துபாயில் தமிழக இளைஞர் தற்கொலை
துபாய் புளு ஸ்கை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அப்பாஸ் ஷேக் ( வயது சுமார் 21 ) 16.03.2008 ஞாயிறன்று பிற ஊழியர்கள் பணிக்குச் சென்ற நேரத்தில் பேனில் கயிறை மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.
எக்ககுடியைச் சேர்ந்த இவர்களது குடும்பம் தற்பொழுது முதுகுளத்தூரில் வசித்து வருகின்றனர்.
தனது மகன் துபாய் சென்று குடும்பத்திற்கு உதவியாக இருப்பான் என நினைத்த இவரது குடும்பத்தினருக்கு ஷேக்கின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேக்கிற்கு தகப்பனார், தாய், இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் இருக்கின்றனர்.
பிற ஊழியர்கள் பகலில் பணிக்குச் சென்று திரும்பி விட்டு அறைக் கதவைத் திறந்ததும் ஷேக் தூக்கில் தொங்கியது கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
துபாய் காவல்துறை சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக இந்திய தூதரக அலுவலகங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இந்தியர் தற்கொலை விகிதம் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடின்றி அதிகரித்து வருவது அதிர்ச்சியலைகளை இந்திய சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
This post was submitted by muduvaihidayath.