லிப்ஸ்டிக்கால் அதிகரிக்கும் மார்பகங்கள் அளவு!

லண்டன்: அதிக அளவில் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மார்பகங்களின் அளவு அதிகரித்து வருவதாக பிரிட்டிஷ் ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும் குடிப் பழக்கமும் மார்பகத்தின் அளவை அதிகமாக்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த இரு நூற்றாண்டுகளில் பிரிட்டன் பெண்களின் சராசரி மார்பக அளவு அதிகரித்துவிட்டதாகவும் இதற்கு குடியும் லிப்ஸ்டிக்கும் வேறு சில சுற்றுச்சூழல் விஷயங்களுமே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.மார்பக அளவை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன் ஆஸ்ட்ரோஜென்.வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் ஆஸ்ட்ரோஜென் சுரப்பது அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.ஆஸ்ட்ரோஜென் அளவுக்கு அதிகமாக சுரந்தால் மார்பக புற்று நோய் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு பாலுட்டுவதால் ஆஸ்ட்ரோஜென் அளவு குறைகிறது. ஆனால், குறைந்த அளவில் குழந்தை பெறுவோருக்கு தாய்ப்பால் மூலம் ஆஸ்ட்ரோஜென் வெளியேறுவதற்கான சாத்தியம் குறைவு என்பதால் அவர்களுக்கே மார்பக அளவு அதிகமாகிறது. அதிக அளவில் புற்று நோயும் தாக்குகிறது.இது தவிர செயற்கையான ஆஸ்ட்டோரஜனாலும் மார்பக அளவு அதிகரித்து வருகிறது. ஜெனோ-ஆஸ்ட்ரோஜன்கள் எனப்படும் செயற்கையான இந்த ரசாயனம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் (பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில்) காணப்படுகிறது. மேலும் லிப்ஸ்டிக்களிலும் இந்த ரசாயனம் உள்ளது.இவையும் மார்பக அளவை பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தோடு குடிப்பழக்கமும் சேர்ந்துவிட்டால் அளவு மேலும் பெரிதாகிவிடுகிறது என்கிறது அந்த ஆய்வு.ஆஸ்ட்ரோஜன் ஹார்மோனை சிதைத்து உடலில் இருந்து வெளியேற்றும் முக்கிய வேலையை செய்வது கல்லீரல் தான். ஆனால், குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்படுவதால் ஹார்மோனின் அளவு உடலில் குறைவது பாதிக்கப்படுகிறதாம்.