விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்ததற்காக இந்தியர்கள் 200 பேரை ஷார்ஜா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைதாகியுள்ள அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் நிஜாமாபாத், அடிலாபாத் மற்றும் கரீம்நகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதை, ஆந்திர சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமது சபீர் அலி உறுதி செய்துள்ளார்.
இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்க்க மாநில அரசுக்கு என்று சில வரைமுறைகள் உள்ளதாகச் சொன்ன அவர், இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், கைதானவர்களை விடுவிக்க விரந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
-- MSN Tamil
-- MSN Tamil