தோப்புத்துறை பெரிய பள்ளிவாசல்

1956 யிலேயே வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தோப்புத்துறை பெரியபள்ளிவாசல்
இதனால்....

  • நபி வழிப்படி மய்யியத்து அடக்கலாம்
  • நபி வழிப்படி திருமணம் செய்துக்கொள்ளலாம்
  • நபி வழிப்படி வணக்க வழிப்பாடுகளை செய்து கொள்ளலாம்
  • தனி நபர் அடக்குமுறைகள் செய்யமுடியாது
  • தனி நபர் பள்ளிவாசலை உரிமை கொண்டாட முடியாது
  • யாரையும் புறக்கணித்து பள்ளிவாசல் கட்டமுடியாது
  • ஒளிவு மறைவின்றி வரவு செலவு கணக்கு களை வெளியிடவேண்டும்

- THOPPUTHURAIYAAN

தோப்புத்துறை செய்திகள்

அன்பிர்கினிய தோப்புத்துறை சகோதரர்களுக்கு
நமதூரில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளையும் எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
- தோப்புத்துறை ஆதம்.ஆரிபின்
தோப்புத்துறை அட் ஜிமெயில்.காம்

துபாயில் காணாமல் போன தமிழர் கொலை செய்யப்பட்டதாக தகவல்

துபையில் தமிழரைக் காணவில்லை’ என்று நாம் ஒரு மாதத்திற் க்கு முன்பு அறிப்பு செய்திருந்தோம், ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்தே வந்தது, இப்போது அவர் ஒரு வாரத்திற்கு முன்பு துபை ஜுமைரா கடற்கடையில் முகங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் துபை காவல்துறை கண்டெடுத்தது. அவர் ஏன்? எதற்காக? கொலை செய்யப்பட்டார் என்பது மர்மமாகவும் கேள்விக்குறியாகவும் உள்ளது.
இந்த கொலை எப்படி நடந்திருக்கும் என்று, துபையில் நம் சகோதரர்கள் விபரங்களை கேட்டறிந்துக் கொண்டு இருக்கிறார்கள் முழு விபரம் கிடைத்தால் விரைவில் வெளியிடுவோம்.
இவர் தஞ்சை வடக்கு மாவட்ட திருநறையுரை சார்ந்த அப்துல் காதர் மகன் அப்துல்லாஹ். மேலும் இவர் துபாயில் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்தார்.
http://tvtntj.blogspot.com/2008/03/blog-post_28.html

துபாயில் கட்டப்படும் மாபெரும் ஷாப்பிங் வளாகம்

பெர்லின்: உலகிலேயே மிகப் பெரிய ஷாப்பிங் வளாகம் துபாயில் உருவாகி வருகிறது.துபாயின் பிரமாண்டமான பர்ஜ் துபாய்க்குப் பின்புறம் இந்தப் பெரிய ஷாப்பிங் வளாகம் எழுப்பப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் இந்த மகா ஷாப்பிங் மால் திறக்கப்படவுள்ளது.இந்த ஷாப்பிங் வளாகம், 10 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது என்று துபாய் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ரேனே ஹிங்ஸ்ட் தெரிவித்தார். சமீபத்தில் பெர்லின் நகரில் நடந்த சுற்றுலா கண்காட்சியில் கலந்து கொண்ட ரேனே இத்தகவலைத் தெரிவித்தார்.இந்த மெகா மாலில், 1200 விற்பனை நிலையங்கள் அமையவுள்ளன. ஒரு மீன் கண்காட்சியகமும் இடம் பெறும்.இந்த வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஒட்டுமொத்த பர்ஜ் துபாய் கட்டடமும், உலகின் மிகப் பெரிய கட்டடம் என்ற அந்தஸ்தைப் பெறும்.பர்ஜ் துபாய் கட்டடத்தில் நூற்றுக்கணக்கான அலுவலகங்கள், தனியார் குடியிருப்புகள், ஹோட்டல் ஆகியவை இடம் பெறும். இந்த பிரமாண்ட ஹோட்டலை இத்தாலியைச் சேர்ந்த பேஷன் டிசைனர் ஜார்ஜியோ அர்மானி டிசைன் செய்துள்ளார். 2009ம் ஆண்டு இந்த ஹோட்டல் திறக்கப்படவுள்ளது.கட்டடத்தின் மேல் புறம் மிகப் பெரிய கோபுரமும் அமைக்கப்படுகிறது. இதிலிருந்தபடி துபாயின் அழகை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க முடியும்.தற்போது பர்ஜ் துபாய் கட்டடத்தில் 165 தங்களைக் கட்டும் பணி முடிந்துள்ளது. இன்னும் சில மாடிகள் மட்டும் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளது.துபாய் பர்ஜ் கட்டடத்தின் மொத்த உயரம் 700 மீட்டராக இருக்கும். இதுவரை 600 மீட்டரை கட்டி முடித்துள்ளனர் என்பது குறிப்பபிடத்தக்கது.

பஹ்ரைனிலிருந்து பாயும் ரூ. 94 பில்லியன்!

துபாய்: பஹ்ரைனில் வேலை பார்த்து வரும் இந்தியத் தொழிலாளர்கள், தங்களது சம்பாத்தியம் மூலம் ஆண்டுதோறும் ரூ. 94 பில்லியன் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி வருவதாக பஹ்ரைனைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஹூசைன் அல் மஹதி தெரிவித்துள்ளார்.இந்தத் தொகை, பஹ்ரைனில் பணியாற்றும் பிற வெளிநாட்டினர் தங்களது நாடுகளுக்கு அனுப்பும் தொகையை விட 2 மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.வளைகுடா குளோபல் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரான ஹுசைன் அல் மஹதி இதுகுறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில், பஹ்ரைன் நீண்ட காலத்திற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியே இருக்கும்.பஹ்ரைனில் உள்ள 7 லட்சம் மக்கள் தொகையில், 2 லட்சம் பேர் இந்தியர்கள்தான். இந்தியத் தொழிலாளர்கள்தான் பஹ்ரைனின் வெளிநாட்டுத் தொழிலாளர்களில் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். எனவேதான், இந்தியர்கள் மூலம் பெருமளவிலான பணம் பஹ்ரைனிலிருந்து செல்கிறது.அடுத்த பத்து ஆண்டுகளில் பஹ்ரைனில் 30 பில்லியன் டாலர் மதிப்புக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான ஆட்கள் உள்ளூரில் இல்லை. எனவே வெளிநாட்டுத் தொழிலாளர்களையே பஹ்ரைன் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.ஆண்டுதோறும் பஹ்ரைனியர்களுக்காக 10 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புள் உருவாக்கப்படுகின்றன என்றாலும் அவற்றில் 80 சதவீத வேலைகள் வெளிநாட்டினருக்குத்தான் செல்கின்றன என்றார் அவர்.

துபாயில் இந்தியத் தொழிலாளர் தூக்கிட்டுத் தற்கொலை

துபாய்: துபாயில் வேலை பார்த்த கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.துபாய் டெய்ரா பகுதியில் உள்ள அல் முதீனா பகுதியில் உள்ள குடியிருப்பில் 33 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று மதியம் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.மாலை வீடு திரும்பிய அவரது அறை நண்பர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.விசாரணையில், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், லிப்ட் பராமரிக்கும் கம்பெனியில் பணியாற்றியதும் தெரிய வந்தது. அவருக்கு நீண்ட நாட்களாக பணப் பிரச்னை இருந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்டார்.இந்நிலையில் நேற்று மதியம் வீட்டுக்கு வந்த அவர், மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகள் கேரளாவில் உள்ளனர்.போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.தற்கொலை செய்த கொண்ட கேரள நபருடன், அவரது தம்பியும் உடன் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் தொழில் முன்னேற்றத்தில் நாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்...

உங்கள் தொழில் முன்னேற்றத்தில்
நாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்...
உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை'யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
ஆதம்.ஆரிஃபின்,கைபேசி: 050-1657853
முஹமது,கைபேசி: 050-3466196

Email : webnawaz@gmail.com

இன்னா லில்லாஹி வாஇன்ன இலஹி ராஜிஹுன்....

இன்னா லில்லாஹி வாஇன்ன இலஹி ராஜிஹுன்....
தோப்புத்துறை சின்னப்பள்ளித்தெரு காஸிம் (வைக்கோல்) அவர்கள் இன்று காலை இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள்,
இன்று மாலை 4மணி க்கு நல்லடக்கம்.
அவருடைய மறுமைக்காக அல்லாஹ்விடம் துஆசெய்யுங்கள்.

துபாயில் வேலை வாங்கி தருவதாக மோசடி : போலி விசாக்கள் பறிமுதல்: இருவர் கைது

துபாயில் வேலை வாங்கி தருவதாக மோசடி : போலி விசாக்கள் பறிமுதல்: இருவர் கைது

சென்னை: துபாயில் வேலை வாங்கித் தருவதாக, பலரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெளி நாட்டு விசாக்கள் பறிமுதல் செய்யப் பட்டன. எஸ்பிளேனடு உதவிக் கமிஷனர் நாராயணமூர்த்தி மேற்பார்வையில், எஸ்பிளேனடு குற்றப்பிரிவு எஸ்.ஐ., ராஜேந்திரன், தனிப்படை தலைமைக் காவலர் காமராஜ், காவலர் தாவூத் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பாரிமுனை மூக்கர் நல்லமுத்து தெரு, வாணியர் தெரு சந்திப்பில் ஒரு நபர் நின்றிந்தார். சந்தேகத்தின் பேரில், அந்நபரிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தார். மேலும், அவரது பெட்டியில் வெளிநாட்டு விசாக்கள் ஏராளமாக இருந்தன. அதிர்ச்சியடைந்த போலீசார் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுõர் இக்பால் தெற்கு தெருவைச் சேர்ந்த காஜா மொய்தீன் என்பவரின் மகன் குலாம் தஸ்தகீர் 36 என்று தெரிந்தது. தொடர் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு: துபாயில் வேலை பார்த்த குலாம், இரண்டு வருடங்களுக்கு முன்பு கடையநல்லுõருக்கு திரும்பினார். பலரும் இவரிடம் வெளிநாட்டில் தங்களுக்கும் வேலை கிடைக்குமா என்று கேட்டனர். புரோக்கர்கள் மூலமாக, சிலருக்கு வேலை வாங்கிக் கொடுத்ததில் கமிஷன் குறைவாக கிடைத்ததால் நாளடைவில், இவரே தனியாக வெளிநாட்டிற்கு ஆட் களை அனுப்பத் தொடங்கினார். ஏராளமானோர் வேலைக்காக லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்தனர். ஓரிரு மாதங்கள் கழித்து துபாய் உள்பட பல்வேறு நாடுகளின் விசா தருவார். விசா கிடைத்த மகிழ்ச்சியில், வேலைக்குச் செல்பவர்கள் விமான நிலையத்திற்குச் சென்றால் குலாம் கொடுத்தது போலி விசா எனத் தெரியவரும். இப்படி ஏமாறுபவர்கள் குலாமிடம் பணத்தை கேட்டால் இழுத் தடிப்பார். கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த முகமது இப்ராகிம் என்பவரின் மகன் அஷ்ரத் அலி 51 என்பவருடன் கூட்டாக விசா அச்சடித்ததாக தெரிவித்தார். இதன்பேரில் அஷ்ரத் அலியை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, பறிமுதல் செய்யப் பட்ட விசாக்கள் போலியானவை என்று தெரியவந்துள்ளது. எஸ்பிளேனடு குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, மேற்படி இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கேரளாவில் அச்சடிப்பு: பறிமுதல் செய்யப்பட்ட விசாவில், ஐக்கிய அரபு நாடுகளின் விசாக்கள்தான் ஏராளமாக உள்ளன. இந்த விசாக் களை கேரளாவில் குறைந்த விலைக்கு அச்சடித்து, ஏமாறுபவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளனர். போலி விசா மூலமாக, எத்தனை நபர்களை வேலைக்கு அனுப்பியுள்ளனர் என்ற விவரங்களையும், போலி விசா அச்சடிப்பில் இவர்களுக்கு, பின்னணியாக செயல்படுபவர்கள் யார் என்ற விவரங்களையும், போலீசார் சேகரிக் கின்றனர். இக்கும்பல் பிடிபட்டால், பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.dinamalar.com/2008MAR21/district/chennai.asp

This post was submitted by முதுவை ஹிதாயத்.

துபாயில் தமிழக இளைஞர் தற்கொலை

துபாயில் தமிழக இளைஞர் தற்கொலை

துபாய் புளு ஸ்கை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அப்பாஸ் ஷேக் ( வயது சுமார் 21 ) 16.03.2008 ஞாயிறன்று பிற ஊழியர்கள் பணிக்குச் சென்ற நேரத்தில் பேனில் கயிறை மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

எக்ககுடியைச் சேர்ந்த இவர்களது குடும்பம் தற்பொழுது முதுகுளத்தூரில் வசித்து வருகின்றனர்.

தனது மகன் துபாய் சென்று குடும்பத்திற்கு உதவியாக இருப்பான் என நினைத்த இவரது குடும்பத்தினருக்கு ஷேக்கின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேக்கிற்கு தகப்பனார், தாய், இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் இருக்கின்றனர்.

பிற ஊழியர்கள் பகலில் பணிக்குச் சென்று திரும்பி விட்டு அறைக் கதவைத் திறந்ததும் ஷேக் தூக்கில் தொங்கியது கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

துபாய் காவல்துறை சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக இந்திய தூதரக அலுவலகங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இந்தியர் தற்கொலை விகிதம் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடின்றி அதிகரித்து வருவது அதிர்ச்சியலைகளை இந்திய சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

This post was submitted by muduvaihidayath.

துபாயில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை நிகழ்ச்சி

துபாயில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை நிகழ்ச்சி

துபாயில் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் அல் கூஸ் பகுதியில் உணர்வாய் உன்னை எனும் தன்னம்பிக்கை நிகழ்ச்சியினை 20.03.2008 வியாழக்கிழமை காலை எட்டு மணி முதல் துபாய் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழக கிளை ஏற்பாடு செய்துள்ளது.

சமீபகாலமாக துபாயில் தொழிலாளர்கள் மத்தியில் குறிப்பாக இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது. தொழிலாளர்கள் குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்ந்து வருவதால் பல்வேறு காரணங்களால் மனச்சோர்வின் காரணமாகவும், தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உரிய ஆலோசனை பெற இயலாத சூழ்நிலையினைப் போக்க இத்தகைய தன்னம்பிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர்.

இனிமையான இத்தகைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 050 3851929 / 055 9761677 / 050 7640972 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

www.unarvaiunnai.cjb.net

This post was submitted by muduvaihidayath.

அபுதாபியில் சீரத்துந் நபி

அபுதாபியில் சீரத்துந் நபி

அபுதாபியில் 20 மார்ச் 2008 வியாழக்கிழமை மாலை ஐ.சி.சி. கேரளா வில்லா எண் 7 ல் நடக்க இருக்கிறது. மாலை 7 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில் ஆபேத் அத்தர் நபிகளாருக்கு முன்னும், பின்னும் இவ்வுலகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்த இருக்கிறார். அதனைத் தொடர்ந்து மௌலானா அஹமத் சிராஜ் உரை நிகழ்த்த இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கலாம்.

மேலதிக விபரங்களுக்கு : டாக்டர் சலீம் கான் 050 4453768 / பாஸிஹ் 050 582 8905 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

This post was submitted by muduvaihidayath

Thiruthuraipoondi Ambulance Donation...




THIS NEWS UPDATED BY ADAM.ARIFIN, MOBILE: 00971 50 1657853

துபாயில் நபிகள் நாயகம் குறித்த அருங்காட்சியகம்

துபாயில், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு, அவரது போதனைகள் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.

இதுகுறித்த முடிவு, துபாய் கலாச்சாரம் மற்றும் கலை ஆணைய தலைவர் ஷேக் மயாத் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையில் நடந்த ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு, அவரது போதனைகள் உள்ளிட்டவை உள்பட நபிகள் குறித்த அனைத்து அம்சங்களும் நிறைந்ததாக இந்த அருங்காட்சியகம் விளங்கும்.

மேலும், நபிகள் நாயகத்தின் உண்மையான வரலாற்றை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு அறிவிக்கும் மையமாகவும் இது திகழும். வரலாற்றை திருப்பிப் போட்ட மாற்றங்களுக்கு நபிகள் ஆற்றிய பங்கையும் இது எடுத்துரைக்கும்.

உலக அளவில் நபிகள் நாயகம் குறித்த முதல் அருங்காட்சியமாக இது திகழும் என்று மக்தூம் கூறியுள்ளார். இந்த அருங்காட்சியகம், கிழக்குக்கும், மேற்குக்கும் இடையிலான பாலமாக திகழும் என்றும் அவர் கூறினார்.



படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

யு.ஏ.இயில் பயங்கர தொடர் விபத்து- 10 பேர் பலி

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரலாற்றிலேயே மோசமான விபத்தாக, அபுதாபி - துபாய் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்தனர். 150க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றன் மீது ஒன்று விழுந்து சேதமடைந்தன.

விபத்து நடந்த இடம் போர்க்களம் போல காணப்பட்டது. படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை கலீபா மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

துபாய், அபுதாபியிலிருந்து மீட்புப் படைகள் விரைந்துள்ளன. ஆம்புலன்ஸ்கள், ஹெலிகாப்டர்கள், ரோந்து வாகனங்கள் என அந்தப் பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

பனிமூட்டம் காரணமாக சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல், கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

150க்கும் மேற்பட்ட கார்கள் மோதிக் கிடந்தன. அவற்றை அகற்ற முடியாமல் மீட்புப் படையினர் திணறியதைப் பார்க்க முடிந்தது.

இதுபோன்ற மிக மோசமான சாலை விபத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றதவில்லை என்று கூறப்படுகிறது.

இந்துயிசம் உலகின் சிறந்த மதம் : ராஜ பக்சே

இந்துயிசம் உலகின் சிறந்த மதங்களில் ஒன்று என இலங்கை அதிபர் ராஜ் பக்சே புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இதனை தெரிவித்துள்ள அவர், சிறப்பான எதிர்காலத்தை அடைய இந்து மதத்தின் கொள்கைகளையும், நல்லிணக்கத்தையும் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

" சிறப்பான எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்புகளும், பிரார்த்தனைகளும் நிறைவேறட்டும்.இந்த நன்னாளில் மக்கள் ஏற்றும் ஒவ்வொரு விளக்கும் அவர்களுக்கு தெய்வீக வளம் அளிக்கட்டும் " என அந்த செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் குரல் கொடுக்கும் தமிழக தலைவர்களில் பலர் , இந்துத்துவாவுக்கு எதிரான நிலையை கொண்டிருக்கும் நிலையில், ராஜ் பக்சேவின் இந்த திடீர் இந்துயிச பாசம், இந்தியவிலுள்ள இந்துமத தலைவர்களை தமக்கு ஆதரவாக வளைக்கவா ? என்ற கேள்வி இலங்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

(மூலம் - வெப்துனியா)

டெல்லி : கம்யூ. தலைமையகம் மீது ஆர்எஸ்எஸ் தாக்குதல்

டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் தலைமை அலுவலகத்தின் மீது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இன்று கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

கடந்த வாரத்தில் கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் பா.ஜனதா தொண்டர்கள் 2 பேரும் , ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 2 பேரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுப்பதற்காக டெல்லியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் புகுந்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜனதாதொண்டர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலரது கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதனையடுத்து பதிலுக்கு அலுவலகத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் தாக்குதல் நடத்தினர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த் பலர் காயமடைந்தனர்.

இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்னர் அதிரடிப் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)

துபாய் பத்திரிகையாளர் மன்றம் நடத்தும் பயிற்சிப் பட்டறை

துபாய் பத்திரிகையாளர் மன்றம் நடத்தும் பயிற்சிப் பட்டறை

துபாய் பத்திரிகையாளர் மன்றம் துபாய் ஊடக நகரில் அமையப்பெற்றுள்ள தனது தலைமை அலுவலகத்தில் தொலைக்காட்சி இதழியலாளர்களுக்கென பிரத்யேக பயிற்சி வகுப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சி வகுப்பு மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

This post was submitted by muduvaihidayath.

துபாய் பத்திரிகையாளர் மன்றம் நடத்தும் பயிற்சிப் பட்டறை

துபாய் பத்திரிகையாளர் மன்றம் நடத்தும் பயிற்சிப் பட்டறை

துபாய் பத்திரிகையாளர் மன்றம் துபாய் ஊடக நகரில் அமையப்பெற்றுள்ள தனது தலைமை அலுவலகத்தில் தொலைக்காட்சி இதழியலாளர்களுக்கென பிரத்யேக பயிற்சி வகுப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சி வகுப்பு மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

This post was submitted by muduvaihidayath.

அமீரகத்தில் கல்விக் கண்காட்சி

அமீரகத்தில் கல்விக் கண்காட்சி

அமீரகத்தில் கல்விக் கண்காட்சி அமீரகம் மற்றும் இலண்டனில் உயர்கல்வி குறித்த விபரங்களை அறிய உதவும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துபாய் : மார்ச் 10 - மாலை 4 மணி முதல் 7 மணி வரை
துபாய் கல்வி நகரில் அமைந்துள்ள துபாய் ஆண்கள் கல்லூரி

அபுதாபி : மார்ச் 13 - மாலை 1 மணி முதல் 4 மணி வரை
அபுதாபி ஆண்கள் கல்லூரி

www.educationuk.org/me

ஒளரங்கசீப் கண்காட்சி: ஓவியங்களை காவல்துறை அகற்றியது

ஒளரங்கசீப் கண்காட்சி: ஓவியங்களை காவல்துறை அகற்றியது

சென்னை லலித்கலா அகாதமியில் நடைபெற்று வந்த ஒளரங்கசீப் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களை காவல்துறை வியாழக்கிழமை அகற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரான பிரான்ஸ்வா கோத்தியேவின் (François Gautier) ‘ஃபேக்ட்’ அமைப்பு அவுரங்கசீப் ஆட்சிக் காலத்திய ஆவணங்கள் குறித்த கண்காட்சியை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாதமியில் மார்ச் 3-ம் தேதியிலிருந்து இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

குஜராத்தில் சோமநாதர் கோவில், ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த மதுரா உள்ளிட்ட பல்வேறு கோவில்களை இடித்து சேதப்படுத்திய நிகழ்வுகளும் இந்துக்கள் மீதான ஜஸியா வரிவசூல் கொடுமைகளை விளக்கும் வகையில் தீட்டப்பட்ட 65 ஓவியங்களும் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் ராஜஸ்தானில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்டவை என ஃபேக்ட் அமைப்பினர் தெரிவித்தனர்.

ஔரங்கசீப் ஆட்சிக்காலத்தில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டது தொடர்பான படங்கள் இடம் பெற்றதால், கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் வியாழக்கிழமை பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலன் உள்ளிட்ட இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் லலித்கலா அகாதமியில் திரண்டனர்.

ஒரு கட்டத்தில் இந்து அமைப்புகளைச் சேர்தவர்களுக்கும், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து பிரான்சுவா கொத்தியே கூறியதாவது:

மாலை 6.30 மணி அளவில் நுங்கம்பாக்கம் காவல்நிலைய உதவி ஆணையர் முரளி தலைமையில் காவல்துறை கண்காட்சி நடந்த இடத்துக்கு வந்தனர்.

காவல்துறையினருடன் பிரான்சுவா கொத்தியே பேச்சு நடத்தினார். அப்போது முரளியும் அவருடன் வந்த காவல்துறையினரும் ஓவியங்களை அப்புறப்படுத்த தொடங்கினார்கள். அப்போது சில ஓவியங்கள் உடைந்தது.

கண்காட்சி ஏற்பாடுகளில் இருந்த சரஸ்வதி (65), டாக்டர் விஜயலட்சுமி (55), மாலதி (40), அனுபமா (25), பி.ஆர். ஹரன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் வழக்குப் பதிவு செய்யாமல் அவர்களை காவல்துறை விடுவித்து விட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர்களில் ஒருவரான எஸ். ராமனை (72) காவல்துறை கடுமையாக தாக்கினர். இதில் தோள்பட்டையில் அவருக்கு பலத்த அடி விழுந்தது என்றார்.

காவல்துறை அராஜகம்: ‘இரவு 6 மணிக்கு பெண்களை கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால் அதனை மீறி நான்கு பெண்களை இரவு 7 மணிக்கு போலீஸ் வேனில் ஏற்றி ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் உட்கார வைத்தனர்.

கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்கள் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் அந்த ஒருசிலருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரலாற்று ஆவணங்களை காவல்துறை உடைத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா.

கைது செய்யவில்லை: ‘முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான ஓவியங்கள் கண்காட்சியில் இருப்பதாக முஸ்லிம்கள் எங்களிடம் புகார் செய்தனர். அதன் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுத்தோம்.

பாதுகாப்பு கருதித்தான் பெண்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றோம். யாரையும் கைது செய்யவில்லை’ என்று தெரிவித்தார் நுங்கம்பாக்கம் காவல்நிலைய உதவி ஆணையர் முரளி.

கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுவதாக இருந்தது. காவல்துறை ஓவியங்கள் அகற்றி விட்டதால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருவதாக பிரான்சுவா கோத்தியே தெரிவித்தார்.

நன்றி: தினமணி

அபுதாபியில் புத்தகக் கண்காட்சி

அபுதாபியில் புத்தகக் கண்காட்சி
அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் மார்ச் 11 முதல் 16 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 9 மணி வரை பல்வேறு தலைப்புகளில் உள்ள புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தொலைக்காட்சியில் தொலைந்த இதயங்களே புத்தகக் கண்காட்சி வருகை தர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
www.adbookfair.com

அஜ்மானில் பொதுமக்கள் பங்கேற்ற ஓட்டம்

அஜ்மானில் பொதுமக்கள் பங்கேற்ற ஓட்டம்

அஜ்மான் கல்ஃப் மருத்துவக் கல்லூரி பொதுமக்கள் பங்கேற்ற ஓட்டப்பந்தயத்தை மார்ச் 7 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு அஜ்மான் கடற்கரைச் சாலையில் நடத்தியது.
இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Thopputhurai Periya Matter....2


adsad

10 ஆண்டுக்கு மேல் காரை ஓட்ட துபாயில் தடை!

துபாய்: துபாயில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரு காரை பயன்படுத்தக் கூடாது என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையால் ஏற்படும் மாசு, அதனால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகள் ஆகியவை குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஒரு காரின் உழைக்கும் வயதை 10 ஆண்டாக நிர்ணயித்துள்ளது துபாய் நகராட்சி.

துபாயில் தற்போது வாகனங்களால் ஏற்படும் மாசின் அளவு 13 சதவீதமாக உள்ளது. பெட்ரோல் கார்களால் ஏற்படும் மாசு இது. மேலும் டீசல் கார்களால் ஏற்படும் புகை மாசின் அளவு 19 சதவீதமாகும்.

இந்த புகை மாசு காரணமாக துபாயில் வெப்ப நிலை அதிகரித்திருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து துபாய் சாலைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான கார்களைத் தடை செய்ய நகராட்சிக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதை ஏற்ற நகராட்சி நிர்வாகம், ஒரு வாகனத்தை 10 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது

கல்விக்கடன் ஒரே மாதத்தில் வழங்கப்படும் -ப. சிதம்பரம்

கல்விக்கடன் ஒரே மாதத்தில் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது :

பொதுத் துறை வங்கிகளுக்கு கல்விக்கடன் வழங்க 15 முதல் 30 நாட்கள் தேவைப்படுகிறது.அதே சமயம் கல்விக்கடனை இணைய தளம் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் பொதுத் துறை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)

ஜெட்டாவில் 15 மாத குழந்தை தலை துண்டித்து கொடூர கொலை

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில், 15 மாதக் குழந்தையை அவரது தாயாரின் கண் எதிரிலேயே கத்தியால் தலையைத் துண்டித்து அவரது உறவினர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொடூரக் கொலையை செய்த நபர் சிரியாவைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 25. இவருக்கும் இவரது உறவுக்காரப் பெண்மணிக்கும் இடையே, பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் அந்தப் பெண் தனது 15 மாதக் கைக்குழந்தையுடன் காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த அப்பெண்ணின் உறவினர், காய்கறிக் கடையில் இருந்த பழம் நறுக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணிடம் ஓடினார்.

பின்னர் அவரது கையில் இருந்த குழந்தையை வேகமாகப் பறித்து, குழந்தை என்றும் பாராமல் மிகக் கொடூரமாக குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொன்றார்.

இந்த பயங்கர சம்பவத்தைப் பார்த்து அலறிய குழந்தையின் தாய் அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்தார். அந்த மார்க்கெட்டில் இருந்த நூற்றுக்கணக்கானோரும் என்ன நடந்தது என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் சமைந்து விட்டனர்.

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விைரந்து வந்து மயங்கிக் கிடந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மார்க்கெட் மூடப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் தெரிவிக்கவில்லை.

ஜெட்டாவில் இந்த கொடூரக் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதம் இஸ்லாத்துக்கு மாறானது...

பி.பி.சி வானொலியில் தமுமுக தலைவரின் பேட்டி


பி.பி.சி.தமிழோசை: இந்தியாவின் பழைமைவாத முஸ்லிம் கல்வி அமைப்பு என்று கருதப்படும் தேவ்பந்தி அமைப்பின் கல்விமான்கள் இன்று வடஇந்தியாவின் தேவ்பந்தி நகரில் நடத்திய மாநாட்டில், பயங்கரவாதம் இஸ்லாத்துக்கு மாறானது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்தி அறிக்கையில் கேட்டோம்.

இந்த தீர்மானம் குறித்து தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் போராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் கருத்துக் கேட்டேன்.

போரா.ஜவாஹிருல்லாஹ்: காலத்தின் அவசியம் கருதி அழைக்கப்பட்ட மாநாடு அது. சுமார் பத்தாயிரம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இந்தியாவிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்து பங்கு கொண்டிருக்கிறார்கள்.



சர்வதேச ஊடகங்களிலும் சரி, இந்தியாவிலுள்ள ஊடகங்களிலும் சரி, தொடர்ந்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கக்கூடிய ஒரு போக்கும், அதற்கு தூண்டுதலாக இஸ்லாமும், குறிப்பாக இஸ்லாமிய கல்வியை போதிக்கக்கூடிய மத்ரஸாக்களும் தான் காரணமாக இருக்கிறது என்று ஒரு தவறான சித்திரம் தொடர்ந்து வரையப்பட்டு வருகின்றது.

அதை கலையக்கூடிய முகத்திலே, கலையக்கூடிய முகாந்திரமாக இந்த மாநாட்டில் மிகத்தெளிவாக, ஏனென்றால் இப்போதெல்லாம் - 1400 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாம் ஒரு வாழ்வியல் நெறியாக வரையறுக்கப்பட்ட காலத்திலிருந்து அது பயங்கரவாத நடவடிக்கைகளை மிக கண்டிப்புடன் எதிர்த்திருக்கின்றது.

போர்களத்தில் கூட குருமார்கள், பெண்கள், குழந்தைகள் ஏன்!? செடி கொடிகளைக்கூட... பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது, செடி கொடிகளுக்குக்கூட பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது, அழிக்கக் கூடாது என்று சொல்லக்கூடிய மார்க்கம் இஸ்லாம். அதை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள், நாங்கள் மனமார வரவேற்கிறோம்.


பி.பி.சி.தமிழோசை: இப்பொழுது மாறி இருக்கின்ற உலகச் சூழலில், குறிப்பாக செப்டம்பர் 11, அந்த அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்கு பின்னால் உலகம்...உலக அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களை கணக்கில் கொண்டு இந்த தீர்மானம் வரையப்பட்டிருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா?



போரா.ஜவாஹிருல்லாஹ்: நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஒரு தவறான சித்திரம் - நீங்கள் சொன்னது போல செப்டம்பர் 11, க்குப் பிறகு இன்னும் அதிவேகமாக - முஸ்லிம்களையும் இஸ்லாமையும் குறிவைத்து இது போன்ற, ஆங்கிலத்திலே 'maligning' என்று சொல்லுவார்கள். இஸ்லாமிய சமுதாயத்தையே ஒரு கேவலமாக சித்தரிக்கக் கூடிய போக்கு இருக்கிறது. எனவே அதை கருத்தில் கொண்டு செய்திருக்கின்றார்கள்.


பி.பி.சி.தமிழோசை: இந்த தேவ்பந்தி என்ற இந்த அமைப்பு வந்து, ஒரு பழைமை.... ஒரு கண்சர்வேட்டிங் அமைப்பாக கருதப்படுகிறதே? அதனுடைய இன்ஸ்பிரேஷன் என்று சொல்வார்களே, அதனுடைய உந்துதல் - ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த அந்த தாலிபான்கள் இயக்கத்தினருக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மாதிரி ஒரு பழைமைவாதம்....மான ஒரு இயக்கமாக ஒரு அமைப்பாக கருதப்படுகின்ற இந்த அமைப்பிலிருந்து இந்த தீர்மானம் வருவது என்பது இஸ்லாத்திலுள்ள இந்த மாதிரியான ஒரு மிகவும் மையமான அமைப்பில் ஏற்பட்டுள்ள சிந்தனை மாற்றம் என்று சிலர் கருதுகின்றார்கள். அது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

போரா.ஜவாஹிருல்லாஹ்: நிச்சயமாக சிந்தனை மாற்றம் கிடையாது. ஏனென்றால் நான் குறிப்பிட்டது போல, இஸ்லாம் என்பது ஒரு வறையறுக்கப்பட்ட வாழ்வியல் நெறி. அதிலே திருக்குர்ஆனும் நபிகள் நாயகத்தின் வழிமுறையும் தான் இஸ்லாத்தின் அடிப்படையாக இருக்கிறது. அதிலே யாரும் பிறகு எந்த ஒரு மாற்றமும் கொண்டுவர முடியாது.

தேவ்பந்த் மத்ரஸாவில் அதில் பயின்றவர்கள் பிறகு.... தேவ்பந்த் மத்ரஸா என்பது இன்று நேற்றல்ல, விடுதலைக்கு முன்பே இயங்கக்கூடிய தொன்மையான ஒரு இஸ்லாமிய கல்விக்கூடம். அங்கே பயின்றவர்கள் பாக்கிஸ்தானில் இது போன்ற ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கி இருக்கலாம். அதில் யாராவது ஒருவர் வழிகேடர்களுடன்... ஏனென்றால், ஆப்கானிஸ்தானிலே தொடங்கியது என்பது ஒரு விடுதலைப் போராட்டம். ரஷ்யா - யூ.எஸ்.எஸ்.ஆரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து 1979ல் தொடங்கப்பட்டது ஒரு விடுதலைப் போராட்டம்.

அதற்குப் பிறகு அது திசை மாறி இன்று பின்லேடன் போன்றவர்கள் எல்லாம் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப ஒரு பயங்கரவாத நிலைக்கு அதை கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கின்றது. அதற்காக வேண்டி அந்த மத்ரஸாவின் மீதும் அதன் சித்தாந்தத்தின் மீதும் பழி போடுவதும், அதன் காரணமாக இங்கே சிந்தனை மாற்றம் ஏற்பட்டு இது போன்ற ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று சொல்வதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தல்ல.

தமுமுக தலைவரின் பேட்டியை கேட்க இங்கே சொடுக்குங்கள்