ஈராக்கில் இருந்து ஆஸி. படை விலகல்

ஈராக்கில் இருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ள ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது.
முதல்முறையாக அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், அந்நாட்டு வெளியுறவுத் துறையிடம் இதனை தெரிவித்ததாக, மெல்போர்ன் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி இவ்வாண்டு ஜூன் மாதத்திற்குள் ராணுவத்தின் 550 பிரிவுகள் விலக்கிக் கொள்ளப்படும் என்றும், இதனால் ஆஸ்திரேலிய- அமெரிக்க உறவுகள் பாதிக்காது என்றும் ஸ்டீபன் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் சீரமைப்புப் பணிகளுக்கான உதவிகள் தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைசிடம் அவர் உறுதியளித்துள்ளார்.

msntamil.com