இன்டர்நெட் குற்றங்களைத் தடுக்க சவூதியில் புதிய சட்டம்
ரியாத்: தீவிரவாதம், மோசடி, ஆபாசப் படம், அவதூறுச் செய்திகள், மத கோட்பாடுகளுக்கு முரணான செய்திகளை வெளியிடுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு இணையதளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சவூதி அரேபிய அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பச் சட்டம் 16 பிரிவுகளைக் கொண்டதாக உள்ளது. இச்சட்டத்தின் கீழ் இணையதளத்தை தீவிரவாத செயல்களுக்காக பயன்படுத்துவோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10.3 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும்.
பண மோசடி, நிதி முறைகேடு, தனி நபர்களின் வாழ்க்கையில் குறுக்கீடு செய்ய இணையதளத்தைப் பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1.33 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்படும்.
இந்த புதிய சட்டத்தின் கீழ் மத மற்றும் சமூக தகவல்களைப் பரிமாறுவது மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை கொண்டு வரப்பட்டுள்ளது.
பொதுச் சட்டத்ைத மீறுவோர், மத கோட்பாடுகளுக்கு முரனாண செய்திகளை வெளியிடுவோருக்கு இச்சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறை மற்றும் 8 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் ஆபாசப் படங்களையும், செய்திகளையும், தகவல்களையும் வெளியிடுவோருக்கும் இதே அளவிலான தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
இந்தச் சட்டத்தின் கீழ் முதன் முதலில் சவூதி அரேபியாவைச் ேசர்ந்த பிளாக்கர் அகமத் பெளத் அல் பர்ஹான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது பிளாக்கில், சவூதி அரேபிய சிறையில் வாடும் அரசியல் கைதிகள் குறித்து தான் எழுதியதற்காக அரசு தன்னைக் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை தவறாக உபயோகப்படுத்துவதைத் தடுக்கவும், தீவிரவாத செயல்களுக்கு அது துணை போவதைத் தடுக்கவுமே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.