டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் தலைமை அலுவலகத்தின் மீது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இன்று கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
கடந்த வாரத்தில் கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் பா.ஜனதா தொண்டர்கள் 2 பேரும் , ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 2 பேரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுப்பதற்காக டெல்லியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் புகுந்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜனதாதொண்டர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலரது கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனையடுத்து பதிலுக்கு அலுவலகத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் தாக்குதல் நடத்தினர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த் பலர் காயமடைந்தனர்.
இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்னர் அதிரடிப் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)