மோடியின் தமிழக வருகை! பரவுகிறது பதற்றம்!!இப்பி பக்கீர்
குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்திட தனது அரசு இயந்திரத்தை பயன்படுத்திய சங்பரிவார சக்திகளுக்கு 3 நாட்கள் வரை பெருந்தன்மையுடன் அனுமதி அளித்து உற்சாகப்படுத்திய மதவெறி நரேந்திர மோடி தேர்தலிலும் நின்று வெற்றியும் பெற்று விட்டார்.மோடியின் வெற்றி அகில இந்திய தேர்தலிலும் எதிரொலிக்கும் என பாஜகவினர் புளங்காகிதமடைந்து வருகின்றனர் மென்மையான இந்துத்துவாவை கைவிடாத காங்கிரஸ், குஜராத்தில் வெற்றி வாய்ப்பு போய் விட்டதே என புலம்பியிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் அறிவிக்கப்படாத ஆர்.எஸ். எஸ். தலைவராக செயல்பட்டு வரும் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா மோடியின் வெற்றிக்கு மனம் குளிர்ந்து வாழ்த்து தெரிவித்ததுடன் கடந்த முறை போல நேரடியாக சென்று பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டு ஆரிய ஜோதியில் சங்கமமாக திட்டமிட்டிருந்தார். கடைசி நேரத்தில் அந்த பயணம் ஏனோ ரத்து செய்யப்பட்டு விட்டது.இந்நிலையில் மத வெறியன் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். புரோக்கர் சோ. நடத்தும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள ஜனவரி 14 அன்று தமிழகத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார் பின்னர் ஜெயலலிதா விடுத்திருக்கும் சிறப்பு அழைப்பின் பேரில் போயஸ் தோட்டத்திற்கு மோடி சென்று ஜெ.வுடன் அளவளாவ இருக்கிறார். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பூரிப்புடன் சொல்லியிருக்கும் ஜெ. அ.தி.மு.க. பி.ஜே.பி. கூட்டணி மலர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்கவில்லை.''இனிமேல் பி,ஜே.பி.யுடன் கூட்டணியே வைக்க மாட்டேன்'' என்று சத்தியம் செய்த இந்த நம்பிக்கை துரோகிக்குத் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் சில சமுதாயத் துரோகிகள் ஊன்உறக்கமின்றி, வெட்கமுமின்றி தேர்தல்களப் பணியாற்றினர் இந்த சுயநலவாதிகள். இப்போது முகத்தை எங்கே வைத்து கொள்ளப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.நரேந்திர மோடியின் தமிழக வருகை முஸ்லிம், கிருத்துவ, ஒடுக்கப்பட்ட மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி அவனது சொந்த மாநிலத்தில் வேண்டுமானால் சகல பாதுகாப்புடன் சுகமாக இருக்கலாம் ஆனால் சமூக நீதி மற்றும் விழிப்புணர்வுள்ள முஸ்லிம் இயக்கங்களை கொண்டுள்ள தமிழகத்திற்கு வர இருக்கும் நரேந்திர மோடிக்கு இங்கு எப்படிப்பட்ட வரவேற்பு(?) இருக்கும் என்பது காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் தெரியாததல்ல.ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் கோரச் சாவுக்கு காரணமானவனை புன்னகையுடன் தமிழக மண்ணில் கால் பதிக்க எந்த உணர்வுள்ள மனிதனும் அனுமதிக்க மாட்டான். அதை மீறி மோடி வந்தால் இந்திரா காந்தி தமிழகத்திற்கு வந்த போது தி.மு.க. தொண்டர்கள் எந்த வரவேற்பை அளித்தார்களோ அதை, மோடிக்கு கொடுக்க தமிழர்கள் தயங்க மாட்டார்கள். எனவே மோடியை தமிழகத்திற்கு வர தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.பாதுகாப்பு காரணங்களுக்காக அரசியல் தலைவர்களுக்கு சில இடங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது புதிதல்ல. எனவே நரேந்திர மோடியை தமிழகத்திற்கு அனுமதிக்கச் செய்வது அமைதியுடன் இருக்கும் தமிழகத்தில் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசும், காவல்துறையும் உணர வேண்டும். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பாசிச ஆதரவாளர்கள் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்களா?
நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்
மோடியின் தமிழக வருகை! பரவுகிறது பதற்றம்!!
Labels:
Thamilagm