்ததில் கமிஷன் குறைவாக கிடைத்ததால் நாளடைவில், இவரே தனியாக வெளிநாட்டிற்கு ஆட் களை அனுப்பத் தொடங்கினார். ஏராளமானோர் வேலைக்காக லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்தனர். ஓரிரு மாதங்கள் கழித்து துபாய் உள்பட பல்வேறு நாடுகளின் விசா தருவார். விசா கிடைத்த மகிழ்ச்சியில், வேலைக்குச் செல்பவர்கள் விமான நிலையத்திற்குச் சென்றால் குலாம் கொடுத்தது போலி விசா எனத் தெரியவரும். இப்படி ஏமாறுபவர்கள் குலாமிடம் பணத்தை கேட்டால் இழுத் தடிப்பார். கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த முகமது இப்ராகிம் என்பவரின் மகன் அஷ்ரத் அலி 51 என்பவருடன் கூட்டாக விசா அச்சடித்ததாக தெரிவித்தார். இதன்பேரில் அஷ்ரத் அலியை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, பறிமுதல் செய்யப் பட்ட விசாக்கள் போலியானவை என்று தெரியவந்துள்ளது. எஸ்பிளேனடு குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, மேற்படி இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கேரளாவில் அச்சடிப்பு: பறிமுதல் செய்யப்பட்ட விசாவில், ஐக்கிய அரபு நாடுகளின் விசாக்கள்தான் ஏராளமாக உள்ளன. இந்த விசாக் களை கேரளாவில் குறைந்த விலைக்கு அச்சடித்து, ஏமாறுபவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளனர். போலி விசா மூலமாக, எத்தனை நபர்களை வேலைக்கு அனுப்பியுள்ளனர் என்ற விவரங்களையும், போலி விசா அச்சடிப்பில் இவர்களுக்கு, பின்னணியாக செயல்படுபவர்கள் யார் என்ற விவரங்களையும், போலீசார் சேகரிக் கின்றனர். இக்கும்பல் பிடிபட்டால், பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.dinamalar.com/2008MAR21/district/chennai.asp

This post was submitted by முதுவை ஹிதாயத்.