துபாய்: துபாயில் வேலை பார்த்த கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.துபாய் டெய்ரா பகுதியில் உள்ள அல் முதீனா பகுதியில் உள்ள குடியிருப்பில் 33 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று மதியம் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.மாலை வீடு திரும்பிய அவரது அறை நண்பர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.விசாரணையில், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், லிப்ட் பராமரிக்கும் கம்பெனியில் பணியாற்றியதும் தெரிய வந்தது. அவருக்கு நீண்ட நாட்களாக பணப் பிரச்னை இருந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்டார்.இந்நிலையில் நேற்று மதியம் வீட்டுக்கு வந்த அவர், மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகள் கேரளாவில் உள்ளனர்.போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.தற்கொலை செய்த கொண்ட கேரள நபருடன், அவரது தம்பியும் உடன் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.